Published:Updated:

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

Published:Updated:
ஹலோ சக்தி

? செல்வம் நிலைத்திருக்கவும், குடும்ப ஒற்றுமைக்கும் வீட்டில் எப்போது குபேர வழிபாடு செய்யலாம்? என்ன நைவேத்தியம் செய்யவேண்டும்?

- சாய் கிருஷ்ணா, சின்ன திருப்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குபேரன் பிரம்மாவின் மானஸ புத்திரரான புலஸ்தியரின் மகன். இவரே நவநிதிகளுக்கும் அதிபதி! குபேர வழிபாட்டை வெள்ளிக்கிழமை, பெளர்ணமி போன்ற தினங்களில் செய்யலாம். இதை லக்ஷ்மிகுபேர வழிபாடாகச் செய்வது மிகவும் விசேஷம். லக்ஷ்மிகுபேர படத்துடன் குபேர யந்த்ரத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் விளக்கேற்றி சாம்பிராணி தூபம் காட்டவேண்டும். வெள்ளிக்கிழமை மற்றும் பெளர்ணமி தினங்களில், லக்ஷ்மி வாசம் செய்வதாகப் போற்றப்பெறும் நெல்லிக்கனியும் வில்வமும் சமர்ப்பித்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட, செல்வம் சேரும்; குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்கும்.

? ஸ்ரீசாயி பிரசாதம் தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ஸ்ரீசாயிபாபாவுக்கு என்றே பிரத்தியேகமாக எதுவும் விரதம் இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்த விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது?

- சிவராமன், பெங்களூர்-57

ஹலோ சக்தி

ஸ்ரீசாயிபாபாவை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் பலன் தரக்கூடியது. தொடர்ந்து 6 வியாழக்கிழமை, காலையில் ஸ்நானம் செய்துவிட்டு, அருகில் உள்ள சாயிபாபா கோயிலுக்குச் சென்று பாபாவை வணங்கி பிரார்த்தித்துக்கொண்டு விரதத்தைத் தொடங்கவேண்டும். பின்னர் வீட்டுக்கு வந்து, பாபாவின் சத்சரித பாராயணம் மற்றும் பாபாவுக்குப் பிரியமான ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யலாம். இரவு, முடிந்தால் மீண்டும் ஒருமுறை பாபா கோயிலுக்குச் சென்று வணங்கி வரலாம். இல்லையென்றால், வீட்டிலேயே பாபா படத்துக்கு தூப தீபம் காட்டி நமஸ்கரித்துவிட்டு, அன்றைய விரதத்தை நிறைவு செய்யலாம். இரவு ஒருவேளை மட்டும் உணவு அருந்தலாம். வயதானவர்களும் சிறுவர்களும் இரவு வரை விரதம் இருக்க முடியாத நிலையில், பால் மற்றும் பழங்களை உண்ணலாம்.

? இடி இடிக்கும்போது நாம் 'அர்ஜுனா, அர்ஜுனா’ என்று சொல்கிறோம். ஆனால், எங்கள் தாத்தா ஒரு  சுலோகமே சொல்லுவார். அந்த சுலோகத்தை எங்களுக்குத் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்குமே?

- ஸ்ரீலதா பாஸ்கரன், வந்தவாசி

உங்கள் தாத்தா சொல்லியதாக நீங்கள் கேட்டிருக்கும் அந்த சுலோகமும்கூட, அர்ஜுனனின் பல்வேறு பெயர்களைக் கொண்டதாகவே அமைந்திருக்கிறது. அந்த சுலோகம் இதுதான்:

அர்ஜுன: பல்குன: பார்த்த: கிரிடீ ஸ்வேதவாஹன:
பீபத்ஸு: விஜய: க்ருஷ்ண: ஸவ்யஸாசீ: தனஞ்சய:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism