Published:Updated:

கல் மேல் எழுத்து!

கல் மேல் எழுத்து!

கல் மேல் எழுத்து!

கல் மேல் எழுத்து!

Published:Updated:

ந்தீப், சஞ்சய் இருவரும் ஒரு பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.இருவரும் நல்ல நண்பர்கள் எனினும், பேசிக்கொண்டே போகிறபோது ஏதோ ஒரு கருத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து, வாக்குவாதம் ஏற்பட்டது.

சஞ்சய் திடீரென கோபம் கொண்டு, 'ஏய் முட்டாள், உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?’ என்று கூறி, பளார் என்று சந்தீப்பின் கன்னத்தில் அறைந்தான். சந்தீப் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் கண்கள் கலங்கின. நண்பனிடமிருந்து சற்றே விலகிச் சென்று, பாலைவன மணலில் உட்கார்ந்து மனம் விட்டு அழுதான். பின்பு, 'இன்று என் பிரியமான நண்பன் சஞ்சய், என்னை பலமாக அடித்துவிட்டான். அவன் கோபத்தில் இவ்வாறு செய்தது சரியல்ல!’ என்று மணலில் விரலால் எழுதிவிட்டு, எழுந்து மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். இதைப் படித்த சஞ்சய், தன் செயலுக்காக வருந்தினான். ஆனாலும்் நண்பன் சந்தீப்பிடம் மன்னிப்பு கேட்க, அவன் ஈகோ இடம் தரவில்லை.

கல் மேல் எழுத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே நடந்தனர். வழியில், ஒரு பாலைவனச் சோலையை அடைந்தனர். அங்கு நின்ற ஈச்ச மரங்களில் பழுத்திருந்த பழங்களைக் கொண்டு், தங்கள் பசியைத் தணித்துக்கொண்டார்கள். அருகில் இருந்த தெளிந்த நீருற்று அவர்களின் தாகத்தைத் தணித்தது. பின்பு, அருகில் இருந்த ஒரு நீர்த் தேக்கத்தில் சந்தீப் குளிக்க விரும்பி, அதனுள் இறங்கினான். அது புதைகுழி போல் அவனை உள்ளே இழுக்க, 'உதவி’, 'உதவி’ என அலறினான். சஞ்சய் உடனே ஓடி வந்து, சந்தீப்பின் கைகளை இறுகப் பிடித்து, அவனை மேலே இழுத்துக் காப்பாற்றினான். நன்றி பொங்க நண்பனைத் தழுவிக் கொண்டான் சந்தீப். பின்னர் இருவரும் நிழலில் படுத்து, தங்களைச் சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.

இளைப்பாறிக்கொண்டிருந்த நேரத்தில், சந்தீப் ஒரு சிறு கல்லை எடுத்து அங்கேயிருந்த பாறையில், 'இன்று என் நண்பன் சஞ்சய் என் உயிரைக் காப்பாற்றினான். நன்றி!’ என்று செதுக்கினான். அதைப் பார்த்து சஞ்சய் பெருமகிழ்ச்சி கொண்டான். கூடவே, ''நான் உன்னை அடித்ததை மண்ணில் எழுதினாய். ஆனால், நான் உன்னைக் காப்பாற்றியதைக் கல்லில் செதுக்கி யுள்ளாய். ஏன் இப்படி?'' என்று கேட்டான்.

''தீயவற்றை உடனுக்குடன் மறந்துவிட வேண்டும், மன்னித்து விடவேண்டும் என்பது பெரியோர் வாக்கு. எனவேதான், நீ என்னை அடித்ததை மண்ணில் எழுதினேன். அது பாலைவனக் காற்றில் மறைந்துவிடும். நல்லவற்றை மறக்காமல் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். எனவேதான், அதைக் கல்லில் பொறித்தேன்'' என்றான் சந்தீப்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று!

-டி.எஸ்.என்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism