Published:Updated:

திருவேங்கடநாதன் திருவருளாலே...

திருவேங்கடநாதன் திருவருளாலே...
பிரீமியம் ஸ்டோரி
News
திருவேங்கடநாதன் திருவருளாலே...

திருவேங்கடநாதன் திருவருளாலே...

திருவேங்கடநாதன் திருவருளாலே...

கான் ஸ்ரீராகவேந்திரரால் வழிபடப் பெற்றவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை எல்லாம் உடனுக்குடன் அருள் புரிபவர் சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாள்.

ஒருகாலத்தில் அவருடைய வழிபாடுகள் நின்று போயின. இந்நிலையில், பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் அகற்ற மறுபடியும் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டுவிட்டார்.

திருவேங்கடநாதரின் அருளாடல்களைப் பற்றியும் அவருக்கு ஓர் ஆலயம் இல்லாமல் இருப்பது பற்றியும், ‘சித்தமெல்லாம் சித்தமல்லி’ என்று சக்தி விகடனில் தொடராக வெளியிட் டோம். தொடர்ந்து கோயில் கட்டுவதற்கான திருப்பணிகளும் தொடங்கப்பட்டன.

ஒரு சிறிய கொட்டகைக்குள் இருந்தபடி பக்தர்களுக்கு அருள்புரிந்த திருவேங்கடநாத பெருமாளின் திருக்கோயில் திருப்பணிகள் தங்குதடை இல்லாமல் நடைபெற்றதே, பெருமாள் நிகழ்த்திய அற்புதங்களால்தான்!

திருப்பணிகள் பற்றி சுந்தரநாராயணனிடம் பேசியபோது...

‘‘சுமார் நாலு வருஷத்துக்கு முன்புதான் திருவேங்கடநாத பெருமாளைப் பற்றி எங்கள் குடும்பத்துக்குத் தெரிய வந்தது. எங்கள் முன்னோரால் வழிபடப் பெற்ற பெருமாளுக்கு
நான்தான் கோயில் கட்ட வேண்டும் என்று ஸ்ரீராகவேந்திரர் உத்தரவு கொடுத்திருப்பதாக பத்மா மாமி கூறினார். அதற்கான பணத்துக்கெல் லாம் பெருமாளே வழி செய்து தருவார் என்றும் அவர் கூறியதால், நம்பிக்கையுடன் திருப்பணிகளைத் தொடங்கிவிட்டேன்.

திருவேங்கடநாதன் திருவருளாலே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறகு சக்தி விகடனில் பெருமாளின் மகிமைகளைப் பற்றி தொடர் வர ஆரம்பித்ததுமே பல ஊர்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும்கூட ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்து அருள் பெற்றிருக் கிறார்கள். திருப்பணிகளுக்கும் முடிந்த அளவு பொருளுதவி செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி சொல் லலாம். பெருமாள் கோயில் திருப்பணிகள் முடிந்துவிட்டது. மகா மண்டபம் மட்டுமே கட்டவேண்டி இருந்தது. மகா மண்டபம் கட்ட 10 முதல் 15 லட்சம் வரை பிடிக்கும் என்றார் ஸ்தபதி. அப்போது என் கையில் பணம் எதுவும் இல்லை.

பொங்கல் அறுவடைக்குப் பிறகு என் நிலத்தில் எள் பயிரிட்டேன். விதை விதைக்கும் போது, ‘பெருமாளே, இப்போது விதைக்கும் எள் நல்ல விளைச்சல் கண்டு, அதில் கிடைக்கும் பணத்தை மகா மண்டப திருப்பணிக்கே கொடுத்து விடுகிறேன்’ என்று சங்கல்பம் செய்துகொண்டேன். பெருமாளின் அருளால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நல்ல விளைச்சல் கண்டு ரூ 11 லட்சம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு மண்டப வேலையைத் தொடங்கியபோது, சென்னையில் இருக்கும் என் பிள்ளைகள், குஜராத்தில் இருந்து திமில் உள்ள பசு வந்திருப்பதாகவும், அதை கோசாலைக்கு வாங்க ரூ.3 லட்சம் தேவைப்படுவதாகவும் கூறினார்கள்.

திருவேங்கடநாதன் திருவருளாலே...

அதற்குச் சிலநாள் முன்புதான் சந்நியாசி போல் வந்த ஒரு பெரியவர் கோசாலையைப் பார்த்துவிட்டு, கோசாலையில் திமில் உள்ள பசு ஒன்று இருந்தால் நல்லது என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதேபோல் என் பிள்ளைகளும் திமில் உள்ள பசு வந்திருப்பதாகச் சொன்னவுடனே, மகா மண்டபத்துக்கு என்று நான் வைத்திருந்த பணத்தில் ரூ. 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தேன். மனதுக்குள் மகா மண்டபத்துக்கென்று வைத்திருந்த பணத்தை பசு வாங்குவதற்காக எடுத்துச் செல்கிறோமே என்று ஒரு தயக்கம். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது சென்னையைச் சேர்ந்த அலமேலு கணேசன் என்ற வயதான ஒரு பெண்மணி வந்தார். தன்னை சக்தி விகடன் வாசகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், சக்தி விகடனில் பெருமாளின் மகிமைகளைப் பற்றி படித்ததாகவும், உடனே பெருமாளிடம் வேண்டிக்கொண்டதாகவும் கூறினார். வேண்டிக்கொண்டது பெருமாளின் அருளால் நிறைவேறிவிடவே, கோயில் திருப்பணிக்கு உதவுவதற்காக வந்திருப்பதாகக் கூறியவர் 2 லட்சத்து 100 ரூபாய்க்கு ஒரு செக்கைக் கொடுத்தார். அன்றைக்கு புரட்டாசி 1-ம் தேதி. இதில் இருந்தே பெருமாளின் அருளைப் புரிந்துகொள்ளலாம். இப்படி பல பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தி தன் திருக்கோயில் திருப்பணிக்கான நிதியை பெருமாளே வரவழைத்துக் கொண்டார்’’ என்று சிலிர்ப்புடன் கூறினார்.

பக்தர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி, தன் திருக்கோயில் திருப்பணிக்கான நிதியை தானே வருவித்துக் கொண்ட திருவேங்கடநாத பெருமாளின் திருக்கோயில் திருப்பணிகள் பூர்த்தியாகி, 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி, தை மாதம் 10-ம் நாள் மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெற இருக்கிறது. திருவேங்கடநாத பெரு மாளின் திருவருளாலே நடைபெற இருக்கும் சம்ப்ரோக்ஷணத்துக்கு நாமும் பொருளுதவி செய்து அருள் பெறலாமே.

- எஸ்.கே

படங்கள்: க.சதீஷ்குமார்