Published:Updated:

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்.. 

ஸ்ரீராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார் சேர மன்னன் குலசேகரன். அதில்

ஹலோ விகடன் - அருளோசை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரன், தூடணன் உள்ளிட்ட பதினான்காயிரம் அரக்கர்கள் ஸ்ரீராமனை எதிர்த்துப் போரிட வந்துள்ளனர் என்றும், ஸ்ரீராமரோ படையின்றி போருக்குத் தயாரானார் என்று கேட்டதும், ஸ்ரீராமருக்குத் துணையாகப் படை திரட்ட ஆணையிட்டார் மன்னர். மறுநாள் காலட்சேபத்தில் பேசுகையில், போரில் ஸ்ரீராமன் வென்றார் என்று சொற்பொழிவாளர் கூறவும், படைகளைத் திரும்புமாறு ஆணையிட்டாராம் அரசர். இதுபோல எத்தனையோ மானிடர்கள் தங்களை எம்பிரானிடத்தில் ஒப்படைத்து,  சரணாகதி அடைந்திருக்கிறார்கள்.

ஸ்ரீமந் நாராயணனின் திருவடியில் தங்களை ஆழப் புதைத்துக்கொண்டவர்களை ஆழ்வார்கள் என்று அழைக்கிறோம். அப்படிப்பட்ட ஆழ்வார்களின் வாழ்க்கைச் சிறப்புகளையும், நாராயணன் அவர்களுக்கு அருள்புரிந்த கதைகளையும்

3.3.15 முதல் 9.3.15 வரை தினமும் சொல்கிறேன்.

044  66802913* என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு ஆழ்வார்களின் அற்புதங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

குன்றக்குடி பெருமாள்

வாசகர்களுக்கு, வணக்கம்!

கண நேரமும் இடைவேளை இன்றிக் கடவுளை தியானிக்கும் எண்ணம் வருவதற்கே பெரும்

ஹலோ விகடன் - அருளோசை

பேறு செய்திருக்க வேண்டும். அத்தகைய பெரும் பேறு பெற்றவர் அபிராமி பட்டர். 'இன்றைய திதி என்ன?' என்று பட்டரிடம் சரபோஜி மன்னர் கேட்க, அம்பாளையே நினைத்து தியானித்திருந்த பட்டர், பெளர்ணமி என்று தவறாகக் கூற, மன்னர் கோபம் கொண்டு தண்டனை வழங்கி்னார். தியானத்திலிருந்து மீண்ட பிறகு நடந்ததை அறிந்து, தனக்கு ஏற்பட்ட சோதனையை அபிராமியே சரிசெய்ய வேண்டும் என்று, அம்பாளை நோக்கி அபிராமி பட்டர் பாடத் தொடங்கி்னார். 79ம் பாடலாகிய 'விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலைப் பாடியபோது, அம்பாள் தன் தாடங்கத்தை எடுத்து வானில் தவழவிட, அது பிரகாசமாக ஒளிர்ந்து, அமாவாசை நீங்கிப் பெளர்ணமியானது. அம்பாளையே தன் முன் தோன்றச் செய்யும் அளவுக்கு அபிராமி பட்டர் தன் பாடலில் கூறியது என்ன?

வரும் 10.3.15 முதல் 16.3.15 வரை 04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்து கேளுங்கள்; அம்பிகையின் அருள் பெறுங்கள்.

கணபதிதாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism