Published:Updated:

புதிர் புதிது! - 19

ரெ.சு.வெங்கடேஷ், ஓவியம்: தமிழ்

ன்மிகக் கதைகள் சொல்வதென்றால் சாம்பு மாமாவுக்குக் கொள்ளை இஷ்டம்! அன்றைக்கு ஸ்ரீஅனுமனின் லீலைகளை சுவாரஸ்யமாக விவரித்தார்...

‘‘சிறு வயதில் அனுமன் மிகவும் சுட்டி! ஒருநாள்... அதிகாலை வேளை! வானத்தில் உதித்த சூரியனை, ஏதோ பழம் என்று நினைத்து, அதைப் பறித்துத் தின்னும் ஆவலில், ஆகாயத்தில் எழும்பிப் பறக்க ஆரம்பித்தார் அவர். பாலகனின் இந்த அசாத்திய துணிச்சலை இந்திரனால் பொறுக்கமுடியவில்லை. தனது வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கினான். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து பூமியில் விழுந்தார் அனுமன். இதனால் அவரது இரண்டு கன்னங்களும் வீங்கிப்போய்விட்டன. இதையொட்டியே அவருக்கு ஹனுமன் என்று பெயர் உண்டானது. ‘ஹனு’ என்றால் கன்னம் என்று பொருள். அதேபோல், அஞ்சனையின் மகன் என்பதால், அவருக்கு ஆஞ்சநேயர் என்றும் ஒரு பெயர் உண்டு’’ என்று விவரித்தவர், சிறுவர்களுக்கு ஒரு புதிரும் போட்டார்.

புதிர் புதிது! - 19

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘ஹனுமன்கிற பெயருக்கு இந்திரனும், ஆஞ்சநேயர் என்கிற பெயருக்கு அஞ்சனாதேவியும் காரணம்னு தெரிஞ்சுக்கிட்டீங்க இல்லியா? அதேபோல, அவருக்கு ‘மாருதி’ன்னும் ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயருக்குக் காரணமானவர் யார்னு சொல்லுங்க, பார்க்கலாம்?’’

சிறுவர்கள் விடை தெரியாமல் விழிக்க... அவர்களிடம் ஒரு காகிதச் சுருளைக் கொடுத்து, பதிலைக் கண்டுபிடிப்பதற்கான சூட்சுமம் அதில் இருப்பதாகக் கூறிச் சென்றார் சாம்பு மாமா.

காகிதச் சுருளில் இருப்பதையே எதிர்ப்பக்கத்தில் பார்க்கிறீர்கள். அனுமனுக்குப் பிடித்த தாரக மந்திரம் நிரம்பிய கட்டம் ஒன்றும், ஐந்து குறிப்புகளும் அதில் உள்ளன.

புதிர் புதிது! - 19

குறிப்புகளுக்கான விடைகள், தாரக மந்திர அட்சரங்களுக்கு இடையே இடமிருந்து வலமாக, ஏறுமுகமாகவோ, இறங்குமுகமாகவோ ஒளிந்திருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து, கோடிட்டுக் காட்டுங்கள். பின்னர், ஒவ்வொரு விடையிலும் அடைப்புக்குள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தை மட்டும் தனியே எடுத்து ஒழுங்குபடுத்தினால், மாருதி என்ற பெயருக்குக் காரணமானவரின் பெயர் கிடைக்கும்.

அதை இங்கே கீழ்க்காணும் கட்டத்தில் எழுதி அனுப்புங்கள்.

புதிர் புதிது! - 19

சிறப்புக் கேள்வி: விடையாகக் கிடைக்கும் புராணக் கதாபாத்திரம் குறித்து உங்களுக்குத் தெரிந்த தகவல்களை ஓரிரு வரிகளில் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள்.

புதிர் புதிது! - 19

போட்டிக்கான விதிமுறைகள்:

இந்த இரு பக்கங்களையும் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 16.12.14.

விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன், புதிர் புதிது-19, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

புதிர் புதிது! - 19