Published:Updated:

‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’

‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’
பிரீமியம் ஸ்டோரி
‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’

‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’

‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’

‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’

Published:Updated:
‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’
பிரீமியம் ஸ்டோரி
‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’
‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 4.10.16 அன்று மாலை தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பொதுவாக, சிவாலயங்களில் சுவாமியும் அம்பாளும் தனித்தனியாகத்தான்  வீற்றிருப்பார்கள். ஆனால், ஒரே இடத்தில் இருவரும் வீற்றிருப்பது இத்திருக்கோயிலின் சிறப்பம்சங்களில் ஒன்று. கன்னிப் பெண்கள், தொடர்ந்து 9 பெளர்ணமி நாட்களில் இங்கு வந்து நெய் விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட வாசகி ஆர்.வனஜா, “சக்தி விகடன் பல ஊர்க ளிலும் திருவிளக்கு பூஜையை நடத்தி வருகிறது. எங்க ஊர்ல எப்போ நடத்துவாங்கனு ஆர்வமா எதிர்பார்த்துக் காத்துக் கிட்டு இருப்பேன். இந்த முறை எங்க ஊர்ல நடக்கவும், ஆர்வத்தோடு வந்து கலந்துக்கிட்டேன். என் குடும்பத்தைக் காத்தருள்வாய் தாயே என்ற கோரிக்கையோடு இந்தத் திருவிளக்கு பூஜையில் கலந்துக்கிட்ட எனக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைச்சிருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.

‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எனக்குத் திருமணம் நடந்து பத்து வருஷமா குழந்தை பாக்கியம் இல்லாம இருந்தேன். இந்த ஏகாம்பரேஸ்வரர் சந்நிதியில் வந்து வேண்டிக் கொண்ட பிறகுதான் எனக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இதுமாதிரி, இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டிய வரம் கிடைக்கணும்னு இந்தத் திருவிளக்கு பூஜையில் வேண்டிக்கிட்டேன்” என்றார் மற்றொரு வாசகியான எஸ்.பாகம்பிரியாள்.

திருச்செந்தூர் வாசகி பன்னீர் புஷ்பம், “ஒவ்வொரு ஊரிலும் இந்தத் திருவிளக்கு பூஜையை நடத்துவதன் மூலம் வாசகர்கள் அனைவருக்கும் இந்த நல்ல வாய்ப்பை ‘சக்தி விகடன்’ கட்டாயம் வழங்கணும். வாசகியர்களான எங்களின் மீதும், எங்கள் குடும்பத்தினர் மீதும் அக்கறை கொண்ட சக்தி விகடனுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள்!” என்றார் உற்சாகத்துடன். 

ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரரின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

 - எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism