Published:Updated:

உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!

உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!

உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!

உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!

உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!

Published:Updated:
உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!
பிரீமியம் ஸ்டோரி
உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!
உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!

ம்பாள் அருள் புடவைக்கு வாசகியரிடம் அமோக வரவேற்பு. சென்ற இதழில், ஆன்மிகத் துணுக்குகள் அனுப்பி வைக்கும்படியும், அவற்றில் சிறந்ததான 25 துணுக்குகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை எழுதியனுப்பிய 25 வாசகியருக்கு, காவேரிப்பாக்கம் அருள்மிகு காமாட்சியம்மனுக்கு பூஜையுடன் சமர்ப்பிக்கப்பட்ட  மங்கல புடவைகள் அனுப்பிவைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி, தேர்வு செய்யப்பட்ட வாசகியருக்கு திருவருள் பரிசாக அனுப்பவேண்டிய புடவைகள், 20.10.16 வியாழக்கிழமை அன்று, காவேரிப்பாக்கம் அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் திருக் கோயில் - ஸ்ரீகாமாட்சியம்மன் சந்நிதியில் விசேஷ பூஜையுடன் சமர்ப்பிக்கப்பட்டன. அம்பாள் பிரசாதமான அந்த அருள் புடவைகள் தேர்வு செய்யப்பட்ட வாசகியருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இதுவரையிலும் 50 வாசகியர் அம்பாள் அருள் புடவை பெற்றுள்ளனர். புடவை கிடைக்காத வாசகியருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த இதழிலும் தேர்வு போட்டி உண்டு. அதற்கான விதிமுறைகளும், கூப்பனும் எதிர்ப்பக்கத்தில் உள்ளன. நீங்களும் கலந்துகொள்ளுங்கள்; உங்கள் வீடு தேடி வரும் அம்பாள் அருள் புடவை!

‘அம்பாள் தந்த தீபாவளிப் பரிசு!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!



‘‘1970-ல் இருந்தே விகடன் வாசகி நான். அப்பப்ப அவள் விகடனுக்கு எழுதுவேன். ஒரு போட்டியில் 150 ரூபாய் பரிசும் வாங்கியிருக்கேன். இப்போது, சக்திவிகடன் மூலமா அம்பாள் அருள் புடவை கிடைச்சிருக்கு. அதிலும், வீடுதேடி வந்து கொடுத்ததில் ரொம்ப சந்தோஷம்! அருள்மிகு காளிகாம்பாளே அனுப்பிவெச்ச தீபாவளி பரிசாகத்தான் இதை நினைக்கிறேன்.

- எஸ்.சாரதா, சென்னை-61

‘ரொம்ப சந்தோஷமா இருக்கு!’

உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!



‘`பத்திரிகைகள்ல வர்ற பரிசுப் போட்டிகள்ல கலந்துக்கறது இதுதான் முதல் முறை. சக்தி விகடனை ரெகுலரா வாசிச்சிடுவேன். அதுல வர்ற எல்லா பகுதிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்போட்டியில கலந்துக்கும்போதே மனசுக்குள்ள நிச்சயம் இதுக்கு பரிசு கிடைக்கும்னு தோணுச்சு. அதே மாதிரியே கிடைக்கவும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!’’

- பி.சாந்தி, சென்னை-91

அம்பாள் அருள் புடவை -3

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

சக்தி விகடனில் வெளியாகும் ‘கயிலை காலடி காஞ்சி’ தொடரைப் படித்து வருகிறீர்கள்தானே? இந்த இதழ் அத்தியாயத்தில்...

காஞ்சி மஹா பெரியவா உத்தரவுக்கு ஏற்ப, பக்தை சமர்ப்பித்த காணிக்கை என்ன?

இந்தக் கேள்விக்கான சரியான பதிலை எழுதியனுப்பும் வாசகியரில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சென்னை-குமரன்குன்றம் அருள்மிகு பாலசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயிலில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியில், ஸ்ரீமீனாட்சியம்மைக்கு சிறப்பு பூஜையுடன் சமர்ப்பிக்கப்பட்ட மங்கல புடவை, அம்பாள் அருட்பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும்.

பதிலை எழுதி அனுப்பும்போது, மறவாமல் கீழ்க்காணும் கூப்பனையும் தெளிவாக நிரப்பி, இணைத்து அனுப்புவது அவசியம். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம்.

(தகவல்கள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி - 1.11.16)

உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!

படங்கள்: தி.குமரகுருபரன், ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism