Published:Updated:

வலைத்'தலம்'!

அம்மன் கூழ்... மகிமை தெரியுமா?

வலைத்'தலம்'!

கேழ்வரகு மிகுந்த சத்துள்ள தானியம். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியை யும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக் கிறார்கள். பஞ்சத்தைப் போக்குவதோடு, வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறார்கள். கூழுக்குக் கடித்துக்கொள்ள கொடுக்கும் சின்ன வெங்காயமும் மருத்துவ பலன்கள் அதிகம் கொண்டது.

வலைத்'தலம்'!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல், கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய்த் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான். இப்படிச் சத்தான, நோய்களைத் தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும் கஞ்சியும். எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!

வலைத்'தலம்'!

அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னி வேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை அரைகுறையாகத் தட்டியெடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேக வைத்து, துணியில் கட்டிய மருந்தை அதில் 15 நிமிடம் போட்டுவிட வேண்டும். பின்னர் இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. ஆடி மாதத்துக் குளிரிலும் காற்றிலும் வர வாய்ப்புள்ள நோய்களான இருமல், தொற்று நோய் ஆகியவை வராது.

ஜபம் செய்யும் முறை!

வாசிகம், உமாம்சு, மானசம் என மூன்று முறையில் ஜபம் செய்யலாம். அடுத்தவர் காதில் விழும்படி ஜபம் செய்வது - வாசிகம்.

தனது காதில் மட்டும் விழும்படி ஜபிப்பது - உமாம்சு. மனதினால் மட்டும் ஜபிப்பது - மானசம். இதில், வாசிகம் என்பது ஒரு மடங்கு பலனளிக்கும்; உமாம்சு நூறு மடங்கு பலனளிக்கும்; மானசம் ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும்.

வலைத்'தலம்'!

ஜபம் செய்யும் நேரத்தில் மகிழ்ச்சியாகவும், சுத்தமாகவும், மென்மையாகவும், மந்திர அர்த்தத்தை நினைத்தபடியும், மற்ற கவலைகளை எண்ணாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

(வாரியார் சுவாமிகள் அருளியது)

- வாசன் சவி

திருப்தி செய்வது தர்மமாகும்

வேதத்தினால் ரிஷிகளையும், ஹோமத்தினால் தேவர்களையும், சிராத்தத்தினால் பித்ருக்களையும், அன்னத்தினால் அதிதிகளையும் திருப்திப்படுத்த வேண்டும்.

அதேபோன்று, மலர்களினால் பூதங்களையும், உழைப்பினால் எஜமானனையும், தரிசனத்தினால் தெய்வங்களையும், பிரியத்தினால் பெற்றோர்களையும், அன்பினால் மனைவியையும், பாசத்தால் பிள்ளைகளையும் திருப்தி செய்யவேண்டியது தர்மமாகும்.

- சசி ரமா

ஶ்ரீரங்கம் கோயிலில்
 
வெளிக்கொணரப்பட்ட யானை சிலை!

வலைத்'தலம்'!

கும்பாபிஷேகத்துக்காக ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சில மாதங்களாக கோயிலைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தொல்லியல் துறையும் இணைந்து செயல்பட்டு வருகிறது. கோயில் கோபுரங்களுக்கு வண்ணம் பூசுவது, கோயில் சிற்பங்கள், மண்டபங்களை புதுப்பிப்பது என வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயிலில் பல இடங்கள் சுமார் ஏழு அடிக்கும் மேலாக மண்ணால் மூடப்பட்டு இருந்தன. அப்படி மூடப்பட்டு இருந்த மணலை அகற்றும்போது அடியில் புதையுண்ட யானையின் அழகிய சிலையைத்தான் நீங்கள் படத்தில் பார்க்கிறீர்கள்!

வெள்ளிக்கிழமை கனகப்பொடி

டி மாதம் வெள்ளிக் கிழமைகளில் கனகப்பொடி சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.

உலர்ந்த தவிட்டை வெல்லத்தில் குழைத்து, அதை தோசை போல் பரப்பி, தீக்கனலில் சுட்டெடுத்து உண்டாக்குவதே கனகப் பொடி. உலர்ந்த தவிட்டில் வைட்டமின்-பி  ஏராளமுண்டு. வெல்லத்தில் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதுவே, கனகப்பொடியின் சிறப்பு! இதை அம்பாளுக்கு நைவேத்தியமாகப் படைத்துவிட்டுச் சாப்பிடலாம்.

வாசகர்களே!

பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான - பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம்! மேற்சொன்னவற்றில் உலா வரும்  உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!

வலைத்'தலம்'!

இன்னும் .. இன்னும்.. சிலிர்க்க வைக்கும் ஆன்மிகத் தகவல்கள் மற்றும் செய்திகளுக்குwww.vikatan.com, www.facebook.com/SakthiVikatan,