Published:Updated:

'நினைத்தது பலித்தது..!’

புதுச்சேரி பூஜையில் வாசகி நெகிழ்ச்சி 151வது திருவிளக்கு பூஜை வி.ராம்ஜி

'நினைத்தது பலித்தது..!’

புதுச்சேரி பூஜையில் வாசகி நெகிழ்ச்சி 151வது திருவிளக்கு பூஜை வி.ராம்ஜி

Published:Updated:

''விளக்கு பூஜை என்றால், ஏதோ ஐம்பது அறுபது பேர் வந்து கலந்துகொள்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், சுமார் 500 பேர் வந்து, கோயிலையே நிறைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பெண்கள்... தீபங்கள்... ஒளிச்சுடர்கள்..! இதைக் காணும்போது, மனதின் அடியில் ஆழப் பதிந்திருக்கிற கவலைகளும் துக்கங்களும் நம்மிடம் இருந்து விலகி, அனைவரின் மனமும் லேசாகி விட்டதுபோல் உணர்கிறேன்' என்று உமா மோகன் பேச, அந்தப் பிராகார மண்டபமே கரவொலியால் அதிர்ந்தது.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து வழங்கும் திருவிளக்கு பூஜை, 4.11.14 அன்று புதுச்சேரி பெரியகாலாபட்டில் உள்ள ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் நடைபெற்றது.

'நினைத்தது பலித்தது..!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில்,  சிவனாருக்கு உகந்த பிரதோஷ நன்னாளில், கந்தக் கடவுளின் தலத்தில், அம்பிகையைத் துதிக்கும் விளக்கு பூஜையைச் செய்கிற உங்கள் அனைவர் வீடுகளிலும் சகல செளபாக்கியங்களும் சந்தோஷங் களும் பெருகும் என்பது உறுதி'' என்று உமா மோகன் சொல்ல, பெண்கள் நெகிழ்ந்து போனார்கள்.

''நூறு வருடம், ஆயிரம் வருடம் என முனிவர்களும் ஞானிகளும் யோகிகளும் தவம் செய்த தேசம் இது. அப்படி அவர்கள் பல வருடம் தவமிருந்து பெற்ற வரத்தையும் அருளையும் நம்மைப் போன்ற சாமானியர்கள் பெறுவதற்கு அதிகம் மெனக்கிட வேண்டியதில்லை. ஒன்றே ஒன்று மட்டும் செய்தால் போதும்; தினமும் காலையும் மாலையும் வீட்டில் தவறாமல் விளக்கேற்றுங்கள். ஞானியர் பெற்ற இறையருளையும் வரத்தையும் நீங்களும் பெறலாம்.

மனமுருகி வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்பார்கள். அதிலும், இப்படி எல்லோருமாக இணைந்து, விளக்கேற்றி வேண்டுகிற கூட்டுப் பிரார்த்தனையின்  வலிமையைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கூட்டுப் பிரார்த்தனையை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வளமுடன் வாழ்வீர்கள்!' என்றார் உமா மோகன்.

வெங்கடேச குருக்களுடன் பாலமுருகன் கோயிலின் சரவணன் குருக்களும் இணைந்து, பூஜையை சிறப்புற நடத்தினார்கள். கோயில் நிர்வாகத்தினரும், பூஜை பிரமாண்டமாக நடப் பதற்குப் பெரிதும் ஒத்துழைப்பைத் தந்தார்கள்.

'நினைத்தது பலித்தது..!’

''இவ்ளோ பெரிய கூட்டத்தைப் பார்த்ததும் நாமளும் விளக்குபூஜைல கலந்துக்கலாமேனு ஆசை வந்திருச்சு. அதன்படியே பூஜைல கலந்துக்கிட்டேன். மனசே நிறைஞ்சிடுச்சு. சக்திவிகடனுக்கு நன்றி. வேற எதுவும் சொல்லத் தெரியலை எனக்கு' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் வாசகி ஹரிப்ரியா.

''பூஜைல கலந்துக்கிட்டா பலன் கிடைக்கும்னு சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரை, இந்த விளக்குபூஜைல கலந்துக்கிட்டதையே பெரிய பாக்கியமா நினைக்கிறேன். எல்லாரோட வேண்டுதலும் நிறைவேறணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று உற்சாகம் பொங்கப் பேசினார் வாசகி வசந்தா கிருஷ்ணன்.

''கடவுளுக்கும் சக்திவிகடனுக்கும் நன்றி சொல்றதுக்காகத்தான் இந்த பூஜைல கலந்துக்கிட்டேன். திண்டிவனத்துல நடந்த விளக்குபூஜைல, 'என் மருமகளுக்குக் கரு உண்டாகணும். என் பையனுக்கு வாரிசு பிறக்கணும்’னு வேண்டிக்கிட்டேன். இப்ப என் மருமகள் உண்டாகியிருக்கா. இன்னும் எட்டு மாசத்துல நான் பாட்டியாகப் போறேன். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்க. நீங்க நினைச்சது நிச்சயம் பலிக்கும்'' என்று ஆனந்தக் கண்ணீர் பொங்கச் சொன்னார் திண்டிவனம் வாசகி பட்டரசி.

பூஜையில் கலந்துகொண்ட அனைவரின் வேண்டுதலையும் ஸ்ரீபாலமுருகன் நிச்சயம் ஈடேற்றித் தருவார்.

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism