சிறப்பு கட்டுரை
Published:Updated:

நமது பழைய கலாசாரமே யோகா !

சக்தி விகடனும் ஈஷாவும் இணைந்து நடத்தி வரும் இலவச யோகா பயிற்சி முகாம்இளந்தமிழருவி

''யோகா என்பது வேறொன்றுமில்லை; நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை முறைதான்! யோகாவை ஒரு கலாசாரமாகவே நம் முன்னோர் கடைப்பிடித்தனர். ஆனால், நாமோ வெளிநாட்டு மோகத்தில் நமது வாழ்க்கை முறையை நம்மையும் அறியாமல் மாற்றி அமைத்துக்கொண்டு விட்டோம். 

அதனால் இன்று அமைதியையும், ஆரோக்கி யத்தையும் தினம் தினம் தேடித் தவிக்கிறோம். நாம் அலட்சியமாக நினைத்து மறுதலித்த ஒரு செயலை, பழைய வாழ்க்கை முறையை  மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்...'  திரையில் தோன்றிய சத்குரு யோகாவின் முக்கியத்துவத்தை விளக்க, வாசகர்கள் ஆர்வத்துடன் கவனித்தார்கள்.

நமது பழைய கலாசாரமே யோகா !

சக்தி விகடனும் ஈஷாவும் இணைந்து நடத்தி வரும் இலவச யோகா பயிற்சி முகாம், கடந்த 26.4.15 ஞாயிற்றுக்கிழமை அன்று, ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள ஓட்டல் ஓயாசிஸ் ரெஸ்டாரன்ட் வளாகத்தில் அமைந்துள்ள மகேஷ்வரி மஹாலில் நடைபெற்றது. யோகா நமஸ்காரம் மற்றும் கிரியா யோகா குறித்து திரையில் சத்குரு சொல்லச் சொல்ல, அதைப் பயிற்சியாளர் குமார் மிகத் துல்லியமாக வாசகர்களுக்குச் செய்து காண்பிக்க, வாசகர்களும் அதைப் பின்பற்றிச் செய்து பழகினர்.

''ஐம்பது வயதைக் கடந்த நான், பல மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன்.

அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொண்டுதான் வருகிறேன். ஆனாலும், அவற்றில் எல்லாம் கேட்காத என் முதுகு வலி, இந்த இரண்டு மணி நேரப் பயிற்சியில் சற்று வீர்யம் குறையத் தொடங்கியதாக உணர்கிறேன். தொடர்ந்து இந்த யோகாவைச் செய்வதென்று தீர்மானித்து விட்டேன். மனப் பிரச்னைகளை மட்டுமின்றி, உடல் பிரச்னைகளையும் யோகா மூலமாகக் குணப்படுத்தலாம் என்று தெளிவுபடுத்தி, வழிகாட்டிய சக்தி விகடனுக்கும் ஈஷாவுக்கும் மனமார்ந்த நன்றி!' என்று வாசகர் ராமநாதன் சொன்னதும், அனைவரும் பலமாகக் கை தட்டித் தங்கள் ஆமோதிப்பைத் தெரிவித்தார்கள்.

நமது பழைய கலாசாரமே யோகா !

முகாமின் இறுதியில், கிரியா யோகா குறித்து சத்குருவின் உரையாடல் கொண்ட சி.டியுடன், சுண்டல் மற்றும் சத்துமாவுக் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது. உடலும் உள்ளமும் குளிர வாசகர்கள் விடைபெற்றார்கள்.

படங்கள்: அ.நவின்ராஜ்