Published:Updated:

வலைத்’ தலம்’ !

வலைத்’ தலம்’ !

ராமாயணத்துக்கு வால்மீகி இட்ட பெயர்! 

ராமனுடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது ராமாயணம். ஆனால், ராமாயணத்துக்கு வால்மீகி இட்ட பெயர் ’ சீதையின் கதை’ என்பது தான். ’க்ருத்ஸ்நம் ஸீதாயாஸ் சரிதம் மஹத்’ என்று ராமாயணத்தை தொடங்குகிறார். இதன் பொருள், ’உயர்ந்த சீதாதேவியின் வரலாற்றை சொல்கிறேன்’ என்பதாகும். ராமனின் பிள்ளைகளான லவன், குசனை சீடர்களாக ஏற்ற வால்மீகி, ராமாயணத்தை எடுத்துச் சொல்லும் போதும், ’மகிமை மிக்க சீதையின் சரிதம்’ என்று குறிப்பிடுகிறார். வைணவ சித்தாந்தத்திலும் ராமாயணத் தின் பெருமையைக் குறிப்பிடும்போது, ’சிறையிருந்தவள் ஏற்றம்’ என்றே குறிப்பிடுவது வழக்கம். சுவாமி விவேகானந்தர், 'இந்திய மாதர்களின் லட்சியப் பெண் சீதை. அவளைப் போல ஒரு சிறந்த பெண்மணி பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை,'' என்று புகழ்கிறார்.

வலைத்’ தலம்’ !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ச்சியாக சிதிலம் அடைந்த கோயில்களைப்  புனரமைக்கும் நண்பர் ஒருவர், போன வாரம் திருச்சிக்கு அழைத்திருந்தார். பரஸ்பரம் நலம் விசாரிப்புக்குப் பின், ’’சிறிது தூரம் பயணிக்கலாமா? ஓர் அதிசயத்தைக் காண்பிக்கிறேன்'' என்றார். அரைமணி நேர பயணத்திற்குப் பின் சிலரிடம் விசாரித்து, ஓரிடத்தில் சாலை ஓரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு, ஒற்றையடி பாதையில் நடக்க ஆரம்பித்தோம்.

வலைத்’ தலம்’ !
வலைத்’ தலம்’ !

சிறிது தூரம் நடந்த பிறகு முற்றிலும் சிதிலம் அடைந்த கோயிலொன்று தெரிந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கும் என மனதில் எழுந்த கேள்வியை வெளிப்படுத்தாது அவரைப் பின்தொடர்ந்தேன். அங்கிருந்த அம்பாள் சிலை அருகே என்னை கொண்டு நிறுத்திய நண்பர், ’நான் உங்களுக்குக் காட்ட விரும்பிய அதிசயம் இதுதான்'' என்றார். மிக அழகான திரு உருவம், இரண்டு கரங்களிலும் தாமரைச் செண்டு, இதழோரம் விரியும் புன்னகை என அற்புத தரிசனம்! என்னை அம்பாளின் அருகில் நிறுத்திவிட்டு எனது மகனும் நண்பரும் எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.

வலைத்’ தலம்’ !
வலைத்’ தலம்’ !

இது சரியா இருக்குமா மாமா?'' என்றபடி அவரிடம் எதையோ எடுத்துவந்து கொடுத்தான் என் மகன். எனக்கு ஆர்வம் தாளவில்லை. எனக்குச் சொல்வதற்கு முன்னால் எதையோ என் மகனிடம் சொல்லிவிட்டார் என்று மட்டும் புரிந்தது. ஒரு சிறிய மலர் கொத்தோடு என் அருகில் வந்தார்கள் இருவரும், எனது கையில் கொடுத்து அம்பாளுக்கு மூக்குத்தி போல் அணிவிக்க சொன்னார். அப்போதுதான் கவனித்தேன் அம்பாளின் மூக்கில் துளை இருந்தது. துளையில் மலர் மூக்குத்தியை அணிவித்தேன். அடடா! என்ன ஒரு அற்புதம். எவ்வளவு திறன் படைத்த கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். இது எனது கண்களுக்கு  மட்டும்தான் அதிசயமா? இல்லை உங்களுக்குமா?

பராந்தக சோழன்

வாசகர்களே!

ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான  பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத்

வலைத்’ தலம்’ !

தலம்' பக்கம்! மேற்சொன்னவற்றில் உலா வரும்  உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து வனியுங்கள்!