சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தி வரும் மனவளக் கலை யோகா உடற்பயிற்சி முகாம், கடந்த 4.9.11 அன்று, காரைக்குடி ஆயிர வைசிய மீனாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

''சக்தி விகடன்ல இந்தத் தொடரைப் படிக்கும் போதே, பயிற்சி செய்யணும்னு ஆர்வம் வந்துச்சு. இப்ப, நேரடி வழிகாட்டுதல் மூலம் பயிற்சியைச் செஞ்சப்ப, என்னோட மூட்டு வலியெல்லாம் இன்னும் சில நாள்ல பறந்தே போயிடும்னு நம்பிக்கை வந்திருக்கு'' என்றார் வாசகர் கிருஷ்ணன்.

''காட்டுலயும் மேட்டுலயும் ஜீப்புல சுத்தற வேலை எனக்கு. இதனால இடுப்பு, முதுகு, மார்பு எலும்புகள்லாம் ரொம்பவே தேய்மானம் ஆகிட்டதா மருத்துவர்கள் சொல்ல, ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு வரேன். எனக்கே இந்தப் பயிற்சிகள் எளிமையாவும் இருக்கு; நிறையப் பலன் கொடுக்கறதாவும் இருக்கு!'' என்று வியந்தபடி சொல்கிறார் பத்ரசாமி.

''என்னோட கோபத்தைக் கட்டுப்படுத்தறதுக்குத்தான் இந்தப் பயிற்சிக்கு வந்தேன்'' என்று வாசகி கலாராணியும், ''இந்த இரண்டு மணி நேரப் பயிற்சி, எனக்குள் இருந்த பயத்தை அறவே துரத்திடுச்சு'' என்று வாசகி நாகேஸ்வரியும்,

நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்தப் பரவசம் அனைவருக்கும் பரவட்டும்!

| பெ.தேவராஜ்

படங்கள்: பா.காளிமுத்து