Published:Updated:

கடலூர் அருகே கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் கண்டெடுப்பு!

விஷ்ணு சிற்பம்

மேலே உள்ள கையில் சக்கரமும், கீழ்ப்பகுதி உள்ள கையில் அபய முத்திரையும், இடது புறத்தில் உள்ள கைகள் இரண்டில் மேற்புற கையில் சங்கும், மற்றொரு கையில் இடுப்பில் வைத்தவாறு கம்பீரமான தோற்றத்தில் உள்ளார். மார்பு பகுதியில் பூணூல் காட்டப்பட்டுள்ளது.

கடலூர் அருகே கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் கண்டெடுப்பு!

மேலே உள்ள கையில் சக்கரமும், கீழ்ப்பகுதி உள்ள கையில் அபய முத்திரையும், இடது புறத்தில் உள்ள கைகள் இரண்டில் மேற்புற கையில் சங்கும், மற்றொரு கையில் இடுப்பில் வைத்தவாறு கம்பீரமான தோற்றத்தில் உள்ளார். மார்பு பகுதியில் பூணூல் காட்டப்பட்டுள்ளது.

Published:Updated:
விஷ்ணு சிற்பம்

கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கள ஆய்வு மேற்கொண்டபோது குளத்தின் பக்கத்தில் உள்ள விஷ்ணு சிற்பத்தைக் கண்டறிந்தார். அச்சிற்பத்தைச் சுத்தம் செய்து ஆய்வுசெய்தபோது அது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால விஷ்ணு சிற்பம் எனத் தெரியவந்துள்ளது.

விஷ்ணு சிற்பம்
விஷ்ணு சிற்பம்

கடலூர் அருகே 10 கி.மீ தொலைவில் உள்ள தாடிநத்தம் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கள ஆய்வு மேற்கொண்டிருந்த போது அவ்வூரைச் சேர்ந்த அழகர் என்பவர் அருகில் உள்ள களையூர் குளத்தின் கரைபகுதியில் பழைய சிற்பம் ஒன்று இருப்பதாகத் தகவல் தெரிவிக்க, உடனே தனது களப்பணியை களையூர் குளக்கரை பகுதிக்குச் சென்று ஆய்வேற்கொண்டார். அப்போது குளத்தின் பக்கத்தில் உள்ள தண்ணீர் நிலை தொட்டியின் அருகில் சுமார் 5 அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் கம்பீரமான தோற்றத்தில் சிற்பம் ஒன்று காணப்பட்டது.சிற்பம் முழுவதையும் சுத்தம் செய்த பிறகு அது சுமார் 1,200 வருடங்கள் பழைமையான விஷ்ணு சிற்பம் என்று கண்டறியப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விஷ்ணு பகவான் திருவுருவ சிற்பத்தில் தலையில் மணி மகுடமும், இரண்டு காதுகளிலும் பூட்டுக் குண்டலமும், கழுத்தில் வனமாலையும் அணிந்துள்ளார். வலது புறத்தில் உள்ள இரண்டு கைகளில் மேலே உள்ள கையில் சக்கரமும், கீழ்ப்பகுதி உள்ள கையில் அபய முத்திரையும், இடது புறத்தில் உள்ள கைகள் இரண்டில் மேற்புற கையில் சங்கும், மற்றொரு கையில் இடுப்பில் வைத்தவாறு கம்பீரமான தோற்றத்தில் உள்ளார். மார்பு பகுதியில் பூணூல் காட்டப்பட்டுள்ளது. இடுப்பின் மேல் உதரபந்தம் என்ற அலங்கார அணியும், அரைப்பட்டிகையும் இடுப்பணியாக காட்டப்பட்டு நின்றநிலையில் அருள்பாலிக்கிறார் விஷ்ணு. இந்த சிலையை அவ்வூரில் ஒரு குடும்பத்தினர் வழிபட்டுப் பராமரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த சிற்பத்தின் தொன்மைகுறித்த ஆய்வாளர்கள் தெரிவித்தபோது அந்த ஊர் மக்கள் ஆச்சர்யத்துடன் சென்று அதை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இம்மானுவேல்
இம்மானுவேல்

இது குறித்து நம்மிடம் பேசிய தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல்

"இச்சிற்பத்தைப் பார்க்கும்போது இது நீர்நிலை வழியாக வந்து இருக்க வாய்ப்புகள் குறைவு என்றும் இந்த பகுதியில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் கோயிலிருந்திருக்கலாம் எனவும் பின்னாளில் அழிந்திருக்கக் கூடும் என்றார். எனவே இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்து பார்த்தால் கோயிலிருந்ததற்கான தடையம் கிடைக்கலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism