Published:Updated:

169-வது திருவிளக்கு பூஜை

ஒரு புனித பூஜை!

‘‘இங்கே நடைபெறும் திருவிளக்கு பூஜை பவித்ரமானது. இந்த பூஜையில் கலந்துகொள்ள வந்திருக்கும் நீங்கள் அனைவருமே பாக்கியசாலிகள்! புனிதம் நிறைந்த இந்த பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது. இந்த பூஜையில் கலந்துகொள்பவர்களின் இல்லங்களில் இல்லை என்பதே இல்லை என்னும்படி சகல செல்வங்களும் நிறைந்திருக்கும்.

169-வது திருவிளக்கு பூஜை

ஒரு வேள்வியைப் போலவே இங்கே நடை பெற உள்ள இந்தத் திருவிளக்கு பூஜையில் நீங்கள் செய்யும் கூட்டுப் பிரார்த்தனை, ஆன்மிக அதிர்வலைகளை ஏற்படுத்தி, அளவற்ற நன்மைகளை உங்களுக்கு மட்டுமின்றி அனை வருக்குமே வழங்கப் போகிறது...’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
169-வது திருவிளக்கு பூஜை
169-வது திருவிளக்கு பூஜை

கடந்த 14.7.15 அன்று, கோவை- வடவள்ளி ஶ்ரீகாட்டு விநாயகர் கோயிலில் சக்தி விகடன் நடத்திய
169-வது விளக்கு பூஜையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைத்து, விளக்குபூஜையின் மகிமை கள் குறித்து கவிஞர் சுந்தரராமன் பேசியதைக் கேட்டு, வந்திருந்த பெண்கள் அனைவரும் மகத்தான ஒரு பூஜையில் கலந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பில் பரவசம் அடைந்து, பக்திபூர்வமாக விளக்கு பூஜை செய்து, பிரார்த்தனை செய்தனர்.

 “இந்த பூஜையில கலந்துக்கிட்டதில் ஒரு புதுச் சக்தி எனக்குக் கிடைச்ச மாதிரி உணர்றேன். இதுவரை நான் சக்தி விகடனைப் படிச்சதில்லை. என் சிநேகிதி மூலமா இந்த பூஜையில கலந்துக் கிட்டப்போதான், சக்தி விகடன் இதுபோன்ற சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து நடத்திட்டு வர்றது எனக்குத் தெரிய வந்துச்சு. இனிமே சக்தி விகடனைத் தொடர்ந்து வாங்கிப் படிப்பேன்’’ என்று சிலிர்ப்புடன் சொன்னார், பிரவீணா. “மத்த இடங்கள்ல நடக்கு றதைப் போல் இல்லாம, விளக்கு பூஜையின் மகிமைகள், மனசுக்கு நிறைவைத் தரும் பக்திப் பாடல்கள் என எல்லாம் ஒன்றாய்க் கலந்து கொடுப்பதுதான் சக்தி விகடன் விளக்கு பூஜையோட ஸ்பெஷல். பிறகு ஏன் சக்தி விகடனைக் கொண்டாட மாட்டாங்க?” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் வாசகி கலா.

அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் உண்டாக காட்டுவிநாயகர் அருள்வாராக!

ரா.வளன்

படங்கள்: த. ஶ்ரீநிவாசன்