Published:Updated:

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

Published:Updated:

பாண்டிச்சேரி அன்னை 

காட்டும் அன்பு வழிகள்!

வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்குத் தேவையான 12 சக்திகளைப் பட்டியலிடுகிறார் பாண்டிச்சேரி  ஸ்ரீஅரவிந்த அன்னை.

1. அமைதி 2. ஆர்வம் 3. உண்மை 4. ஏற்புத்திறன் 5. சமத்துவம் 6. தைரியம் 7. நன்றி உணர்வு 8.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

நற்பண்பு 9. பணிவு 10. பெருந்தன்மை 11. முன்னேற்றம் 12. விடாமுயற்சி.

* நம்மிடம் நிறைகுறைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் புரிந்துகொள்ளுதலே முன்னேற்றத்தின் முதல் படி.

* வாழ்க்கையில் போட்டி இருக்கலாம்; ஆனால், பொறாமை இருத்தல் கூடாது. பொறாமையால், நண்பர்களும் எதிரிகளாவர்.

* மனிதனுக்குப் பணிவும் கனிவும் எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்குத் துணிவும் இருக்க வேண்டும்.

த.சீபா, சென்னை -

ஞாயிற்றுக்கிழமையில்...

கன்னிமார் வழிபாடு!

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றத்துக்கு அருகில் உள்ளது கன்னிமார் கோயில். திருப்பரங்குன்றம் கோயிலின் தென்பகுதியில், மலைக்குப் பின்புறம், அமைதியே உருவான சூழலில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்கே, ஒரே கல்லில் ஏழு கன்னிமார்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள் இங்கு வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.  

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இங்கு வந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.  அந்த நாளில் இங்கு வந்து பொங்கலிட்டு வழிபடுவதும் நடக்கிறது. வைகாசி விசாகத் திருவிழா சிறப்புற நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து, தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். மறுநாள், கன்னிமார் கோயில் திருவிழாவும் விமரிசையாக நடைபெறுகிறது.  

சு.இலக்குமணசுவாமி, மதுரை

தைப்பூசத் திருநாளில்  

உவரி சிவாலயத்தில் தேரோட்டம்!

திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து சுமார் 38 கி.மீ. தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில். கடற்கரையையொட்டி அமைந்துள்ளது இந்தக் கோயில்.

பொதுவாக, முருகப்பெருமானின் ஆலயத்தில் தைப்பூச நன்னாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், சிவனார் குடிகொண்டிருக்கும் உவரி ஆலயத்திலும் வருடந்தோறும் தைப்பூச விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பத்துநாள் நடைபெறும் இந்த விழா, வருகிற 26ம் தேதி (26.1.15) அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

9ம் நாளான பிப்ரவரி 3ம் தேதி, தைப்பூச நாளையொட்டி, இங்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அப்போது உத்ஸவ மூர்த்தங் களான சந்திர சேகரரும் மனோன்மணி அம்பாளும் சர்வ அலங்காரத்தில் திருவீதியுலா வருவார்கள். இதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

பி.சுயம்பு மூர்த்தி, உவரி

கோதண்டராமருக்கு  

மகா சம்ப்ரோக்ஷண விழா!

  திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ளது பெருமுடிவாக்கம். இங்கே 1897ம் வருடம், ரங்கஸ்வாமி ஐயங்கார் என்பவரால் கட்டப்பட்டது கோதண்டராமர் கோயில். 100 வருடப் பழைமை கொண்ட இந்தக் கோயிலில், மூன்று நிலை ராஜகோபுரப் பணிகள் முழுமை பெற்று, வருகிற 2.2.15 திங்கட்கிழமை அன்று, காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படுகிறது.

  இதையொட்டி 31ம் தேதி மாலை 5 மணியில் இருந்து யாகசாலை பூஜை துவங்குகிறது. 1ம் தேதி ராஜகோபுரக் கலசங்கள் பிரதிஷ்டை நடைபெறுகிறது. 2ம் தேதி கும்பாபிஷேகம் முடிந்ததும், மதியம் 12 மணிக்கு சீதாராம திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு சீதாராம லட்சுமணர் மற்றும் அனுமன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் திருவீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது.

பி.ஆர்.சம்பத்ராமன்,  பெருமுடிவாக்கம்

பழநியில் தைப்பூச வி்ழா  அன்னதானம்!

பழநியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, காரைக்குடி பள்ளத்தூர் அருகில் உள்ள மணச்சையிலிருந்து வருடந்தோறும் ஸ்ரீசண்முக சேவா சங்கம் சார்பில் எண்ணற்ற பக்தர்கள் காவடி எடுத்துக் கொண்டு, பாதயாத்திரையாகச் செல்வது வழக்கம்.

இந்த வருடமும், வருகிற 27.1.15 அன்று மணச்சை ஸ்ரீதர்மலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து காவடியுடன் புறப்பட்டு, குன்றக்குடி, பிள்ளையார் பட்டி, சமுத்திராபட்டி, உலுப்பக்குடி, திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், செம்மடப்பட்டி, குழந்தைவேலன் சந்நிதி எனப் பல இடங்களில் காவடி பூஜை செய்கின்றனர்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

பிறகு, தைப்பூச நாளான 3.2.15 அன்று, பழநி மலையடிவாரம் வடக்கு கிரி வீதியில் உள்ள ஸ்ரீசண்முக சேவா சங்க நாட்டார் அறக்கட்டளை மடத்தில், காவடிகள் இறக்கி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். மறுநாள், காவடிகளையும் பால்குடங்களையும் எடுத்துக்கொண்டு போய், பழநி ஸ்ரீதண்டாயுதபாணிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர்.

இதையொட்டி, தைப்பூச நாளில் இருந்து மூன்று நாட்களும் மடத்தில் வரும் முருக பக்தர்களுக்கு, மதிய வேளையில் அன்னதானம் நடைபெறும். இந்த அன்னதான விழாவில் சுமார் 15,000 பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள்.

கடந்த 37 வருடங்களாக தைப்பூச விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகிற இந்த அமைப்பு, இந்த வருடமும் பழநியில் கோலாகலமாகக் கொண்டாட இருக்கிறது.

ஸ்ரீசண்முக சேவா சங்க நாட்டார் அறக்கட்டளை, 314, வடக்கு கிரி வீதி, பழநி 

 தில்லையம்பதியில்... திருப்பாவாடை உத்ஸவம்!

சிதம்பரம் தலத்தில் நடைபெறும் முக்கியமான உத்ஸவங்களுள் தைப்பூச நாளில் நடைபெறும் திருப்பாவாடை உத்ஸவமும் ஒன்று. இந்த உத்ஸவத்துக்காக நிலங்களை தானமாகத் தந்து, அந்தக் காலத்தில் சாசனம் எழுதி வைக்கப்பட்டுள்ளதாம்.

சக்தி சபா - உங்களுடன்... நீங்கள்!

தைப்பூசத்தன்று அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், பால் முதலியவற்றைக் கொண்டு பொங்கல் திருவமுது செய்து, 'தைப்பூசத் திருப்பாவாடை’ வைபவத்தின்போது இறைவனுக்குப் படைப்பது வழக்கம்.

முத்து.இரத்தினம், சத்தியமங்கலம்

குணசீலத்தில்... சிறப்பு ஹோமம்!

திருச்சி, குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி பெருமாளையும் அனைத்து தேவதைகளையும் ஹோமங்கள் மற்றும் பூஜைகள் மூலம் திருப்திப்படுத்தினால், பக்தர்களது திருமணத்தடை அகலும்;  குழந்தை பாக்கியம் கிடைக்கும்; குடும்ப ஒற்றுமை மேலோங்கும்;  தொழில் அபிவிருத்தியாகும்; மனோபலம் பெருகும்.

வரும் 24, 25 தேதிகளில், பக்தர்களின் நலனுக்காகவும் உலக அமைதிக்காகவும் இங்கே ஹோமங்கள், பூஜைகள் நடைபெறுகின்றன.  

எஸ்.ரகுநாதன், ப்ரீத்தி பிரசன்னா சாரிட்டபிள் டிரஸ்ட், ஸ்ரீரங்கம்.

உடுமலையில்... நன்னீராட்டுப் பெருவிழா!

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள ஸ்ரீரத்தினலிங்கேஸ்வரர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா, 2.2.15 அன்று நடைபெறுகிறது. இதையொட்டி 30.1.15  அதிகாலை முதல் 2ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

  முருகேசன், உடுமலைப்பேட்டை

கேட்கிறார்கள்!

நான், அன்னை புவனேஸ்வரியின் பக்தை. டி.கே.முத்துஸ்வாமி சாஸ்திரிகள் எழுதிய 'புவனேஷ்வரி தத்துவப் பிரகாசம்’ எனும் நூலைப் படிக்க விரும்புகிறேன். பல கடைகளில் தேடியும் இது கிடைக்கவில்லை. இந்தப் புத்தகம் வைத்திருப்பவர்கள் தந்து உதவினால் மகிழ்வேன்.

வாசுகிகண்ணன், சென்னை -40

வாசகர்களே!

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள் மற்றும் உங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கே உங்களுக்கான பிரத்யேகப் பகுதி இது.

அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா’, சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை600 002.