Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

திருமணம், புதுமனைப் புகுவிழா, சதாபிஷேகம் போன்ற வைபவங் களின்போது, 'திருவாசகம் முற்றோதுதல்’ செய்வார்களாம், சில அன்பர்கள். இவர்கள் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் எங்கு இருக்கின்றனர், அவர்களின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்!

- பா.சௌந்திரபாண்டி, மதுரை-1

ங்களுடைய குலதெய்வம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி. அம்பிகைக்கான துதிப் பாடல்களைப் பாராயணம் செய்ய ஆர்வமாக உள்ளேன். இந்த தோத்திரப் பாடல்கள் தமிழில் புத்தகமாக வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்? அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்.

- ராமலிங்கம், குறிஞ்சிப்பாடி

உதவலாம் வாருங்கள்!

ன்னுடைய தாயார், கடந்த ஐந்து வருடங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். மருந்து-மாத்திரைகள் சாப்பிட்டு வந்தும் குணமாகவில்லை. பக்கவாத நோயில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு  எந்தத் தலத்துக்குச் சென்று வணங்க வேண்டும்? பக்கவாதத்துக்கு எண்ணெய் வழங்கும் ஆலயம் குறித்து படித்ததாக நினைவு. இந்தத் தலம் மற்றும் சொல்லவேண்டிய பதிகம் ஆகியவை குறித்து அறிந்த அன்பர்கள், தகவல் தந்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.

- எஸ்.சேதுராமன், போடி

ருபது வருடங்களுக்கு மேலாக, சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆன்மிக நூல்களை இதுவரை சேகரித்து வைத்துள்ளோம். இந்தப் புத்தகங்களை, புதிதாக நூலகம் துவங்கும் அன்பர்களுக்கு மட்டுமே வழங்குவது என்று முடிவு செய்துள்ளோம். அப்படி யாரேனும் ஆர்வமாக இருப்பின், சக்தி விகடன் மூலம் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

- ஆர்.சாயிராம், சென்னை-26

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் நாங்கள். சிங்கிலி என்கிற ஆற்றங்கரையில், பேராச்சி அம்மன் கோயில் உள்ளதாகவும், அந்த அம்மன் சக்தி வாய்ந்த தெய்வம் என்றும் சிறுவயதில் கேட்டதாக நினைவு. இந்தக் கோயில் எங்கே உள்ளது? எப்படிச் செல்வது? கோயில் அர்ச்சகர் அல்லது பூசாரியின் தொலைபேசி எண் என்ன? இது குறித்து விவரங்கள் அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவுங்களேன்.

- குமார், சென்னை-24

உதவலாம் வாருங்கள்!

'ஸ்ரீஎல்லம்மன் கோயில் எங்கு உள்ளது? இந்த அம்மன் எங்கள் குலதெய்வம் என்கின் றனர். இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஊத்துக்காடு எனும் கிராமத்தில் இந்த அம்மன் ஆலயம் இருப்பதாகச் சொல் கின்றனர்’ என்று சென்னை வாசகி காயத்ரி, கடந்த 26.7.11 இதழில் கேட்டிருந்தார்.

சென்னை - காஞ்சிபுரம் சாலையில், வாலாஜாபாத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு. இங்கே, ஸ்ரீஎல்லம்மன் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் என சென்னை வாசகர் பி.எஸ்.ராஜன் தெரிவித்துள்ளார்.

'அஷ்டபதியை முழுவதுமாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதுபற்றிய சி.டி., அல்லது புத்தகம் எங்கு கிடைக்கும்? அஷ்டபதியை போதிக்கிற வகுப்புகள் எங்கு நடைபெறுகின்றன?’ என்று கடந்த 4.10.11 இதழில், கும்மிடிப்பூண்டி வாசகி மீனா கணபதி கேட்டிருந்தார்.

##~##
'அஷ்டபதி குறித்து ஏராளமான சி.டி-க்கள் வெளியாகி உள்ளன. இணைய தளம் வழியே, பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் உள்ளன. அல்லது, இணைய தளத்தில் அப்படியே கேட்டு மகிழவும் செய்யலாம்.  ஆனால் இதுகுறித்த புத்தகங் கள்  வெளியாகியுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ள சென்னை வாசகி ராஜேஸ்வரி மதி, இணையதளத்தில் இருந்து சில தகவல்களை எடுத்து அனுப்பியுள்ளார். இது, வாசகி மீனா கணபதிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

'அஷ்டபதி’ புத்தகம், சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள கிரி டிரேடிங் கம்பெனி கடையில் கிடைக்கும். மேலும், சென்னை தி.நகரில் உள்ள லிப்கோ பதிப்பகத்திலும் கிடைக்கிறது. அதேபோல், உடையாளூர் கல்யாணராம பாகவதர் பாடிய அஷ்டபதி சி.டி., பல கடைகளில் கிடைக்கின்றன. மேலும், ஸ்ரீசீதா கல்யாணம், ஸ்ரீராதா கல்யாணம் நடைபெறும்போது, அவற்றைக் கூர்ந்து கவனித்தால், மிக எளிதில் அஷ்டபதியைக் கற்றுக் கொள்ள முடியும் என்று சென்னை வாசகி வி.ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

'வாதித்த சூரரை வடிவேல் எடுத்து... எனத் தொடங்கும் பாடலை சிறுவயதில் பாடியுள்ளேன். தற்போது இந்தப் பாடல் மறந்துவிட்டது. இந்தப் பாடல் எந்தப் புத்தகத்தில் உள்ளது? அல்லது, பாடலை அறிந்த அன்பர்கள் எழுதி அனுப்பி உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று கடந்த 4.10.11 இதழில் சென்னை வாசகி ஆர்.கலாவதி கேட்டிருந்தார்.

'அற்புதமான இந்தப் பாடலை, என் 12-வது வயதில், குருவின் மூலம் கற்றுக் கொண்டேன். என்னுடைய குரு நாதர் எழுதிக் கொடுத்த நோட்டுப் புத்தகத்தில் இருந்து அந்தப் பாடலை எழுதித் தருகிறேன். மற்றபடி, இந்தப் பாடல் எந்தப் புத்தகத்தில் உள்ளது என்கிற விவரம் தெரியவில்லை, என்று சென்னை வாசகி பானுமதி பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அவர் எழுதி அனுப்பியுள்ள அந்தப் பாடல், வாசகி கலாவதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'காணக் கண் கோடி வேண்டும் காபாலி நின்பவனி...’ எனத் துவங்கும் பாடலை சிறுவயதில் பாடியிருக்கிறேன். ஆனால், தற்போது அந்தப் பாடல் மறந்துவிட்டது. இந்தப் பாடலைப் பாடினால், மனம் அப்படியே அமைதியாகி விடும். அந்தப் பாடல் எந்தப் புத்தகத்தில் உள்ளது? அல்லது அந்தப் பாடலை அறிந்த வாசக அன்பர்கள், எழுதி அனுப்பி உதவினால் மகிழ்வேன் என்று திருச்செங்கோடு வாசகி ஹெச்.பத்மாவதி கடந்த 6.9.11 இதழில் கேட்டிருந்தார்.

காம்போதி ராகத்தில் அமைந்த மிக அற்புதமான இந்தப் பாடலைப் பாடினாலோ அந்தப் பாடலைக் காதாரக் கேட்டாலோ... நம் துக்கமெல்லாம் பறந்தோடிவிடும் என்பது உண்மைதான் என்று தெரிவித்துள்ள சென்னை வாசகி ஆர்.பத்மா, அந்தப் பாடலை எழுதி அனுப்பியுள்ளார்.

காணக் கண்கோடி வேண்டும்
காபாலி நின்பவனி   (காண)

மாணிக்கம் வைர முதல் நவரத்னாபரணமும்
மலர் மார்பன் பலமலர் மாலைகளும் முகமும்
மதியோடு தாராகணம் நிறையும் மலர்
வாண்மோ கமல வனமோ என் மன
மயங்க அகலங்க அங்கம் யாவும்
குலுங்க ஆபாங்க அருள் மழை பொழிய   (காண)

மாலோடே என்பணியும் மண்ணும் விண்ணும் பரவும்
மறையாகமும் துதிக்கும் இறைவன் அருள் பெறவே
காலம் செல்லுமுன் அனுதினமும்
நலம் கருதிக் கண்ணாரக் கண்டு உள்ளம்
உருகப்பனிமலர் காண ஆறுமுகனும்
கணபதியும் சண்டேஸ்வரனும் சிவ
கணமும் தொடர் கலைவாணி திருவும் பணி
கற்பக நாயகி வாமனதிகார நந்தி சேவைதனை (காண)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு