
இறைவழிபாட்டில் சங்குக்கு பெரும்பங்கு உண்டு. வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த வரிசையில் தேவர்களும் அசுரர்களும் வழிபட்ட சங்கு வடிவிலான சிவாலயங்கள் குறித்த தகவல்களும் உண்டு. இந்த ஆலயங்களை சங்கீஸ்வரங்கள் என்பார்கள்.
கும்பகோணத்தை அடுத்த பழையாறையில் சங்கீச்சரம் எனும் ஆலயம் இருந்ததை ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு கூறுகிறது. கோயம்புத்தூரில் கோட்டை சங்கமேசுவரர் ஆலயம் கல்வெட்டுக்களில் சங்கீசுவரம் என்றே குறிக்கப்பட்டுள்ளது. திருக்குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயமும் சங்கு கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது சங்கு வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேபோன்று, துதிக்கையில் சங்கு ஏந்திய விநாயகரை சங்குபாணி விநாயகர் என்பார்கள். காஞ்சிபுரத்தில் ஸ்ரீசங்கு பாணி விநாயகர் அருள்புரியும் திருக்கோயில் உள்ளது.
- பூசை.அருண வசந்தன்