ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந் தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறைப் பகுதியில், அதாவது காவிரிக் கரையில் உக்கிர நரசிம்மர் ஆலயம் உள்ளதாம். இந்தக் கோயில் எங்கே இருக்கிறது? எப்படிச் செல்லவேண்டும்? கோயில் தொலைபேசி எண் உள்ளதா? விவரம் தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்.

- ஆர்.வி.,என்.எஸ்.மணி, மதுரை-18

ஸ்ரீராமானுஜர் அருளிச் செய்த 'ஸ்ரீபாஷ்யம்’, ஸ்ரீசுவாமி தேசிகர் அருளிய 'பாதுகா மகிமை’ ஆகியவை, தமிழ் விளக்க உரையுடன் கொண்ட நூல்களாக வெளிவந்துள்ளதா? அந்தப் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்!

- ஆர்.பொன்னுலட்சுமி, ராஜபாளையம்

. எ.ங்களின் குலதெய்வம் ஸ்ரீநல்ல தங்கம்மன். உடுமலைப்பேட்டையில் ஸ்ரீநல்லதங்கம்மனுக்கு திருக்கோயில் உள்ளது. இவளை அடிக்கடி சென்று வணங்கி வழிபட்டு வருகிறோம்.தமிழகத்தில், ஸ்ரீநல்லதங்கம்மனுக்கு பூர்வீகமான கோயில் ஒன்று, விருதுநகர் மாவட்டம் பகுதியில் உள்ளது என்கின்றனர் சிலர். இந்தக் கோயிலில் மண்ணெடுத்து, பல ஊர்களிலும் கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனராம்! எங்களுக்கு தமிழகத்தில் ஸ்ரீநல்லதங்கம்மனுக்கு உள்ள கோயில்கள் குறித்த விவரங்கள் தேவை. இதுகுறித்து அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால் நன்றி உடையவளாக இருப்பேன்..
- டி.மங்களம், கோவை-45

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, 'ஞானபூமி’ ஆன்மிக இதழுடன், குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் ஒலிச் சித்திரங்கள், கேசட்டுகளாக வழங்கப்பட்டன. 10 பாகங்கள் கொண்ட இந்த கேசட்டுகள், தற்போது எங்கு கிடைக்கும்? அல்லது சி.டி.க்களாக அவை வெளியிடப்பட்டுள்ளனவா? முகவரி மற்றும் தொலைபேசி எண்களைத் தெரிவித்தால், குழந்தைகளுக்குப் பரிசளிக்க ஏதுவாக இருக்கும்.

- நா.ரவீந்திரன், திண்டிவனம்

உதவிக்கரம் நீட்டியவர்கள்...

ஸ்ரீயக்ஞ நாராயணன் எனும் மகானின் (ஸ்ரீவத்ஸ கோத்திரம்) திருச்சமாதிக் கோயில் எங்கு உள்ளது? தமிழகத்தில், தென்மாவட்டத்தில் உள்ள கிராமத் தில்தான் அவருடைய சமாதிக் கோயில் உள்ளது என்கின்றனர். விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்து உதவுங்களேன் என்று பெங்களூரு வாசகர் எம்.சங்கரன் கேட்டிருந்தார்.

திருவாரூர் அருகேயுள்ளது குடவாசல். இந்த தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம் - 1-வயலூர். இந்த ஊரில், ஸ்ரீயக்ஞ நாராயண தீட்சிதர் எனும் மகானின் சமாதி உள்ளது. துளசி மாடம் அமைத்து, ஆராதனை மடமும் நிறுவப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் தோறும், சஷ்டி திதியில், சுவாமிகளுக்கு ஆராதனையும் சிறப்பு வழிபாடும் விமரிசையாக நடைபெறுகிறது என்று சென்னை வாசகர் ஆர்.ராகவன் தெரிவித்துள்ளார்.

பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் ஒரு குறிப்பிட்ட ஆலயத்துக்குச் சென்று தரிசிக்க முடியும் என்பார்கள். அந்தத் திருத்தலம் எங்கு உள்ளது என்று வாசகர் சீதாராமன் கேட்டிருந்தார்.

'திருநாகேஸ்வரத்துக்கு அருகில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இந்தத் தலத்து இறைவன் - ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி; அம்பிகை - ஸ்ரீவேதாந்த நாயகி. ஆகம விதிமுறை களுக்கு முழுவதும் மாற் றாக அமைக்கப்பட்டுள்ள ஆலயம் இது. இங்கே எழுந்தருளியிருக்கிற தெய்வத் திருமேனிகள், மாறுபட்டு தரிசனம் தரும் சிறப்புப் பெற்ற தலம்; எவர் ஒருவருக்கு மறுபிறவி இல்லாத கொடுப்பினை உள்ளதோ, அவர்களே இங்கு வந்து வணங்க முடியும் என்பது ஐதீகம்! இங்கே, வில்வத்துடன் ருத்திராட்சம் ஒன்றையும் பிரசாதமாகத் தருகின்றனர். மேலும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, அன்னதான தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார்’ என்று கோவை - ஒடக்கல்பாளையம் வாசகர் சி.கதிர்வேல் தெரிவித்துள்ளார்.

'பூர்வ ஜென்ம புண்ணியம் இருந் தால்தான் இங்கு செல்ல முடியும் எனும் பெருமை மிக்க தலம் - ஸ்ரீவாஞ்சியம். ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதர் கோயில். திருவாரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும், உள்ளது. ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகிய வைபவங்களை இங்கு செய்வது சிறப்பு. காசிக்கு நிகரான தலம் என்றும் போற்றுவர்’ என்று காஞ்சிபுரம் வாசகர் எஸ்.சுகுமார் தெரிவித்துள்ளார்.

பூதஞ்சேந்தனார் அருளிய 'இனியவை நாற்பது’ எனும் நூல் எங்கு கிடைக்கும் என்று ஈரோடு வாசகர் பரத் கேட்டிருந்தார்.

'இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சிறுபஞ்ச மூலம் ஆகிய மூன்று நூல்களும் ஒரே நூலாக (மூலம் மற்றும் உரையுடன்) வெளியிடப்பட்டுள்ளது. கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை-17 (044- 24314347) எனும் முகவரியில் கிடைக்கிறது’ என்று தருமபுரி - மாக்கனூர் வாசகர் ஆர்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'எங்கள் குடும்பத்தில் ஏராளமான பிரச்னைகள்; கடன் தொல்லைகள். இதனால் நிம்மதியும் சந்தோஷமும் என்பதே இல்லாமல் போய்விட்டது. எங்களின் பிரச்னைகள் தீர்ந்து, சந்தோஷமாக வாழ அருள்புரியும் தலங்கள் ஏதும் உள்ளதா?’ என்று பெங்களூரு வாசகர் மணிபரமேஸ்வரன் கேட்டிருந்தார்.

'நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ளது திருவெள்ளக்குளம். இதனை 'அண்ணன் கோயில்’ என்றுதான் அழைக்கின்றனர். அதாவது திருப்பதி பெருமாளுக்கு மூத்தவராம் இவர்! திருமங்கை ஆழ்வார் இந்தத் தலத்துப் பெருமாளை 'அண்ணா’ என்று அழைத்து மனமுருகிப் பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் அனைத்தையும் பாராயணம் செய்வது மிக விசேஷம். இயலாதவர்கள்,

கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்
நல்லார் பலர்வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திருவெள்ளக்குளத்துறை வானே
எல்லா இடரும் கெடுமா றருளாயே!

என்கிற பாடலை மட்டுமாவது பாடி, பெருமாளை நினைத்து தினமும் பிரார்த்தித்தால், இழந்த நிம்மதியையும் செல்வத்தையும் பெறலாம். இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும்; துக்கம் பறந்தோடும்’ என்று மதுரை வாசகி மீனாட்சி பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீஅனுமன் ஸ்லோகம் படித்தால் அதுவரை இருந்த அனைத்துக் கவலைகளும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

அதேபோல், கடன் தொல்லையில் இருந்து விடுபட... திருஞானசம்பந்தர் அருளிய 'வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதம் இல்லி அமணொடு தேரரை...’ எனும் பதிகத்தின் பாடல்களையும் தினமும் பாடி, சிவபெருமானை வழிபட, சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம். அந்தப் பதிகப் பாடல்களையும் அனுப்பியுள்ளேன்’ என்று பெயர் குறிப்பிட மறந்துவிட்ட வாசகர் ஒருவர் அனுப்பியுள்ளார்.

பெங்களூரு வாசகருக்கு இந்த இரண்டு ஸ்லோ கங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.