Published:Updated:

எங்கள் வீட்டு பிள்ளையார்!

எங்கள் வீட்டு பிள்ளையார்!
பிரீமியம் ஸ்டோரி
எங்கள் வீட்டு பிள்ளையார்!

எங்கள் வீட்டு பிள்ளையார்!

எங்கள் வீட்டு பிள்ளையார்!

எங்கள் வீட்டு பிள்ளையார்!

Published:Updated:
எங்கள் வீட்டு பிள்ளையார்!
பிரீமியம் ஸ்டோரி
எங்கள் வீட்டு பிள்ளையார்!
எங்கள் வீட்டு பிள்ளையார்!

பரிசாகக் கிடைத்த பிள்ளையார்கள்!

நான் கே.ஜி. ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.  ஆனாலும் என்னிடம் படித்தவர்கள் பலரும் முகநூல் வழியாக இன்றைக்கும் தொடர்பில் உள்ளனர். அவர்களில் சிலர், வேலை கிடைத்ததும் தங்கள் முதல் மாதச் சம்பளத்தில், எனக்கு ஏதேனும் பரிசுகள் வாங்கித்தந்து மகிழ்வார்கள். நானும் நெகிழ்ச்சியுடன் அவற்றை ஏற்றுக்கொள்வேன். அதேபோல் மிதுன், செளகந்திகா, மஞ்சு ஆகிய மூவரும் வெவ்வேறு தருணங்களில் பரிசளித்தார்கள்.

ஆனால், சொல்லி வைத்தது போல் மூவருமே பிள்ளையாரையே தந்திருந்தார்கள். மூன்று விநாயகர்களும் மூன்று விதம்; கொள்ளை அழகு. ‘பிள்ளையாரைப் பரிசளிக்கலாம்’ என்ற எண்ணம் மூவருக்குமே தோன்றியது எப்படி என்று எனக்கு ஆச்சர்யம். இந்தக் கேள்வியை அவர்களிடமே கேட்டேன்.

‘‘நீங்கள்தான் எங்களின் கைப்பிடித்து முதன் முதலில்  எழுத சொல்லிக் கொடுத்தீர்கள். ஆகவே, உங்களுக்குப் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்ததும் முழுமுதற் கடவுளான பிள்ளை யாரே நினைவுக்கு வந்தார். இந்த விஷயத்தை ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்துகொள்ளவும் இல்லை. ஆனால், எங்களுக்குள் உங்களைப்பற்றிய அபிப்ராயம் ஒன்றுதான் என்பதை சொல்லா மல் சொல்கிறார்கள் இந்தப் பிள்ளையார்கள்’’ என்று அவர்கள் கூறியபோது, மிகவும் நெகிழ்ந்துபோனேன்.

இந்த வருடம் சதுர்த்தி பூஜையில், அந்தப் பிள்ளைகள் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையோடு, மூன்று பிள்ளையார்களையும் பூஜையில் வைக்க எண்ணியுள்ளேன். அவர்களின் அன்புக்கு முன்னால் உலகில் எதுவும் இல்லை என்பதை உணர்த்திவிட்டார்கள் இந்த விநாயகர்கள் மூவரும்!

-  பானு பெரியதம்பி, சேலம்

எங்கள் வீட்டு பிள்ளையார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வல்லப விநாயகர்

எங்கள் மகனுக்கு, ‘அருண் விக்னேஷ்’ என்ற பெயர் வைக்கக் காரணமே, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிள்ளையார் மீதான பக்திதான். அதற்கேற்ப, வல்லபையுடன் கூடிய விநாயகர் படம் ஒன்று தற்செயலாக கிடைத்தது. அவரால் பல நன்மைகள் நடந்தது எங்கள் வீட்டில். ஒருமுறை, வேலைப்பளு காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. பரிசோதனையில் மாரடைப்பு எனத் தெரியவந்தது. ஆனாலும் வல்லபகணபதியின் அருளால், மாத்திரை மருந்துகளிலேயே நலம் பெற்றேன். அந்த தருணத்தில் என் மனைவிக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்திருந்தன. நானும் படுத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். ஆனால்,  பிள்ளையார் எங்களைக் காப்பாற்றிவிட்டார். அதேபோன்று, கோவையில் உள்ள இடையர் வீதி, கூப்பிடு விநாயகர் துணையும் எங்களுக்கு எப்போதும் உண்டு.

- சி.வி.அனந்தராமன்,  சென்னை-47

எங்கள் வீட்டு பிள்ளையார்!

செல்ல கணபதி... சிந்தூர கணபதி!

அது 1992–ம் வருடம்.  என் தகப்பனார் வேதாப்யாஸம் செய்தவர். ஒருமுறை ஒரு வீட்டில் கணபதி ஹோமத்துக்காக அழைத்திருந்தார்கள். திரும்பும்போது மிக வருத்தத்துடன் வந்தார். சிறிது நேரம் எவருடனும் பேசவில்லை. பிறகு அம்மாவை அழைத்து விவரம் கூறினார்.

அந்த வீட்டில் ஹோமம் நடத்தியவர்கள் கிரமப்படியும் சிரத்தையுடனும் செய்யவில்லை என்றும், அதைப் பார்த்ததால், அடுத்த பன்னிரு மாதங்களுக்கு சதுர்த்தி அன்று நம் வீட்டில் கணபதி ஹோமம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். அதேபோல் செய்யவும் செய்தார். 12-வது மாதம் ஹோமம் முடித்து, பூஜை அறையிலிருந்து வெளியே வந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.  அதேநேரம் மும்பையில் இருந்து என் அண்ணாவின் நண்பர் ஒருவர் வந்தார். அவர் என் அப்பாவை நமஸ்காரம் செய்துவிட்டு, பெட்டி ஒன்றைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்த அப்பா ஆனந்த அதிர்ச்சியில் கண்கள் குளமாக, வாயடைத்துப் போனார்.  பெட்டியில் அழகான சிந்தூரவர்ண கணபதி. அப்பாவின் பூஜைக்குப் பரிசாக எங்கள் வீட்டுக்கு வந்த கணபதி, அன்று முதல் இன்றளவும் பூஜை அறையில் முதன்மையாக வீற்றிருக்கிறார் எங்கள் செல்ல கணபதி. 

- ஸ்ரீவிஜயா நாராயணன், சென்னை-88.

திருட்டுப் போன பிள்ளையார்!

எங்கள் வீட்டு பிள்ளையார்!22 வருடங்களுக்கு முன், எங்கள் புது வீட்டுடன் இணைத்து விநாயகர் கோயிலும் அமைத்து, கும்பாபிஷேகம் செய்தோம். புது வீட்டுக்கும் குடிபெயர்ந்தோம்.

தினம் தினம் பூஜை, வருடா வருடம் வருஷாபிஷேகம்னு எங்க பிள்ளையாரைக் கொண்டாடி மகிழ்ந்தோம். தொட்டதெல்லாம் துலங்கியது. இந்த நிலையில், 2013-ல் செப்டம்பர் 5 அன்று எங்கள் வீட்டு விநாயகர் திருட்டுப்போய்விட, ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது. பிள்ளையை தொலைத்தது போன்று  தவித்துப்போனோம். பிறகு, மதுரை திருமங்கலம் அருகில் வேறொரு விநாயகர் விக்கிரகத்தை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்தோம். எங்களின் பழைய பிள்ளையார், எங்கிருந்தாலும் அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றட்டும்.

- ஜெ.பவள ராஜேஷ்குமார், சிவகாசி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism