Published:Updated:

புதிர் புதிது! - 17

ரெ.சு.வெங்கடேஷ், ஓவியம்: தமிழ்

புதிர் புதிது! - 17

ரெ.சு.வெங்கடேஷ், ஓவியம்: தமிழ்

Published:Updated:

ஞானநூல்களைத் தேடி ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் ஒருவர், தனது பயண வழியில் எதிர்பாராதவிதமாக அடர்ந்த வனத்துக்குள் சிக்கிக்கொண்டார். வனத்தில் இருந்து வெளியேறினால் மட்டுமே, அவர் தேடி வந்த ஞானநூல் அவருக்குக் கிடைக்கும். வனத்தில் இருந்து வெளியேற அவருக்கு நீங்கள்தான் உதவவேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

அருகிலிருக்கும் புதிர் படத்தைப் பாருங்கள். ஆராய்ச்சியாளர் அமர்ந்திருக்கும் பகுதியை மையமாகக் கொண்டு ஏழு வட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டத்திலும் ஒருபாதியில் குறிப்புகளும், மறுபாதியில் குறிப்புகள் தரும் விடைகளை நிரப்புவதற்கான சிறு வட்டங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள குறிப்புகளைப் படித்து, சரியான விடைகளைக் கண்டறிந்து, அந்தந்தக் குறிப்புகளின் போக்கிலேயே வட்டத்தின் மறு பாதியில் உள்ள சிறு வட்டங்களில் நிரப்புங்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள சிறு வட்டங்களில் ஒன்று  சிவப்பு வண்ணத்தில் திகழும். அதில் சிக்கும் எழுத்தே, ஆராய்ச்சியாளர் அடுத்த வட்டத்துக்குச் செல்வதற்கான நுழைவு எழுத்து. இப்படி, 7வது வட்டத்துக்குள் நுழைந்தபிறகு அங்கு கிடைக்கும் நுழைவு எழுத்தையும் சேர்த்து மொத்தம் ஏழு எழுத்துக்கள்! அந்த எழுத்துக்களே, வட்டத்துக்குள் இருந்தும், வனத்துக்குள் இருந்தும் வெளியேறுவதற்கான வழி! அந்த 7 எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தினால், ஆய்வாளர் தேடி வந்த ஞானநூலின் பெயர் கிடைக்கும்.

புதிர் புதிது! - 17

நீங்கள், ஆராய்ச்சியாளருக்கு உதவுவதுடன் ஞானநூலின் பெயரைக் கண்டறிந்து கீழ்க்காணும் கட்டங்களில் நிரப்பி அனுப்புங்கள்.

புதிர் புதிது! - 17

சிறப்புக் கேள்வி: விடையாகக் கிடைக்கும் ஞானநூல் குறித்து உங்களுக்குத் தெரிந்த சிறப்புத் தகவலை ஓரிரு வார்த்தைகளில் எழுதி அனுப்புங்கள்.

புதிர் புதிது! - 17

போட்டிக்கான விதிமுறைகள்:

இந்த இரு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 18.11.14.

விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இமெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன், புதிர் புதிது- 17, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

புதிர் புதிது! - 17
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism