தங்கம் அருளும் பிள்ளையார்!

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 22 கி.மீட்டர் தொலைவில், ‘சிறுகமணி' எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புற்று மாரியம்மன் திருக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார், ஐந்து முகங்கள் கொண்ட ‘பஞ்சமுக விநாயகர்’. இவருடைய திருநாமம்தான் ‘சொர்ண ஆகர்ஷண பஞ்சமுக விநாயகர்’. ‘சொர்ணம்’ என்றால் தங்கம்; ‘ஆகர்ஷணம்’ என்றால் ‘வழங்குதல்’ என்று பொருள். பக்தர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொர்ணத்தை ஈர்த்தளிக்கும் வல்லமை கொண்டவர் ஆதலால், இப்பெயர் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர் ஊர்ப் பெரியவர்கள்.

‘ஐ’ என்ற எழுத்து ஐந்து, அழகு மற்றும் தலைவனைக் குறிக்கும். இந்த உலகம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பெரும்பூதங்களால் ஆனது. ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் (உடல்) உள்ளது’ என்பார்கள். உலகிலும், உடலிலும் ஆட்சி செய்யும் ஐம்பூதப் பொறிகளே ஐந்து தத்துவங்களின் அடிப்படை ஆதாரங்களாக உள்ளன. இந்த ஐந்து பூதங்களின், ஐந்து தத்துவங்களின் விளக்கமே பஞ்ச முக விநாயகர்.

தங்கள் இல்லங்களில் பொன், பொருள் குவிய விரும்புவோர் சொர்ண ஆகர்ஷண பஞ்ச முக விநாயகரை தரிசித்து வேண்டி, அருள் பெற்று உய்யலாம்.

ர.புஷ்பலதா படம்: என்.ஜி.மணிகண்டன்

புளியமரத்தில் பிள்ளையார்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள நெடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு புளியமரத்தில், பலரும் அதிசயிக்கும் வகையில் பிள்ளையாரின் திருவுருவம் அமைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 16 வருடங்களுக்கு முன்பு, இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் அமைந்திருக்கும் புளியமரத்தைச் சுற்றி, சிறுவர்கள் கூட்டமாக விளையாடி மகிழ்வர். அப்போது அவர்களில் சிலர், புளியமரத்தின் நிழலில், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை வைத்து விளையாட்டாக வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். சிறுவர்களின் அந்த வழிபாடு தினமும் தவறாமல் நடைபெற்று வந்தது.

அப்படி இருக்கையில், திடீரென்று ஒருநாள், அவர்கள் வணங்கி வந்த களிமண் பிள்ளையார் அமைந்திருக்கும் புளியமரத்தில், பிள்ளையாரின் உருவம் அச்சு அசலாக உருவாகியிருப்பதைக் கண்டிருக்கிறார்கள். இதை உடனே அவர்கள் ஓடிப் போய் ஊர் மக்களிடம் தெரிவிக்க, அவர்களும் திரண்டு வந்து, அந்த அதிசய நிகழ்வைக் கண்டு சிலிர்த்திருக்கிறார்கள். உடனே அந்தப் பிள்ளையாருக்குப் பொங்கல் வைத்து, பால் குடம் எடுத்து, வெகு சிறப்பாக ஒரு விழா வும் எடுத்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இந்த விநாயகர் ‘புனித விநாயகர்’ என அழைக்கப் படுகிறார்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில், இந்தப் புளியமரத்துப் பிள்ளையாரை வணங்கினால் நோய் நொடி நீங்கி குன்றாத வளத்துடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ச.புகழேந்தி, படம்: தே.சிலம்பரசன்