Published:Updated:

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

Published:Updated:

? கடந்த சக்தி விகடன் இதழில், 'காந்திமதி கல்யாணம்’ கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன். அதில், நெல்லை கோவிந்தர் பற்றிய குறிப்பும் இடம்பெற்றிருந்தது. இந்த பெருமாளுக்கான கோயில், திருநெல்வேலியில் எங்குள்ளது?

- சி. பாபநாசம், கடலூர்

நெல்லை கோவிந்தர் குடியிருப்பது திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில்தான். ஸ்ரீநெல்லையப்பர் சந்நிதிக்கு இடப்புறத்தில், சயனக்கோலத்தில் தனிச்சந்நிதி கொண்டிருக் கிறார். இவரின் ஒரு திருக்கரம் சிவனாரை பூஜிப்பதுபோல் அமைந்துள்ளது.  இவரருகே திருமகள் இடம்பெறவில்லை. அரியையும் சிவனையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு, அடியார்களுக்கு பெரும் கொடுப்பினை என்றே சொல்லலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹலோ சக்தி

? கைவல்ய நவநீதத்தை விளக்கும் 'மனிதனும் தெய்வமாகலாம்’ தொடர் வெகு அற்புதம். இந்த ஞானநூலை அருளிய ஸ்ரீதாண்டவ மூர்த்தி ஸ்வாமிகளுக்கு அதிஷ்டானம் எங்கு உள்ளது?

- கே. ராஜேந்திரன், சென்னை- 44

ஸ்ரீதாண்டவமூர்த்தி ஸ்வாமிகள் கைவல்யம் (மேலான அனுபவம்) அடைந்த தலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் எனும் சிற்றூராகும். இங்குள்ள திருமடத்தில் விசாக நட்சத்திர திருநாள், அமாவாசை, பெளர்ணமி தினங்கள் மற்றும் குருவாரங்களில் 'கைவல்ய முற்றோதுதல்’ நடைபெறுகிறது.

? ஏதோ ஒரு திருத்தலத்தில், ஸ்ரீபைரவருக்கு நாய் பொம்மைகள் காணிக்கை அளிக்கப்படுகிறதாமே... அதுகுறித்த தகவல் தெரியுமா?

- வி.ராமநாதன், செங்கல்பட்டு

ஆந்திர மாநிலத்தில், நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் அமைந்துள்ள ராமகிரி தலம்தான் நீங்கள் குறிப்பிடுவது. இங்கே, பெரியதொரு பைரவர் ஆலயம் உள்ளது. அஷ்ட பைரவர்களையும் இங்கு தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தக்குளத்தின் படியில் அமைந்துள்ள சிங்கத்தின் வாயில் இருந்து வழியும் நீர் தீர்த்தக் குளத்தில் சேர்கிறது. அது எங்கிருந்து எப்படி வருகிறது என்பது எவருக்கும் தெரியாது. இங்குதான், பக்தர்கள் நேர்த்திக்கடனாக நாய் பொம்மைகளைச் சமர்ப்பிக்கிறார்கள்.

? சிவனாரின் வாகனமான நந்திதேவருக்கு திருக்கல்யாணம் நிகழும் என்றும், சிவனாரே அதை நடத்திவைப்பார் என்றும் கேள்வியுற்றேன். இந்தத் திருக்கல்யாணம் நிகழும் திருத்தலம் எது என்று தெரிந்துகொள்ளலாமா?

- வி.கார்த்திகா, வள்ளியூர்

சிலாத முனிவரின் மகனாகப் பிறந்த ஜப்பேசர், சிவனருளால் நந்திகணமாகும் பாக்கியம் பெற்றார். நந்திதேவருக்கு பட்டாபிஷேகம் நிகழ்வது திருவையாறு திருத்தலத்தில். அவரது திருக்கல்யாணம், ஸ்ரீஐயாறப்பர் முன்னிலையில் திருமழபாடி திருத்தலத்தில் நடைபெறும். இவரது திருக்கல்யாணத்தை முன்னிட்டு சப்தஸ்தான பல்லக்கு திருவிழா நடைபெறும். இந்த வைபவத்தில் திருவையாறு ஸ்ரீஐயாறப்பர் முதலாக ஏழு ஊர் மூர்த்திகள் கலந்துகொள்வது சிறப்பம்சம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism