Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
உதவலாம் வாருங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ஸ்ரீ
வராகர், ஸ்வேத (வெள்ளை நிறம்) நிறத்தில் காட்சி தரும் தலம் உள்ளதாமே?! இந்தத் தலத்துக்குச் சென்று, வராகரை வணங்கினால், என்னென்ன பலன்கள் உண்டு? இந்தத் தலம் எங்கே உள்ளது? அல்லது, ஏதேனும் ஆலயத்தில் ஸ்வேத வராக பெருமாளுக்குச் சந்நிதி ஏதும் உள்ளதா? விவரம் தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்.

- வி.சந்திரசேகரன், கும்பகோணம்

நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் தலத்தில், 11 கருட சேவை சிறப்புற நடைபெறுமாம்! இந்த வைபவம் தை மாதத்தில் நடைபெறுவதாக ஒரு சிலரும், புரட்டாசியில் நடைபெறும் என்று ஒரு சிலரும் சொல்கின்றனர். 11 கருட சேவை எப்போது நடைபெறும்? இந்தத் தலத்துக்குச் செல்லும் வழி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்தால் பேருதவியாக இருக்கும்.

- கோட்டை. கோவிந்தராஜ், ஒரத்தநாடு

ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்பாளைக் குறித்துப் பாடப்பட்ட, 'ஆர்யா த்விசதி’, மற்றும் துர்வாச முனிவர் இயற்றிய 'ஸ்ரீலலிதா ஸ்தல ரத்னம்’ எனும் ஸ்லோகம் கொண்ட நூல்கள் எங்கு கிடைக்கும்? தமிழில் உள்ளதா? தகவல் அறிந்த அன்பர்கள், உதவினால் மகிழ்வேன்.

- ஆர்.சுந்தர், சென்னை-61

ராவணன், சிவபெருமானைப் போற்றித் துதித்த சம்ஸ்கிருத ஸ்லோகம் எந்த நூலில் உள்ளது? எங்கு கிடைக்கும்? அல்லது, எவரிடமேனும் இருந்தால், பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள். மேலும், 1970 மற்றும் 71-ஆம் வருட பஞ்சாங்கத்தில், ஐப்பசி மாதங்களுக்கான பக்கங்கள் மட்டும் தேவைப்படுகிறது. பிரதி அனுப்பி உதவுங்களேன்.

- என்.சாம்பசிவமூர்த்தி, வேலூர்-9

நான் சிறு வயதாக இருக்கும் போது, என்னுடைய தாயார், 'கங்கை குளிர் சந்திரனைத் தலையில் அணிந்த சிவனே...’ என்ற பாடலை அடிக்கடி பாடுவார். இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது? அல்லது வாசக அன்பர்கள், இந்தப் பாடலைப் பிரதி எடுத்து அனுப்பி உதவினால் நன்றி உள்ளவளாக இருப்பேன்!

- புனிதவதி தயாளன், ஓச்சேரி

ஸ்ரீராம நவமி நன்னாளை முன்னிட்டு, 'ராம ராம’ நாமம் (ஸ்ரீராமஜெயம்) எழுதுவதற்கு வசதியாக நோட்டுப் புத்தகம் தயார் செய்து வைத்துள்ளேன். ஸ்ரீராம பக்தர்களுக்கு இந்த நோட்டினை இலவசமாக வழங்குவதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். தேவைப்படும் அன்பர்கள், தொடர்பு கொள்ளலாம்.

- பி.வி.வேங்கடரமணன், 25/15, பாலசுப்பராயலு வீதி,
ஸ்ரீராஜகணபதி கோயில் அருகில், ஈரோடு-1 
 

உதவலாம் வாருங்கள்!

'தண்டலம்’ எனும் தலம் எங்கே உள்ளது என்று அரியானா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.நாராயணன் கேட்டிருந்தார்.

'சென்னை- அரக்கோணம் வழியில், செவ்வாய்பேட்டையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது தண்டலம். இங்கு ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீதடுத்தாளீஸ்வரர் ஆலயம் உள்ளது. நாக தோஷ நிவர்த்தி தலம் இது’ என, சென்னை வாசகி எஸ்.லட்சுமிதேவி தெரிவித்துள்ளார்.  

உதவலாம் வாருங்கள்!

'கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்குவதற்கான ஸ்லோகம், தலம், வழிபாடு ஏதும் உள்ளதா?’ என்று, கோவை வாசகர் நரசிம்மன் கேட்டிருந்தார்.

• 'கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி பெருமாளை வணங்கினால், கண் நோய் நீங்கும்; ஆடுதுறை - சூரியனார்கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் பலன் கிடைக்கும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை (தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமையில்) சொல்லி வழிபட, குணம் பெறலாம்’ என சென்னை கிருஷ்ண. ராஜகோபால் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீசக்ரபாணி ஸ்தோத்திரத்தையும் அனுப்பியுள்ளார்.

• 'கும்பகோணம் - திருப்பனந்தாளில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சேங்கனூருக்கு அருகில் அமைந்துள்ளது திருவெள்ளியங்குடி. இந்தத் தலத்தின் ஸ்ரீகோலவில்லி ராமரையும் அங்கேயுள்ள நேத்ர தீபத்தையும், வெள்ளிக்கிழமையில் வழிபட்டால், கண்ணொளி பெறலாம்’ என, வாசகர்கள் சென்னை தேவநாதன், செங்கல்பட்டு கோமதி ரங்கசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

• சுந்தரமூர்த்தி நாயனாரின் 'ஆலந் தானுகந் தமுது செய்தானை’ எனத் துவங்கும் 11 பதிகங்கள் மற்றும் 'மீளா அடிமை உமக்கே ஆளாய்...’ எனத் துவங்கும் 11 பதிகங்களைப் பாடி, சிவனாரை வழிபட, கண் நோய் நீங்கும் என கோவை வே.குமுதினி மற்றும் கரூர் ராஜாமணி ஆகியோர் தெரிவித்ததுடன், அந்தப் பதிகங்களின் பிரதியையும் அனுப்பியுள்ளனர்.

• திருவாரூர் அருகில் உள்ள சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்காரவாசலில் உள்ள ஈசனை வணங்கி, ஞானசம்பந்தரின் பதிகத்தைப் பாடினால், பலன் உண்டு என அந்தப் பதிகத்தை அனுப்பியுள்ளார், சென்னை வாசகி ஸ்வர்ணா நாராயணன்.

உதவலாம் வாருங்கள்!

• சென்னை- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது மதுரமங்கலம். இங்கே எம்பார் சுவாமியின் ஆலயத்தில், ஸ்ரீகூரத்தாழ்வானின் 'ஸ்ரீவரதராஜஸ்தவம்’ ஸ்தோத்திரத்தைச் சொல்லி, வணங்கி வழிபட, கண் உபாதைகள் யாவும் நீங்கும் என்று சென்னை எஸ்.எஸ்.ராமசாமி, கற்பகம், குடந்தை சந்திரசேகரன், மதுரை மீனாட்சி பட்டாபிராமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

• நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருவீழிமிழலை தலத்து இறைவனை வணங்கினால், கண் கோளாறுகள் நீங்கும்;  திருவள்ளூர் மாவட்டம், திருமணம் தலத்தில் உள்ள கருடக்கொடி சித்தரை வழிபட்டால், பலன் கிடைக்கும்; 'கண்ணொளி தரும் கண்கண்ட தெய்வங்கள்’ எனும் நூலை, ஆனந்த நிலையம், (ரங்கநாதன் தெரு, தி.நகர், சென்னை-17) எனும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று விருதுநகர் வாசகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

• 'சமயபுரம் மாரியம்மன் மற்றும் சிவகங்கை - நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடைய நாயகியின் கோயிலில், வெள்ளியில் கண் காணிக்கை செய்து, வழிபட்டால், குணம் பெறலாம்’ என, சென்னை வாசகர் சீனிவாசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism