Published:Updated:

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

Published:Updated:

பிரார்த்தனை பலன்கள்!

தையும் எதிர்பாராமல் பக்தி செய்வதுதான் விசேஷம் என்பார்கள் பெரியோர்கள். அதேநேரம், நாம் எதையும் வேண்டிக்கொள்ளாவிட்டாலும், நமது வழிபாட்டில் மகிழ்ந்து வரம் கொடுப்பதுதான் தெய்வத்தின் தன்மை!

அந்த வகையில், என்னென்ன வழிபாடுகளால் என்னென்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

நினைத்தது நிறைவேறும்...

அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபடுவதால், நினைத்தகாரியம் உடனே நிறைவேறும். அதேபோல், அம்மனுக்கு வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்டநாள் குணம் ஆகாமல் வாட்டும் பிணிகள், வெகுசீக்கிரம் அகலும்.

சகல செல்வங்களும் ஸித்திக்கும்...

சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு. அதாவது எலுமிச்சை, வெல்லம், அவல், மாதுளை, நெல், தேங்காய், பசும்பால்... இந்த ஏழு வகைப் பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

கல்வி - கலைகளில் சிறக்க...

குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும். அதேபோன்று, சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வ தாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

நல்ல வேலை கிடைக்கும்...

பிள்ளையாருக்கு 9 அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட்டால், தடைகள் நீங்கி வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2 நெய்விளக்குகள் ஏற்றி வழிபட்டாலும் விரைவில் வேலை கிட்டும்.

ஐயப்பனை மனதார வணங்கி வழிபட்டால், வேலை இல்லாதவர்க்கு வேலையும், குடும்பத்திலுள்ள அனைத்துவிதமான பிரச்னைகளும் படிப்படியாகத் தீரும். மேலும், 60 வயதைக் கடந்த தம்பதிக்கும் தட்சணையும், துப்புரவு பணியாளர்களுக்கு துணிமணிகளும் வழங்கினால் நல்ல வேலை வாய்ப்பு வாய்க்கும்.

- ஐ.எஸ்.ரமணி, சென்னை

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

அஷ்ட லிங்க தரிசனம்!

ஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகில் உள்ளது கூனஞ்சேரி. இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீகயிலாசநாதர். அம்பாள் ஸ்ரீசெளந்தர்யநாயகி.

சுமார் 700 வருடங்கள் பழைமை வாய்ந்த தலம் இது.  மன்னர் ஒருவர் சாபத்துக்கு ஆளாக, அதன் விளைவாக அஷ்ட கோணலாகப் பிறந்த ராஜகுமாரனின் குறையைத் தீர்த்தருளினார் ஈசன் என்கிறது ஸ்தல வரலாறு. இங்கே, அஷ்ட லிங்கங்கள் அமைந்திருப்பது சிறப்பு. அஷ்டமி நாளில், இங்கு வந்து அஷ்ட லிங்கங்களையும் தரிசித் தால், நரம்பு உபாதைகள் நீங்கும்; தீராத நோயும் தீரும்; உடல் ஊனம் மட்டுமின்றி, மன ஊனமும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்!  

- மீனா.சுவர்ணம், உடுமலைப்பேட்டை

ஹைகோர்ட் மகாராஜா ஆலயம்!

பெயரே விசேஷமாக இருக்கிறது அல்லவா? இந்த ஸ்வாமியின் திருக்கதையும் விசேஷமானதுதான். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆறுமுகமங்களம், தென்கலம்புதூர், சீவலப்பேரி, தாழையூத்து ஆகிய ஊர்களில் இந்த ஸ்வாமிக்கு பழைமையான ஆலயங்கள் உண்டு.

நெல்லை மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஊர் ஏரல். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகமங்களம். இங்குள்ள சுடலைமாட ஸ்வாமி கோயிலின் பூசாரி மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. நிரபராதியான அவரை விடுவிக்க திருவுளம் கொண்ட சுடலைமாட ஸ்வாமி, வழக்கை விசாரித்த நீதிபதியின் கனவில் உண்மையை உணர்த்தினாராம். அத்துடன், மறுநாள் விசாரணையின்போது அந்த பகுதிக்கே புதியவரான ஒருவர் வந்து சாட்சி சொல்ல, பூசாரிக்கு விடுதலை  கிடைத்தது. ஆனால், அதன் பிறகு அந்த புதியவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே, சாட்சி சொல்ல வந்தது ஸ்ரீசுடலைமாட ஸ்வாமியே என்று உறுதியாக நம்பிய மக்கள் அவருடைய கோயிலை, 'ஹைகோர்ட் மகாராஜா ஆலயம்’ என்றே அழைக்க துவங்கினார்கள்.

இதன் பிறகு, ஆறுமுகமங்களம் ஆலயத்தில் சத்தியவாக்கு கேட்கப்பட்டு, அங்கிருந்து பிடிமண் எடுத்து வந்து, மற்ற மூன்று  கோயில்கள் உருவான துடன், அவையும் 'ஹைகோர்ட் மகாராஜா கோயில்’ என்றே பெயர் பெற்றன.

- இரா.கணேசன், சேலம்

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

'ருத்ராட்ச’ தகவல்கள்...

ருத்ராட்சங்களில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்று கெளரிசங்கரம்.

ஸ்ரீபரமேஸ்வரனும் ஸ்ரீபார்வதி தேவியும் சேர்ந்திருப்பது போன்று, இரண்டு ருத்ராட்சங்கள் ஒன்றாக இணைந்த வடிவில் காணப்படும் இந்த ருத்ராட்சம், விசேஷமானது என்பார்கள்.

அதேபோன்று 'கண்டிகை’ என்று எதைச் சொல்வார்கள் தெரியுமா? பல ருத்ராட்சங்கள் ஒன்றுசேர்ந்த மாலைக்கு 'கண்டிகை’ என்று பெயர். ருத்ராட்ச மாலை கொண்டு ஜபிக்கும் பக்தர்கள் அறிய வேண்டிய ஒரு தகவலும் உண்டு.

அதாவது, மோட்சம் வேண்டுவோர் ருத்ராட்சங்களை மேல் நோக்கியும், போக வாழ்வு விரும்புவோர் ருத்ராட்சங்களை கீழ் நோக்கியும் தள்ளி ஜபிக்கவேண்டும்.

- வி.இராமலக்ஷ்மி, திருநெல்வேலி

அழியா புகழ் தரும் அபிஷேகம்!

னுதினமும் தேவி சக்தியை வழிபடும் அம்பாள் பக்தரா நீங்கள்? எனில் உங்கள் கவனத்துக்கு சில சிறப்பு தகவல்கள்...

* வில்வ இலைகளால் தேவியைப் பூஜிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சந்தோஷமாக இருப்பார்கள். கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து சக்திக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.

* ஸ்ரீலட்சுமிதேவிக்கும், ஸ்ரீசரஸ்வதி தேவிக் கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், நித்தியத்துவம் கிடைக்கும்; அழியா புகழ் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.

* ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவன் குபேரன் ஆவான். பூக்களால் தேவியை பூஜிப்பவருக்கு கயிலாய வாசம் கிடைக்கும்.

- புரசை சிவன், சென்னை

பிருந்தாவன நாயகனுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம்!

கல கல்யாண குணங்களும் நிறைந்தவரான ஸ்ரீமந் நாராயணன், சென்னை தாம்பரத்தை அடுத்து வஞ்சுவாஞ்சேரி எனும் கிராமத்தில் (படப்பைக்கு அருகில் உள்ளது), ஸ்ரீகிருஷ்ணனாக கோயில்கொள்ள போகிறார்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

வடஇந்திய கட்டட பாணியில் தட்சிண பிருந்தாவனமாக உருவாகியுள்ள இந்த ஆலயத்துக்கு... நிகழும் ஜய வருடம், கார்த்திகை மாதம் 24ம் தேதி (10.12.14), புதன் கிழமை அன்று காலையில் 6:30 மணிக்கு, நூதன ஆலய விமான அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.

பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீகிருஷ்ணனின் பரிபூரண அருளைப் பெற்றுச் செல்லலாம்.

-  ஸ்ரீமஹாதேவி சத்சங்கம், சென்னை59

ஐயப்பனுக்கு 15-ம் ஆண்டு உத்ஸவம்!

சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்திருக் கிறது ஸ்ரீவிளையாட்டு விநாயகர் ஆலயம். இந்தக் கோயிலின் அருகில், ஸ்ரீஹரிஹர புத்ரன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பாக, ஸ்ரீஹரிஹர புத்ர ஸ்வாமி 15-ஆம் ஆண்டு  சம்வத்ஸரோத்ஸவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த விழா வைபவம்,  நிகழும் ஜய வருடம், கார்த்திகை 18ம் நாள் வியாழக் கிழமை (டிசம்பர்  - 4), கார்த்திகை 19-ம் நாள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் - 5) என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் கோ பூஜையுடன் துவங்கி, புஷ்பா பிஷேகம்,  திருவிளக்கு பூஜை, தொட்டில் உற்சவம், பக்தி இன்னிசைக் கச்சேரி, இரண்டாம் நாளன்று அன்னாபிஷேகம், யானையின் மீது ஸ்ரீஐயப்பன் பவனி, திருவாபரணப்பெட்டி ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகள் என நிகழும் இந்த விழா வைபவங்களில் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீவிளை யாட்டு விநாயகர், ஸ்ரீஹரிஹர புத்ரனின் பேரருளை பெற்றுச் செல்லலாம்.

- ஸ்ரீஹரிஹரபுத்ரன் பக்தர்கள் சேவா சங்கம், சென்னை-18

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி 'சக்தி சபா’சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism