Published:Updated:

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

Published:Updated:

சிந்தை மகிழ்விக்கும் 

சிவ நாமங்கள்! 

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீபத்தில் இணையத்தில் சில தகவல்களைத் தேடிக் கொண்டிருந்த போது அற்புதமான ஒரு விஷயம் கண்ணில் பட்டது. தெள்ளு தமிழில் துலங்கும் சிவபெருமானின் 1000 திருநாமங்களின் பட்டியலை தந்திருக்கிறார்கள். அத்துடன், 'இந்த தமிழ்ப்பெயர்களை அறிந்து உணர்ந்து, உச்ச‍ரித்து இறைவனின் திருவருளை நாடுங்கள். மேலும் இந்தத் தமிழ்ப் பெயர்களில் ஏதாவது ஒன்றை, பிறந்த குழந்தைக்கும் வைக்க‍லாமல்ல‍வா?' என்ற கருத்தும் கவனத்தை ஈர்த்தது.

சிவ திருநாமங்களில் சில, இங்கே உங்களுக்காக...

அழல்வண்ணன்

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

அழற்கண்ணன்

ஆழிசெய்தோன்

ஆழி ஈந்தான்

அழிவிலான்

ஐம்முகன்

ஐந்தாடி

ஐந்நிறத்தண்ணல்

எல்லோர்க்குமீசன்

எம்பெருமான்

ஏனக்கொம்பன்

ஏனங்காணான்

ஏனத்தெயிறான்

ஏனவெண்மருப்பன்

எண்குணன்

கயிலாயநாதன்

கழற்செல்வன்

கேடிலி

கேடிலியப்பன்

கேழல்மறுப்பன்

கேழற்கொம்பன்

கீற்றணிவான்

கணேசன், சென்னை-21

குறிப்பு: சிவனாரின் ஆயிரம் திருநாமங்களையும் விகடன் இணையதளத்தில் (www.vikatan.com) காணலாம்.  

அலங்கார விளக்கில் ஐயனின் திருமுகம்

சென்னை, தேனாம்பேட்டை நாட்டுமுத்து தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீவிளையாட்டு விநாயகர்

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

திருக்கோயில். இந்தக் கோயிலின் அருகில் ஸ்ரீஹரிஹர புத்ரன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பாக, கடந்த டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில், 15ம் ஆண்டு ஐயப்பன் உற்ஸவம் கோலாகலமாக நடந்தேறியது.

சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,ஸ்ரீஐயப்ப ஸ்வமிக்கு புஷ்பாபிஷேகம், அன்னாபிஷேகம், திருவிளக்கு பூஜை, பக்தி இன்னிசைக் கச்சேரி, தொட்டில் உற்ஸவம், யானையில் திருவீதியுலா என இரண்டு நாட்கள் நிகழ்ந்த இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக ஒரு சம்பவம்...

ஐயன் ஐயப்ப ஸ்வாமிக்குப் பின்புறம் ஸ்வாமியின் திருமுடிக்கு மேலாக வட்டவடிவில் அலங்கார தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. பூஜையின் ஊடே இதைக் கவனித்தபோது, இந்த தீபங்களின் ஒளி ஸ்வாமி ஐயனின் திருமுகம் போன்ற வடிவில் ஜொலிக்க, பக்தர்கள் சிலிர்த்துப் போனார்கள். அதுமட்டுமின்றி, இந்த தீபங்களின் ஒளி அவ்வப்போது பிறைசந்திர வடிவாகவும் ஜொலிக்க... 'பூஜைக்கு ஐயப்பன் நேரில் வந்தே அருள்பாலித்துவிட்டான். கூடவே அடியவர் வாவரும் வந்துவிட்டார்..!' என்று வியப்பும் திகைப்புமாக தரிசித்துச் சென்றார்கள் பக்தர்கள்.

பாலா,

சென்னை-18

கதகளி நடத்தினால்,

பிள்ளை பாக்கியம்!

கேரள மாநிலம் செங்கனூருக்கு அருகில் உள்ளது திருவல்லா கிராமம். இங்கு அமைந்துள்ள மகாவிஷ்ணு ஆலயம் வெகு பிரசித்தம்! இந்த மகாவிஷ்ணுவை, வல்லபர் என்று அழைக்கிறார்கள் பக்தர்கள்.

இங்கே உள்ள பெருமாளின் திருமுகத்தைத் தரிசிக்கும்போது அவரின் திருவடியைத் தரிசிக்க இயலாது; அதேபோல், திருவடி தரிசனம் செய்யும்போது, திருமுகத்தைக் காண இயலாது. அப்படியொரு அமைப்பில் உள்ளது கருவறை.

இன்னொரு சிறப்பு... இங்கே பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால், அர்ச்சகர்கள் அதை அணிந்துகொள்ளுதல் கூடாதாம்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு கதகளி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, விஷ்ணுவை வேண்டிக்கொண்டால், விரைவில் பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!

முத்து.இரத்தினம், சத்தியமங்கலம்

ஸ்ரீதுர்கையின் திருநாமங்கள்!

* பொதுவாக, சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் இருக்கும் ஸ்ரீதுர்கா தேவியை

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சிவதுர்கை, விஷ்ணு துர்கை என்று சொல்கிறோம். ஆனாலும், சில ஆலயங்களில் துர்கைக்கு தனிப் பெயர்களே இருக்கின்றன.

* கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில்

          குறுக்கதீஸ்வரி

* பட்டீஸ்வரம் கோயில் - பிரசன்ன வனமாலினி

* திருவொற்றீஸ்வரர் கோயில்  -அமிர்தாதினி

* மயிலை கபாலீஸ்வரர் - பஸ்பத்ரயாக்னி

* திருவான்மியூர் மருந்தீஸ்வரர் - போகதேஸ்வரி

* திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் - சர்வமயி.

  மல்லிகா அன்பழகன், சென்னை-78

நான்முக முருக தரிசனம்!

ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை முருகன் கோயில் வெகு பிரசித்தம்! இந்தக் கோயிலில், மாடப் பகுதியில் நான்கு முகமும் எட்டுத் திருக்கரங்களும் எட்டுக் கண்களும் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறார் நான்முக முருகக் கடவுள்.

தாமரை மலரை ஆசனமாகக் கொண்டு, நின்ற திருக்கோலத்தில், வலது கால் ஊன்றியும்

இடது காலை சற்று வளைத்தும் காட்சி தரும் இந்த முருகப் பெருமானை வணங்கினால், நம் சங்கடங்கள் அகலும்; வளமான வாழ்க்கை நிச்சயம் என்கின்றனர், பக்தர்கள்.

மீனா.சுவர்ணம், உடுமலைப்பேட்டை

மூன்று பெளர்ணமிக்குள்

பிரார்த்தனை நிறைவேறும்!

மதுரை, திருநகர் விநாயகர் கோயில் தெருவில், இரு கன்னிமார்களின் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயமான இதை 'ஆச்சி முத்தம்மன்’ ஆலயம் என்பார்கள்.  பல வருடங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தவம் செய்து சித்தி அடைந்ததால், அவரைக் குறிக்கும் வகையில், 'அச்சன் கோயில்’ என்றும் இந்தக் கோயிலை அழைக்கிறார்கள், பக்தர்கள்.  

இங்கே உள்ள ஆறரை அடி உயர சூலாயுதம் சிறப்புக்குரியது. கோயிலின் கொடிமரம் மூலிகைகளால் ஆனது என்கின்றனர். கன்னிப் பெண்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்களின் வேண்டுதலை மூன்று பெளர்ணமிக்குள் நிறைவேற்றித் தருவாள் ஆச்சி முத்தம்மன் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சு.இலக்குமணசுவாமி, மதுரை

முன்னோர் ஆசி தரும்

சூரியனார் கோயில்!

பீகாரில், கயாவில் உள்ள தட்சிணார்க்க மந்திர் எனும்  இடத்தில், சூரியனாருக்கான ஆலயம் உள்ளது. ஆதித்யன், வித்தியாசமான ஆடை அமைப்புடன் இடுப்பில் பெல்ட்டும், காலில் நீளமான பூட்ஸ் போன்ற காலணியும் அணிந்து காட்சி தருகிறார். 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு,  வாரங்கல் இளவரசர் பல திருப்பணிகள் செய்துள்ளார் எனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்குமாம். இங்கு வந்து, நீத்தார் கடன் செய்தால், முன்னோர் ஆசி கிடைக்கும்; சூரிய பகவானின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்!

வத்சலா சதாசிவன், சென்னை-64

பிள்ளை வரம் தரும் 'அமிர்தக் குடம்!’

ஈரோடு மாவட்டம், பவானியில் அமைந்துள்ளது ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலில் உள்ள அமிர்தக் குடம் விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அமிர்தக் குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, கோயிலை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

எஸ்.ஆறுமுகம், தேனி

ஆண்களுக்கு மட்டுமே அனுமதி!

மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் புறவழிச்் சாலையில், திருநகரில் (காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில்) கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. எல்லைத் தெய்வமாக இருந்து காத்தருள்கிறார் கருப்பண்ணசுவாமி. இந்த ஆலயத்தை 'கனி மாற்றுதல் கோயில்’ என்பார்கள்.

சூடம், ஊதுவத்தி ஏற்றி, பழங்களை கருப்பண்ணசுவாமியின் பாதத்தில் வைத்து, அவற்றில் சில பழங்களை எடுத்து ஆண்கள் உண்பார்கள். இந்தக் கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை.

இல.வள்ளிமயில், திருநகர்

ஸ்ரீவைணவ மாநாடு

ஸ்ரீவைணவ மகா சங்கம் சார்பில், வரும் 25.12.14 முதல் 30.12.14 வரை, சென்னை செளகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் உள்ள ஸ்ரீஉப்புட்டூர் ஆழ்வார் செட்டி ராமாநுசக் கூடத்தில் ஸ்ரீ வைணவ மாநாடு (89ம் ஆண்டு) மற்றும் ஸ்ரீவைணவ மாதர் மாநாடு (84ம் ஆண்டு) ஆகியவை நடைபெறுகின்றன.

இதில் விருது வழங்குதல், வைணவ அறிஞர்களின் சொற்பொழிவு, கச்சேரி ஆகியவை நடைபெறும்.

ஸ்ரீவைணவ மகா சங்கம், சென்னை-1

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism