Published:Updated:

'நூறு பூஜை பலன் நிச்சயம்!’

152-வது திருவிளக்கு பூஜைதிருவாரூர் பூஜையில் வாசகி பூரிப்பு!

'நூறு பூஜை பலன் நிச்சயம்!’

152-வது திருவிளக்கு பூஜைதிருவாரூர் பூஜையில் வாசகி பூரிப்பு!

Published:Updated:

''ஒரு தீக்குச்சியைக் கிழித்து நெருப்பை உண்டு பண்ணினால், பெண்கள் விளக்கேற்றப் போகிறார்கள் என்றும், சமையல் செய்து வீட்டாரின் பசியை ஆற்றப் போகிறார்கள் என்றும் அர்த்தம். ஆனால், ஒரு ஆண் தீக்குச்சியைக் கிழித்தால், அதை நெருப்புப் பற்ற வைத்துவிட்டதாகத்தான் சொல்வார்கள். பொறுமையும் நிதானமும் பெண்களுக்கு இரண்டு கண்கள். எனவே, பொறுமையுடனும் நிதானத்துடனும் திகழ்கிற பெண்களுக்குத்தான் விளக்குபூஜையைக் கொடுத்திருக்கிறது, இந்து மதம்'' என்று புலவர் ரெ.சண்முகவடிவேல் பேசினார். 'அட’ என்று வியந்து கேட்டுக் கொண்டிருந்தது கூட்டம்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, திருவாரூர் பவித்திர மாணிக்கத்தில் உள்ள ஸ்ரீருத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்றது. சக்திவிகடனின் 152வது விளக்கு பூஜை இது.

'நூறு பூஜை பலன் நிச்சயம்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மற்ற பூஜைகளைவிட, பிரார்த்தனைகளைவிட, கூட்டாகச் சேர்ந்து வழிபடுவதற்கு அதிகப்படியான அதிர்வுகளும், கூடுதலான பலன்களும் உண்டு. எனவே, இங்கே வந்து திருவிளக்கு பூஜையில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவருமே நலமுட னும் வளமுடனும் வாழ்வீர்கள் என்பது உறுதி!'' என்று புலவர் சண்முகவடிவேல் பேச, ரசித்துக் கைதட்டினார்கள் வாசகிகள்.

சீனிவாசன் குருக்கள், ஸ்ரீராம் குருக்கள், மணி கண்ட குருக்கள் ஆகியோர் விளக்குபூஜையை சிறப்புற நடத்திக் கொடுத்தார்கள். கோயில் நிர்வா கிகள், பூஜைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

''இப்படி மனசுக்கு நிறைவானதொரு விளக்கு பூஜையில் இதுவரை நான் கலந்துக்கிட்டதே இல்லை. இதான் முதல்முறை'' என்று சொல்லி நெகிழ்ந்தார் வாசகி சுமதி. ''சக்திவிகடனோட ஒவ்வொரு நிகழ்வையுமே ஆன்மிகத்துக்கும் இந்து மதத்துக்கும் செய்யற சேவையாத்தான் பாக்கறேன். பக்கத்துல அத்திப்புலியூர்னு ஒரு ஊரு. அந்தக் கோயில் பற்றி சக்திவிகடன்லதான் 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில எழுதி, நிதிகள் குவிஞ்சு, இப்ப கோயில்ல கும்பாபிஷேகமும் நடந்துது. தீபத் திருவிழா நடக்கற கார்த்திகை மாசத்துல, இந்த விளக்குபூஜை நடந்திருக்கு. அதனால நூறு விளக்குபூஜைல கலந்துக்கிட்ட பலன் நமக்கு உண்டு'' என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் வாசகி இந்திராணி. ருத்ரகாளி கருணையால், அந்த பலன் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

- வி.ராம்ஜி, படங்கள்: க.சதீஷ்குமார்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism