Published:Updated:

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

Published:Updated:

சொக்கநாதருக்கு புட்டுத் திருவிழா....

துரை மாவட்டம், ஆரப்பாளையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் புட்டுதோப்பு என்ற இடத்தில் ஸ்ரீபிட்டு சொக்க நாதர்; திருக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 63வது திருவிளையாடல் நடந்த தலம் இது என்கிறார்கள்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு வருடமும், ஆவணி மற்றும் ஐப்பசி   மாதங்களில், சிவனார் பிட்டுக்காக மண் சுமந்து, பாண்டிய மன்னனிடம் பிரம்படிபட்டு நிகழ்த்திய திருவிளையாடல் வைபவம் இங்கே கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அருளும் சொக்கநாதர்  இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பார். அன்று, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிட்டு பிரசாதம் சகல நோய்களையும் நீக்கும் வல்லமை கொண்டது என்பது நம்பிக்கை. இந்த வருடமும் கடந்த நவம்பர் 6ம் தேதியன்று இந்த வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் சிவனார் தந்த அற்புத தரிசனம், இங்கே உங்களுக்காக...

- படங்கள்: ம.நிவேதன்

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

'சக்தி’ அவதாரங்கள்!

சிவனாரிடம் உமையவளாகவும், ஸ்ரீநாராயணரிடம் லட்சுமிதேவியாகவும், பிரம்மனிடம் சரஸ்வதியாகவும் திகழ்கிறது ஆதிசக்தியின் அம்சம். அதுபோன்று சந்திரனிடத்தில் ரோகிணியாகவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமதேவனிடம் ரதிதேவியாகவும், அக்னியிடத்து சுவாஹாதேவியாகவும், யமனிடத்தில் சுசீலா நிருதியாகவும், மநுவிடம் சதரூபையாகவும் வசிஷ்டரிடம் அருந்ததியாகவும், கச்யபரிடம் அதீதியாகவும், அகத்தியரிடம் லோபாமுத்திரையாகவும், கெளதமரிடம் அகல்யையாகவும் திகழ்கிறது சக்தியின் அம்சம். அவளே குபேரனிடம் செல்வமாகவும், கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி என புண்ணிய நதிகளாகவும் திகழ்கிறாள்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

எனவே, பல திருநாமங்களில் திகழும் சக்தியை வணங்கிட, சகல தேவர்களின் அருளும் முனிவர்களின் ஆசியும் பெற்றுச் சிறக்கலாம்.

 - சு.நவீனாதாமு, பொன்னேரி

நெய் தீப வழிபாடு!

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஆத்தூர் திருத்தலத்தில், ஸ்ரீபெரியநாயகி அம்மையுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீமுக்தீஸ்வரர். சிவனாரின் லிங்கத் திருமேனியில்,

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

புடைப்பு ஒன்று காணப்படுவது இங்கு சிறப்பு. இதை, பிரம்மப் புடைப்பு என்பர். தொடர்ந்து 13 சோமவாரங்கள் (திங்கட்கிழமைகள்) சிவனாரைத் தரிசித்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்!

-  மீனா.சுவர்ணம், உடுமலைப்பேட்டை

விநாயகருக்கு ஏற்ற அர்ச்சனைகள்!

விநாயகப் பெருமானுக்கு மருத இலை கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், பிள்ளை பாக்கியம் உண்டாகும். அரச இலை கொண்டு அர்ச்சித்து வணங்கினால், எதிரிகள் தொல்லை ஒழியும். அகத்தி இலை கொண்டு வழிபட்டால், துயரங்கள் யாவும் நீங்கும். அரளி இலையால் கணபதியை அர்ச்சித்து வழிபட்டால், அன்பு பெருகும். உள்ளுக்குள் அமைதி நிலவும். வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்கினால், இன்பமாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.

வெள்ளெருக்கு கொண்டு அர்ச்சனை செய்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவர். கண்டங்கத்திரி இலையால் விநாயகரை அர்ச்சித்து வழிபட்டால், லட்சுமி கடாட்சம் பெருகும். அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல சம்பத்துகளும் கிடைத்து, இனிதே வாழலாம். மாதுளை இலையால் வழிபட்டால், புகழுடனும் மரியாதையுடனும் வாழலாம்.

- கே.விஜயா, சென்னை

கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

சோமன் என்றால் சந்திரன். பிறைசூடிய பெருமான் அல்லவா சிவனார்? அவரை திங்கட் கிழமைகளில் வழிபடுவது சிறப்பு. அதிலும் கார்த்திகை மாதத்து திங்கட்கிழமைகளில் வழிபடுவதால்,  பல நன்மைகள் வந்து சேரும்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

கார்த்திகை திங்கட்கிழமைகளில் அபிஷேகப் பிரியான பிறை சூடிய பெருமானை நினைத்து விரதம் இருந்து, அன்று மாலை கோயிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை தரிசித்து வணங்குவது சாலச்சிறந்தது. அன்றைய தினம் நாம் செய்யும் சிறப்பு பூஜைகளினால் மகிழ்ந்து, நாம் வேண்டும் வரங்களை இறைவன் விரும்பி அளிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதிலும் கார்த்திகை சோமாவாரத்தில் சிவனாருக்கு சங்காபிஷேகம் செய்வதும், அதைத் தரிசிப்பதும் பெரும் புண்ணியம்.

நாகப்பட்டினம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியான சிராங்குடி புலியூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் வரும் கார்த்திகை மாதம் 8ம் தேதி (நவம்பர் 24) அன்று காலையில் வேத பாராயணம் தொடங்கப்பட்டு, யாக சாலை பூஜைகளும், பிறகு தீபாராதனயும் நடைபெற உள்ளன. மீண்டும் மாலையில் ஹோமங்கள் தொடங்கப்பட்டு, தசதிரவிய அபிஷேகங்களுடன் கூடிய சிறப்பு 1,008 சங்காபிஷேகமும் நடைபெற உள்ளது. பக்தகோடிகள் யாவரும் பங்கேற்று

சங்காபிஷேகத்தை கண்டு களித்து சிவனருளைச் பெற்றுச்செல்லலாம்.

- பி.வி.சேதுராமன், புலியூர்

ஞாயிறுதோறும் உபந்நியாஸம்!

சென்னை பொழிச்சலூரில், ப்ளாட் நம்பர் 124, வெங்கடேஸ்வரா நகர், 3வது தெருவில் செயல்பட்டு வரும் ஆஸ்திக ஸமாஜம், கடந்த 15 ஆண்டுகளாக இந்து தர்மத்தையும், பக்தி மார்க்கத்தையும் பரப்பி வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக் கிழமை தோறும் மாலை 5 முதல் 7:30 மணி வரையிலும், சிறந்த  பண்டிதர்களால் ராமயணம், ஸ்ரீமத் பாகவதம், உபநிஷத்துகள், தேவிபாகவதம், நாராயணீயம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதலான தலைப்புகளில் தமிழில் உபந்நியாஸங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்மிக அன்பர்கள் இந்த உபந்நியாஸங்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

- ராமரத்தினம், சென்னை

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி 'சக்தி சபா’ சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism