Published:Updated:

168 - வது திருவிளக்கு பூஜை

பிரார்த்தனை பலித்தது !ரா.வளன்

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 30.6.15 அன்று சென்னை, வடபழநி ஆண்டவர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. சக்தி விகடனின் 168வது திருவிளக்கு பூஜை இது. 

மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அம்மனுக்கு முன்பாக பஞ்சமுகக் குத்துவிளக்கு தீபலக்ஷ்மியாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. அந்த நேரத்தில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கோயிலுக்கு  வரவே, அவரையே அழைத்து குத்துவிளக்கு ஏற்றி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண் டோம். அதன்படியே, அமைச்சர் குத்து விளக்கை ஏற்றி வைத்ததும், சிறப்பு விருந்தினர் 'சொல்லின் செல்வன்’ பி.என்.பரசுராமன், விளக்கு பூஜையின் மகிமையை விவரித்தார்.

168 - வது திருவிளக்கு பூஜை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

  'புராணச் சிறப்புகள் கொண்ட வடபழநி முருகன் கோயிலுக்கு விளக்கு பூஜைக்காக வந்திருக்கும் அத்தனை பெண்மணிகளும் புண்ணியம் செய்தவர்கள். இது கூட்டுப் பிரார்த்தனை. அதுவும் சக்தியே நடத்துகிற, ஒரு பொது வழிபாடு. ஆகவே, தீர்க்க முடியாத பிரச்னைகளையும் தீர்க்கும் ஆற்றல் இந்த விளக்கு பூஜைக்கு உண்டு.'' என்று அவர் விவரிக்க, வாசகியர் அனைவரும் நெஞ்சம் நெகிழ்ந்து, கை தட்டி வரவேற்றனர்.

168 - வது திருவிளக்கு பூஜை

'சக்தி விகடன் நடத்துற விளக்கு பூஜையில நான் கலந்துக்கிறது இது 3வது முறை. இதுக்கு முன்னாடி நடந்த இரண்டு விளக்கு பூஜையிலும் நான் வேண்டிய பிரர்த்தனைகள் அப்படியே நடந்துச்சு. விளக்கு பூஜைக்கு, அதிலும் சக்தி விகடன் நடத்துற விளக்கு பூஜைக்கு தனி சக்தி இருக்குன்னு அப்பத்தான் அனுபவபூர்வமா உணர்ந்தேன்'' என்று சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டார் வாசகி சுந்தரி. விளக்கு பூஜையில் கலந்துகொண்ட வாசகியர்களுக்கு ஜாக்கெட் பிட், மஞ்சள் குங்குமம், மஞ்சள் சரடு ஆகியவற்றை வழங்கிய முருகேசன்சுகுணா தம்பதியர், ''விளக்குபூஜையில் கலந்து கொண்ட எல்லோரது வேண்டுதலும் நிறைவேற வேண்டும். அதுதான் எங்கள் விருப்பம்'' என்று தெரிவித்தார்கள்.

எல்லோரது பிரார்த்தனைகளையும் வடபழநி ஆண்டவர் நிச்சயம் நிறைவேற்றுவார்!

படங்கள்: மீ.நிவேதன்