Published:Updated:

விளக்கும் விளக்கமும்..!

கலகல கடைசி பக்கம்வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

நான் நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது, அந்தி சாய்ந்து, சற்றே இருட்டிவிட்டது. சுவர் கடிகாரத்தில் சின்ன முள் ஆறில் நிற்க, பெரிய முள் செங்குத்தாக பன்னிரண்டில்! 

''விளக்கு வைக்கற நேரமாச்சே? இன்னும் ஏன் நீங்க விளக்கு வைக்கலே..?'' என்றேன் நண்பரிடம்.

'நல்லாக் கேளுங்க! நான் சொன்னாதான் கேட்க மாட்டேங்கறார். நீங்க சொல்லியாவது கேட்கிறாரா, பார்ப்போம்!' என்றபடி நண்பரின் மனைவி வர, ''என்ன, விளையாடறீங்களா..? அஞ்சரை, ஆறு மணிக்கெல்லாம் லைட்டை எரியவிட்டா, எலெக்ட்ரிசிட்டி பில் கட்டியே நான் போண்டியாக வேண்டியதுதான்...'' என்றார் நண்பர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உள் அறைகளில் இருள் இன்னும் அதிகமாகக் கவ்வியிருக்க, ''சுவாமி அறையிலாவது விளக்கு ஏத்தி வெச்சிருக்கலாமே?'' என்றேன்.

'கோயில் கர்ப்பக்கிரகங்களில் இருட்டாதானே இருக்கும்?' என்றார் நண்பர்.

''அது சரி! ஆனால், அங்கெல்லாம் தூங்காவிளக்காவது எரிஞ்சுக்கிட்டிருக்குமே? அப்படி, இங்கே

விளக்கும் விளக்கமும்..!

கரன்ட் விளக்கு போடலைன்னாலும், ஒரு சின்ன குத்துவிளக்கையாவது ஏத்தி வெச்சிருக்கலாமே?'

'நானா வேண்டாங்கிறேன்! அன்றாடம் விளக்கைத் துடைச்சு, எண்ணெய் ஊத்தி, திரியை நிமிண்டி, விளக்கை ஏத்துற பொறுமையெல்லாம் இவளுக்குக் கிடையாது!' என்று மனைவியை வாரினார் நண்பர்.

'அதெல்லாம் சும்மா!  பூஜை ரூம்ல ஜீரோ வாட் பல்புதான் போட்டிருக்கோம். அதுவே கரன்ட் இழுக்கும்னு ஏழரை மணிக்கு மேலதான் போடுவார். அப்படிப்பட்ட மனுஷன், விளக்கேத்த விலை கொடுத்து எண்ணெய் வாங்கித் தருவாரான்னு நீங்களே யோசிச்சுக்குங்க!'' என்று மடக்கினார் மனைவி.

'சுடர் விட்டு எரியும் திரி விளக்கைவிட ஒரு வீட்டை அழகுபடுத்த வேறு எதனால் முடியும்?’ என்று சுவாமி சின்மயானந்தா கூறியிருப்பது என் நினைவுக்கு வர, நண்பரிடம் விளக்கோபாக்யானம் செய்தேன்...

''விளக்கு இருட்டைப் போக்குவது மாதிரி, அறியாமையை அறிவு நீக்குகிறது. நல்லதோ, கெட்டதோ... நமது எந்த ஒரு நடவடிக்கையும் அறிவு சார்ந்தே இருக்கிறது. அதனால்தான் நமது எண்ணங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஒரு சாட்சி போல எல்லா சுபகாரியங்களின்போதும் விளக்கேற்றி வைக்கிறோம்...''

''ஹலோ... விளக்குன்னா எல்லாமே விளக்குதானே? பல்பும், டியூப்லைட்டும்கூட இதே மாதிரி சாட்சிகள்தானே?'' என்று இடைமறித்தார் நண்பர்.

''ஆனா, ஒரு திரி விளக்கை வைத்து மேலும் நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றி வைக்க முடியும். அதன் பின்பும்கூட திரி விளக்கின் ஒளி குறைவதில்லை. அதே மாதிரிதான் அறிவும்! மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட பின்பும் அறிவு மங்கிவிடுவதில்லை. மாறாக, முன்பைவிட தெளிவு கூடுகிறது. ஆனால், ஒரு மின்சார விளக்கின் உதவியால் மற்றொரு மின்சார விளக்கை ஏற்றமுடியாது.''

நண்பர் ஒருவழியாக எழுந்துபோய் ஹால் டியூப் லைட்டையும், பூஜை அறை ஜீரோ வாட் பல்பையும் எரியவிட்டார். அவருடைய முகத்தைப் பார்த்தேன். என்னுடைய 'விளக்கு விளக்கம்’ அவரிடம் எந்தப் பிரகாசத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை!