Published:Updated:

154-வது திருவிளக்கு பூஜை! - திருப்பத்தூரில்...

‘மார்கழிப் பிறப்பு, சனிப்பெயர்ச்சி...அற்புதமான நாளில் விளக்குபூஜை!’வி.ராம்ஜி, படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

154-வது திருவிளக்கு பூஜை! - திருப்பத்தூரில்...

‘மார்கழிப் பிறப்பு, சனிப்பெயர்ச்சி...அற்புதமான நாளில் விளக்குபூஜை!’வி.ராம்ஜி, படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்

Published:Updated:

''குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட கோயில்களில், பாடல் பெற்ற ஸ்தலம் எனும் பெருமையும், பல புராணச் சிறப்புகளும் கொண்ட கோயில் இது'' என்று, ஆலயத்தின் சாந்நித்தியத்தில் இருந்தே பேச்சைத் துவக்கினார் பேராசிரியர் சுப்ரமணியன். சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்குபூஜை, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் எனப்படும் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தில், கடந்த 16.12.14 அன்று நடைபெற்றது. சக்திவிகடனின் 154வது விளக்குபூஜை இது. 

''இங்கே வந்து, பூஜையில் கலந்து கொண்டுள்ள பெண்கள் அனைவரும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இன்று முதல், உங்கள் அத்தனை துன்பங்களும் விலகப் போகின்றன!

இன்றைக்கு மார்கழி மாதம் துவங்கு கிறது. மகான்களும், முனிவர்களும், சித்தபுருஷர்களும் தபஸ் செய்யவும் இறைவனை வழிபடவும் உகந்த மாதமாக இந்த மார்கழியைச் சொல்லியிருக் கிறார்கள். அப்பேர்ப்பட்ட புனிதமான மார்கழியின் பிறப்பில் நாம் விளக்கு பூஜைக்காக ஒன்றுகூடியிருக்கிறோம். அதுமட்டுமா... அம்பிகைக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில், சிவகாமி அம்பாளின் சந்நிதியில் விளக்குபூஜை செய்ய அமர்ந்திருக்கிறோம். இவள், வரப்பிரசாதியான தெய்வம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

154-வது திருவிளக்கு பூஜை! - திருப்பத்தூரில்...

எல்லாவற்றையும்விட, இன்றைக்கு சனிப்பெயர்ச்சி. இந்த நாளில், நாம் எல்லோரும் சிவாலயத்துக்குள், சக்தியின் சந்நிதியில் உட்கார்ந்திருக்கிறோம். எனவே, சனி தோஷம் விலகும். சனி பகவானும் நமக்கு அருள்வார். இதைவிடவேறு என்ன வேண்டும் நமக்கு?' என்று பேராசிரியர் சுப்ரமணியன் சொல்ல, வந்திருந்த பெண்கள் முகத்தில் அப்படியொரு பிரகாசம்!

பாஸ்கர குருக்கள், சங்கர ராமகிருஷ்ண சாஸ்திரிகள் இருவரும் பூஜையை அருமையா கச் செய்து வைக்க, ஓதுவார் மாசிலாமணி 108 போற்றிகளை தமிழில் பாட, சிலிர்த்துப் போனார்கள் வாசகிகள்.

154-வது திருவிளக்கு பூஜை! - திருப்பத்தூரில்...

''கல்யாணமாகி நாப்பது வருஷமாச்சு. இப்பதான் முதன்முதலா விளக்குபூஜைல கலந்துக்கறேன். என் எல்லா பாரமும் எங்கேயோ போயிட்ட மாதிரி இருக்கு. சக்திவிகடனுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் வாசகி ரேவதி. ''இன்றைய நாளின் சிறப்புகளைப் பேராசிரியர் சொன்னபோதே, ஒருவிதமான தெம்பு வந்திருச்சு. விளக்குபூஜையை முடிச்சதும், இதில் கலந்துகொண்ட எல்லாருமே நல்லாருப்போம்னு ஒரு நம்பிக்கை கிடைச்சிருக்கு. சிவகாமி அம்பாள் எல்லோர் வேண்டுதலையும் செவிசாய்த்துக் கேட்டிருப்பாள். சீக்கிரமே எல்லோருக்கும் நல்லது செய்வாள்'' என்று நம்பிக்கை மிளிரச் சொன்னார் வாசகி பிச்சம்மாள்.

நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism