ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

மகாசாஸ்தா போற்றி

மகாசாஸ்தா
பிரீமியம் ஸ்டோரி
News
மகாசாஸ்தா

மகா சாஸ்தா அஷ்டோத்ர சதநாமாவளி

பாவங்கள் விலகும் புண்ணியம் பெருகும்!

சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ - தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.

மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம் பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

மஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே சாஸ்தாவின் மணிகண்ட அவதாரம். இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறார் ஐயன்.

சுவாமி ஐயப்பன்
சுவாமி ஐயப்பன்

சாஸ்தாவுக்கு ஆலயம் அமைப்பவர்களது முன்னேழு தலை முறையும் பின்னேழு தலைமுறையும் ஐயனின் பதத்தை அடைந்து இன்புறுவர். ஐயனின் பூஜைகளுக்கென பசுவும் கன்றும் ஆலயத்துக்கு அளிப்பது, சகல பாவங்களையும் போக்கவல்லது. சாஸ்தாவின் ஆலயத்தை பசுஞ்சாணமிட்டு மெழுகிக் கோலமிடுபவர், இந்திர லோகத்தை அடைவர். ஐயனின் ஆலயத்தில் நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றுவோர் சரீர பீடைகளும், க்ரஹ பீடைகளும் ஒழிந்து நல்வாழ்வு பெறுவர்.

அதேபோல் சாஸ்தாவின் மகிமையைப் போற்றும் திருநாமாவளி துதிப்பாடல்களைப் பாடி வணங்குவோருக்கு எந்நாளும் துன்பம் இல்லை. அவ்வகையில், மஹா சாஸ்தா அஷ்டோத்ர சதநாமாவளி இங்கு தரப்பட்டுள்ளது.

அனுதினமும் இந்தத் திருநாமப் போற்றித் துதிபாடலைப் பாடி சாஸ்தாவை அர்ச்சித்து வழிபட்டால் சத்ரு பயம், கடன் பிரச்னைகள், பிணிப் பாதிப்புகள் ஆகியவை நீங்கும். கிரக தோஷங்கள் ஏதேனும் இருப்பின், அந்த தோஷங்கள் படிப்படியாக விலகி சுபிட்சம் உண்டாகும். தினமும் படித்து வழிபட இயலாது எனில், சனிக்கிழமைகளில் இந்தத் துதியைப் பாராயணம் செய்து சாஸ்தாவை வழிபட்டால், சகல நன்மைகளும் கைகூடும்.

சுவாமி ஐயப்பன்
சுவாமி ஐயப்பன்

மஹா சாஸ்தா

அஸ்டோத்ர சதநாமாவளி

ஓம் மகா சாஸ்த்ரே நம:

ஓம் விச்வசாஸ்த்ரே நம:

ஓம் லோக சாஸ்த்ரே நம:

ஓம் தர்ம சாஸ்த்ரே நம:

ஓம் வேத சாஸ்த்ரே நம:

ஓம் கால சாஸ்த்ரே நம:

ஓம் கஜாதிபாய நம:

ஓம் கஜாரூடாய நம:

ஓம் கணாத்யக்ஷாய நம:

ஓம் வ்யாக்ராரூடாய நம: 10

ஓம் மஹாத்யுதயே நம:

ஓம் கோப்த்ரே நம:

ஓம் கீர்வாணஸம் ஸேவ்யாய நம:

ஓம் கதாதங்காய நம:

ஓம் கதாக்ரண்யை நம:

ஓம் ரிக்வேத ரூபாய நம:

ஓம் நக்ஷத்ராய நம:

ஓம் சந்த்ரரூபாய நம:

ஓம் வலாஹகாய நம:

ஓம் தூர்வாச்யாமாய நம: 20

ஓம் மஹாரூபாய நம:

ஓம் க்ரூரத்ருஷ்டயே நம:

ஓம் அனாமயாய நம:

ஓம் த்ரிநேத்ராய நம:

ஓம் உத்பலாகாராய நம:

ஓம் காலஹந்த்ரே நம:

ஓம் நராதிபாய நம:

ஓம் கண்டேந்து மெளளிதநாயாய நம:

ஓம் கல்ஹாரஹுஸும ப்ரியாய நம:

ஓம் மதனாய நம: 30

ஓம் மாதவஸுதாய நம:

ஓம் மந்தாரகுஸுமார்சிதாய நம:

ஓம் மஹாபலாய நம:

ஓம் மஹோத்ஸாஹாய நம:

ஓம் மஹாபாப விநாசநாய நம:

ஓம் மஹசூராய நம:

ஓம் மஹாதீராய நம:

ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம:

ஓம் அஸிஹஸ்தாய நம:

ஓம் சரதராய நம: 40

ஓம் ஹாலஹல த்ராத்மஜாய நம:

ஓம் அர்ஜுநேசாய நம:

ஒம் அக்னிநயநாய நம:

ஓம் அநங்கமதனாதுராய நம:

ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம:

ஓம் தாய நம:

ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷிதாய நம:

ஓம் கஸ்தூரிதிலகாய நம:

ஓம் ராஜசேகராய நம:

ஓம் ராஜஸத்தமாய நம: 50

ஓம் ராஜராஜார்சிதாய நம:

ஓம் விஷ்ணுபுத்ராய நம:

ஓம் வநஜனாதிபாய நம:

ஓம் வர்சஸ்கராய நம:

ஓம் வரருசயே நம:

ஓம் வரதாய நம:

ஓம் வாயுவாஹனாய நம:

ஓம் வஜ்ரகாயாய நம:

ஓம் கட்கபாணயே நம:

ஓம் வஜ்ரஹஸ்தாய நம: 60

ஓம் பலோத்ததாய நம:

ஓம் த்ரிலோகஞ்ஞாய நம:

ஓம் அதிபலாய நம:

ஓம் புஷ்காலய நம:

ஓம் வ்ருத்தபாவநாய நம:

ஓம் பூர்ணாதவாய நம:

ஓம் புஷ்கலேசாய நம:

ஓம் பாசஹஸ்தாய நம:

ஓம் பயாபஹாய நம:

ஓம் பட்காரரூபாய நம: 70

சுவாமி ஐயப்பன் சாஸ்தா
சுவாமி ஐயப்பன் சாஸ்தா

ஓம் பாக்ஞாய நம:

ஓம் பாஷண்டருதி ராசனாய நம:

ஓம் பஞ்சபாண்டவ ஸந்த்ராத்ரே நம:

ஓம் பரபஞ்சாக்ஷரா ச்ரிதாய நம:

ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம:

ஓம் பூஜ்யாய நம:

ஓம் பண்டிதாய நம:

ஓம் பரமேச்வராய நம:

ஓம் பவதாபப்ரசமனாய நம:

ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம: 80

ஓம் கவயே நம:

ஓம் கவீநாமதிபாய நம:

ஓம் க்ருபாளவே நம:

ஓம் க்லேசநாசனாய நம:

ஓம் ஸமாய நம:

ஓர் அரூபாய நம:

ஓம் ஸேநான்யை நம:

ஓம் பக்த ஸம்பத் ப்ரதாயகாய நம:

ஓம் வ்யாக்ரசர்மதராய நம:

ஓம் சூலினே நம: 90

ஓம் கபாலினே நம:

ஓம் வேண்டுவா தநாய நம:

ஓம் கலாரவாய நம:

ஓம் கம்புகண்டாய நம:

ஓம் கிரீடாதி விபூஷிதாய நம:

ஓம் தூர்ஜடயே நம:

ஓம் வீரநிலயாய நம:

ஓம் வீராய நம:

ஓம் வீரேந்த்ர வந்திதாய நம:

ஓம் விச்வரூபாய நம: 100

ஓம் வ்ருஷபதயே நம:

ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம:

ஓம் தீர்கநாஸாய நம:

ஓம் மஹாபாஹவே நம:

ஓம் சதுர்பாஹவே நம:

ஓம் ஜடாதரயா நம:

ஓம் ஸநகாதிமுநி ச்ரேஷ்டஸ்துத்யாய நம:

ஓம் ஹரிஹராத்மஜாய நம: 108

தொகுப்பு:

சொல்லின்செல்வன்

பி.என்.பரசுராமன்