Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம் வாருங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ங்களுடைய பூர்வீகம் சோளிங்கர். இரண்டு தலைமுறைகளாக திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதியையே குலதெய்வமாகக் கொண்டு, வணங்கி வழிபட்டு வருகிறோம். இந்த நிலையில், சமீபத்தில் பிரஸ்னம் பார்த்த போது, சோளிங்கரில் இருந்து தென்மேற்குத் திசையில், அழகிய பெருமாள் கோயில் ஒன்று இருப்பதாகவும், அந்தப் பெருமாளே எங்களின் குலதெய்வம் என்றும் தெரிவிக்கப் பட்டது. சோளிங்கரில் இருந்து தென்மேற்கு திசையில் உள்ள பெருமாள் கோயில்கள் பற்றிய விவரங்கள் தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவினால், நீண்ட காலமாக விடுபட்டிருந்த குலதெய்வ வழிபாட்டைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

- வி.என்.லட்சுமி, திருநின்றவூர்

'ஸ்ரீதேவி நாராயணீயம்’ படித்து, அதில் உள்ள ஸ்லோகங்களையும் அர்த்தங்களை யும் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஸ்ரீதேவி நாராயணீயத்தை விளக்கவுரையுடன் அழகுத் தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா? எந்தப் பதிப்பகத்தில் இருந்து அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது? எங்கு கிடைக்கும்? விவரம் தெரிந்த வர்கள் தகவல் தாருங்களேன்.

- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61

திருவண்ணாமலை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமத்துக்கு பொருளுதவியைத் தர வேண்டும் என்று முடிவு செய்து, கடந்த சில வருடங்களாக, கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து வருகிறோம். எந்த முகவரிக்கு அனுப்புவது, எப்படி அனுப்புவது எனத் தெரியவில்லை. இதுபோல் ஏற்கெனவே நிதியுதவி செய்துள்ள அன்பர்கள், இதற்கான விவரத்தைத் தந்து உதவினால், ஆஸ்ரமத்துக்கு உதவி செய்த மனநிறைவு கிடைக்கும் எங்களுக்கு.

- ஆர்.நடராஜன், கோவை

##~##
டந்த சில வருடங்களாக, குடும்பத்தில் சில குழப்பங்கள்; வேதனைகள். வேலை பறிபோய், குடும்பத்தின் அன்றாடச் செலவுக்குக்கூட கஷ்டப்படுகிற அவலம். போதாக்குறைக்கு, எங்கள் மகளின் திருமணமும் தள்ளிப்போய்விட்டது. வாழ்கிற ஆசையும் போய், வாழவும் வழி தெரியாமல் தத்தளித்து நிற்கிறோம். 'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்பார்கள். இழந்த நிம்மதி, சந்தோஷம், வேலை, செல்வம் ஆகியவற்றைப் பெறுவதற்கு வழிபாடுகள் ஏதும் உண்டா? எப்படி வழிபட வேண்டும்? இதற்கான ஸ்லோகங்கள் ஏதும் உள்ளதா? இதுகுறித்து அறிந்த வாசக அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்

'ஸ்ரீதிரிபுரா ரஹஸ்யம்’ எனும் பகுதியில், 'நமோ லக்ஷ்மியை மஹா தேவ்யை’ என்று தொடங்கும் ஸ்லோகத்தை, சிறு வயதில் முழுவதுமாகப் படித்து ஜபித்து வழிபட்டுள்ளேன். தற்போது அந்த ஸ்லோகம் மறந்துவிட்டது. ஸ்ரீதிரிபுரா ரஹஸ் யம் எனும் நூல் எங்கு கிடைக்கும்? எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்? மேலும், ஸ்ரீபைரவர் குறித்து சித்தர்கள் எழுதிய பாடல்கள் உள்ளதாமே? இந்தப் பாடல்கள் விளக் கங்களுடன் புத்தகமாக வந்துள்ளதா? எங்கு கிடைக்கும்? விவரம் அறிந்தவர்கள், தகவல் தந்து உதவினால், படித்து வழிபட்டு பயன்பெறுவோம்!

- பி.ஜே.ஹேமலதா, சென்னை-106

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'ஸ்வேத வராக பெருமாள் அருள்பாலிக்கும் திருத்தலம் எங்கே உள்ளது? இந்தத் தலத்துக்குச் சென்று வணங்கி வழிபட, ஆவலாக உள்ளேன்’ என்று, கடந்த 11.1.11 இதழில், உதவலாம் வாருங்கள் பகுதியில், கும்பகோணம் வாசகர் கூந்தலூர் வி.சந்திரசேகரன் கேட்டிருந்தார்.

வடமதுரா எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில், அழகிய பிருந்தாவனம் அமைந்துள்ளதை அனைவரும் அறிவோம். இங்கே, ஸ்ரீதுவாரகாதீசர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், ஸ்ரீஆதிவராகமூர்த்தி எனும் திருநாமத்துடன் தனிச் சந்நிதியில் இருந்தபடி சேவை சாதிக்கிறார் ஸ்ரீஸ்வேத வராகர்.

ஸ்ரீஸ்வேத வராகரை வணங்கினால், கல்வி ஞானம் கிடைக்கப் பெறலாம். திருச்சி மண்ணச்சநல்லூருக்கு அருகில் உள்ள திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாக்ஷ பெருமாள் திருத்தலத்தில், உத்ஸவ மூர்த்தியாக ஸ்ரீஸ்வேதவராக பெருமாள் சேவை சாதிக்கிறார். இவரை வழிபட்டால், கல்வி ஞானம் பெறலாம்; திருமணத் தடைநீங்கும்; கல்யாண வரம் கைகூடி வரும் என்று மதுரை வாசகர் சாயி அச்சுத், சென்னை வாசகி ஜி.நீலா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

'ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் நாமாவளிகள் கொண்ட புத்தகம் ஏதும் வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்?’ என்று, கீழநெம்மங்கோட்டை வாசகர் க.சுரேஷ் கேட்டிருந்தார்.

திருச்சி கோர்ட்டுக்கு அருகில் ஸ்ரீஐயப்பன் கோயில் உள்ளது. இங்கிருந்து செயல்படும், திருச்சிராப் பள்ளி ஸ்ரீஐயப்ப சங்கம் (லாசன்ஸ் சாலை, திருச்சி) என்ற முகவரியில் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் நாமாவளிகள் கொண்ட புத்தகம் கிடைக்கும் என்று திருச்சி வாசகர் வி.எஸ்.வேலாயுதன் தெரிவித்துள்ளார்.

'கடந்த சில வருடங்களாக, தீராத முதுகுவலியால் பெரிதும் அவதிப் படுகிறேன். மாத்திரை- மருந்துகள் உட்கொண்டும் எந்தப் பலனுமில்லை. இதிலிருந்து விடுபட ஸ்லோகங்கள் ஏதும் உள்ளதா? எந்தப் புத்தகத்தில் உள்ளது? எங்கு கிடைக்கும்? அல்லது, ஸ்லோகம் தெரிந்த வாசக அன்பர்கள், ஸ்லோகத்தைப் பிரதி எடுத்து அனுப்பி வைத்தால், மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்’ என்று, கடந்த 19.4.11 இதழில், உதவலாம் வாருங்கள் பகுதியில், பெங்களூரு வாசகர் மணிபரமேஸ்வரன் கேட்டிருந்தார்.

ஸ்ரீசௌந்தர்ய லஹரியில், 'மஹீம் மூலாதாரே’ என்று துவங்கி, 'விஹரஸே’ என்று முடியும் ஸ்லோகம் உள்ளது. இது ஒன்பதாவது ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்து தேவியை வணங்கி வந்தால், முதுகு மற்றும் உடலின் சகல வலிகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்; தேக ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று சென்னை வாசகர் ஏ.எஸ்.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

ங்களின் மாப்பிள்ளைக்கு முகத்தில் சமீப காலமாக வெண்புள்ளிகள் படர்ந்துள்ளன. உரிய மருந்துகள் பயன்படுத்தியும் குணமாகவில்லை. இந்தப் பிரச்னையில் இருந்து எங்கள் மாப்பிள்ளை விடுபட, வழிபாடுகள், ஸ்லோகங்கள் ஏதேனும் உள்ளதா?’ என்று, கடந்த 19.4.11 இதழில் ஸ்ரீரங்கம் வாசகி சரஸ்வதி கேட்டிருந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத்தோப்பு. இந்த ஊருக்கு அருகில் ஸ்ரீகாட்டழகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று, ஸ்ரீகாட்டழகரை வழிபட்டு வந்தால், விரைவில் நிவாரணம் பெறலாம் என்று, கேரள மாநிலம் பாலக்காடு வாசகர் சி.கே.லெட்சுமண சர்மா தெரிவித்துள்ளார்.

திருவாரூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது தலையாலங்காடு. இந்தத் தலத்தில் ஸ்ரீநடனேஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இந்தக் கோயில் தீர்த்தத்தில் நீராடி, அப்பர் அருளிய பதிகத்தை ஓதி வழிபட... விரைவில் நிவாரணம் கிடைப்பது உறுதி என்று, திருச்சி வாசகர்கள் சிவ.பாலகுமாரன், பி.கனகசபாபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனுப்பிய ஸ்லோகம் இதோ...

மெய்த்தவத்தை வேதத்தை வேதவித்தை
விளங்குகள மாமதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்தவமே யுழிதந்த ஏழையேனை
இடர்க்கடலில் வீழாமே ஏறவாங்கி
பொய்த்தவத்தவர் அறியாதநெறி நின்றானை
புனல் கரந்திட்டு உமையோடு ஒருபாக நின்ற
தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism