Published:Updated:

மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!

மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!

வீயெஸ்வி

மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!

வீயெஸ்வி

Published:Updated:
மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!
மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!

ஷைலேஸ்வரி தரிசனம்

மீபத்தில், மிருதங்க வித்வான் காரைக்குடி மணி, அலைபேசியில் பகிர்ந்துகொண்ட ஒரு தகவல், புருவம் உயரச் செய்தது. இதுவரை கேள்விப்படாத, வியப்பூட்டும் தகவல் அது!

‘மணலில் இருந்து தயாரிக்கப்பட்ட கருவி’ என்று நேரடி பொருள் கொண்டிருக்கும் இசைக் கருவியான மிருதங்கத் துக்கு என்று பிரத்யேகமாக அமைந்திருக்கும் ‘மிருதங்க ஷைலேஸ்வரி' கோயில் பற்றிய தகவலே அது.

‘‘கே
ரளாவில், தலசேரிக்கும் கண்ணனூருக்கும் இடையில், காடுகள் நிரம்பிய பகுதியில், மலை மீது கம்பீரமாக அமைந் திருக்கிறது மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயில். வேறு எங்குமே இதுபோல் மிருதங்கத்துக்கென்று கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கோயிலின் பின்னணிக் கதை - ஸ்தல வரலாறு - சுவைமிக்க ஒன்று.

மேல் உலகில் இருந்து மிருதங்கம் பூமிக்கு இறங்கி வந்தபோது,  ரூபம் அற்ற அரூபியாக தியானத்தில் இருந்த பகவதி ஷைலேஸ்வரி, அதனைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்தாளாம். அப்போது எழுந்த சத்தம் மலையின் மீது எதிரொலித்ததாம். அதிலிருந்து அந்தப் பகுதி, ‘முழக்கண்ணு’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ‘எதிரொலிக்கும் மலை’ என்பது பொருள். தொலைவிலிருந்து மலையின் முழு நீளத்தையும் அண்ணாந்து பார்த்தால், அச்சு அசலாக மிருதங்கத்தின் வடிவிலேயே அது அமைந்திருப்பது தெரியும். இன்னொரு தகவலும் உண்டு. மிருதங்கத்தை அம்பாள் தன் கைகளில் தாங்கியபோது, மணலில் குழி ஒன்று உருவானது. இன்றைக்கும் அந்தக் குழியை தரிசிக்க முடியும்.

கேரளா வர்மா பழசி ராஜாவின் குடும்பத்துக்குக் குலதெய்வம் இந்தக் கோயில். பத்து தலைமுறைகளுக்கு முன்பு இந்தக் குடும்பம் பகவதிக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்று தீர்மானித்தது. எனவே, அரூபியாக இருந்த அம்மன், ஸ்வரூபியாக - அந்த நாளிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமானம் கொண்ட - பஞ்சலோக விக்கிரகமாக மாறினாள்!

அடர்த்தியான காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருக்கிறது, ஷைலேஸ்வரி கோயில். இருந்தாலும், போகும் பாதை சீரானதாகவே உள்ளது. உள்ளே நுழைந்ததும், சற்றுக் கரடு முரடான கற்கள் மீது நடந்து செல்லவேண்டும். மழையின் காரணமாக, பிராகாரங்கள் சேறும் சகதியுமாக இருக்கின்றன. கவனமாகக் கால் பதித்து நடக்க வேண்டும்.

கடந்த காலங்களில், இந்தக் கோயிலில் ஆச்சரியம் நிறைந்த சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். உதாரணமாக, பஞ்சலோகத்தால் ஆன ஷைலேஸ்வரியின் சிலையைத் திருடிச் செல்வதற்கு மூன்று முறை முயற்சிகள் நடந்து, ஒவ்வொரு முறையும் கண்களுக்குப் புலப்படாத ஏதோ ஓர் சக்தி, இந்தத் திருட்டு முயற்சிகளை முறியடித்ததாம்.

மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் முயற்சியின்போது, சிலையைத் திருடிச் சென்றவர்களுக்குத் திடீரென்று தங்க ளையே தொலைத்துவிட்டது போன்றதொரு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. போகும் திசை புரியவில்லை. உடல் தளர்ந்துவிட்டது. வாந்தியும் பேதியும் அவர்களை இம்சித்திருக் கின்றன. மேற்கொண்டு நடக்கக்கூட இயல வில்லை. சிலையைத் தரையில் வைத்தார்கள். ஒரு காகிதத்தில், ‘சிலையைத் திருடிய குற்றத்துக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இந்த துண்டுச் சீட்டைப் பார்ப்பவர்கள், சிலையைக் கோயிலில் அதன் இடத்தில் தயவுசெய்து வைத்துவிடவும்’ என்று எழுதி சிலையின் கீழ் வைத்துவிட்டு, நடையைக் கட்டினார்களாம்.

இரண்டாவது முயற்சியின்போதும் இதுவே நடந்திருக்கிறது. மூன்றாவது முறை, திருட வந்தவர்களால் சிலையை 25-30 அடி தூரத்துக்கு மேல் நகர்த்த முடியவில்லையாம். உடனே, இது தெய்வக் குற்றம் என்பதை உணர்ந்து, போலீஸில் அவர்கள் சரண் அடைந்தனர். கேரளாவின் அப்போதைய டி.ஜி.பி. ஜேக்கப் அலெக்சாண்டர் என்பவர், சிலையை அதற்குரிய இடத்தில் வைக்க நடவடிக்கைகள் எடுத்தார். நடந்த சம்பவங் களை அறிந்து, ஆவலால் தூண்டப்பட்டவர், பகவதி அம்மன் பற்றி மேலும் விசாரித் திருக்கிறார். ஷைலேஸ்வரிக்கு அம்மனுக்குரிய பூஜைகளும், இதர சம்பிரதாயங்களும் மிகவும் ஆசாரமாக அனுதினமும் நடைபெற்று வருவது அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் - ஏழு நாட்களுக்குமாகச் சேர்த்து 42 வகையான பூஜைகள் செய்யப்பட்டு வருவதும், இதனால் அம்மனுடைய சக்தி நாளுக்கு நாள் பெருகி வருவதும் அவரிடம் சொல்லப்பட்டது. அம்மனின் சாந்நித்தியம் குறித்து அறிந்து திகைத்துப் போனார் அவர். கிறிஸ்துவரான அவர், ‘ஷைலேஸ்வரியை வணங்கினால், எத்தகைய பிரச்னையையும் தீர்த்து வைப்பாள்' என்று மற்றவர்களிடமும் பிரசாரம் செய்யும் அளவுக்கு, இந்த அம்மன்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாராம்.

அதுமட்டுமல்ல... ஒருமுறை, தேர்தலில் தோல்வி அடைந்த கேரளாவின் முன்னாள் முதல்வர் கருணாகரனிடமும் டி.ஜி.பி. ஜேக்கப் அலெக்சாண்டர், ஷைலேஸ்வரி அம்மனின் மகிமைகளை எடுத்துரைத்திருக்கிறார். அதன்பின், கருணாகரனும் இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்ள, மீண்டும் முதல்வ ரானார் - தொடர்ந்து இரண்டு முறை!’’

ஷைலேஸ்வரிதேவியின் மகிமைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்ட காரைக்குடி மணி, தாம் அந்தக் கோயிலுக்குச் சென்று அம்பிகை யைத் தரிசித்துவந்த அனுபவத்தையும் சிலிர்ப்பும் நெகிழ்ச்சியுமாக விவரித்தார்.
“பாலக்காடு மிருதங்க வித்வான் ஹரி நாராயணன் மூலமாக இந்தக் கோயில் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே அங்கே சென்று, அந்த அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் உண்டானது. என்னுடைய சீடரையும் அழைத்துக்கொண்டு, கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில், மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலுக்குச் சென்றேன்.

அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை. ஷைலேஸ்வரி அம்மனை தியானித்துக் கொண்டு, அவளுடைய சந்நிதியில் நான் மிருதங்கம் வாசித்தேன்.  நிலவில் கால் பதித்ததும் நீல் ஆம்ஸ்டிராங் எப்படி உணர்ந் திருப்பாரோ, அமெரிக்காவைக் கண்டறிந்ததும் கொலம்பஸ் எப்படிக் குதூகலம் அடைந்திருப்பாரோ, அதே உணர்வுதான் ஷைலேஸ்வரி கோயிலில் மிருதங்கம் வாசிக்கும்போது எனக்கும் ஏற்பட் டது” என்று நெகிழ்வுடன் கூறுகிறார் மணி.

மிருதங்கக் கடவுளான ஷைலேஸ்வரி, இந்த லய வாத்தியத்தின் (மிருதங்கம்) நாதத்தைக் கேட்டது நிச்சயமாக இதுவே முதல் தடவையாக இருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார் இவர்.

மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!

‘‘ஷைலேஸ்வரி அம்மனுக்குப் புனிதமான மிருதங்க நாதத்தைக் காணிக்கையாகச் செலுத் திய முதல் நபர் என்ற வகையில் நிஜமாகவே நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்” என்று சொல்லும்போதே காரைக்குடி மணியின் குரல் தழுதழுக்கிறது.

இதுவரையில் அரசியல்வாதிகளும், திரைப்பட நட்சத்திரங்களும் இந்தக் கோயிலுக்கு வந்தது போக, இப்போதுதான் சாமானியர் களின் வருகையும் தொடங்கியிருக்கிறதாம்.

கோயிலின் எதிர்காலத் திட்டம் பற்றி வரை யறுக்க பக்தர்கள் சிலர் இணைந்து குழு அமைத் திருக்கிறார்கள். விரைவில் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து, மேன்மேலும் மிருதங்க வித்வான்களும், இதர இசைக் கலைஞர்களும் வந்திருந்து, நிகழ்ச்சிகள் நடத்தி, ஷைலேஸ்வரி அம்மனின் ஆசியைப் பெற்றுச் செல்வார்கள் என்பது எதிர்பார்ப்பு!

மிருதங்கத்துக்கென்றே ஒரு கோயில் அமைந் திருக்கிறது என்பது ஒவ்வொரு கலைஞனும் பெருமைப்பட வேண்டிய ஒன்றுதானே! முக்கியமாக, மிருதங்கக் கலைஞர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism