
கிழமையும் மலர்களும்
எந்தெந்த நாட்களில் எந்தெந்த மலர்களால் இறைவனை வழிபட்டால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று முனிவர் பெருமக்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள். அதன்படி, உரிய நாட்களில் உகந்த மலர்களால் வழிபட்டு வரம் பெறலாம்.
ஞாயிறு: தாமரை மலரால் வழிபட்டால், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
திங்கள்: மல்லிகை, முல்லை மலரால் வழிபட்டால் பகை, கோபம் நீங்கும்.
செவ்வாய்: சம்பங்கி மலர் கொண்டு அம்பாளை அர்ச்சித்தால், விபத்துகள் ஏற்படாது.
புதன்: பாரிஜாத மலரால் வழிபட்டால், நினைவாற்றல் பெருகும்; குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.
வியாழன்: சாமந்தி மலர் கொண்டு இறைவனை அர்ச்சித்தால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
வெள்ளி: பிச்சிப் பூக்களைச் சமர்ப்பித்து இறைவனை வழிபட்டால், குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
சனி: மனோரஞ்சிதம் மலர்க்கொண்டு இறைவனை வழிபட்டால், மனதில் ஏற்படும் கலக்கம் நீங்கி அமைதி நிலவும்.
- சி.மலர்விழி, திருச்சி
அபிஷேக நியதிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆலயத்தில் அபிஷேகம் செய்யும் வரிசை முறை குறித்து அபிஷேகக்கிரமம் கூறும் விவரம்:
1. சுத்த நல்லெண்ணெய் - ப்ரதமம்
2. பஞ்சகவ்யம் - த்விதீயம்
3. மாவு - த்ரிதீயம்
4. நெல்லி முள்ளி - சதுராமலகம்
5. மஞ்சள் பொடி - பஞ்சமம்
6. பஞ்சாமிர்தம் - சஷ்டம்
7. பால் - சப்தமம்
8. தயிர் - அஷ்டமம்
9. பசுநெய் (கோக்ருதம்) - நவமம்
10. தேன் - தசமம்
11. இக்ஷீசாரம் (கரும்புசாறு) - ஏகாதசம்
12. பலம் (பழங்கள்) - த்வாதசம்
13. நாரங்கபலம் (நார்த்தம் பழம்) - த்ரயோதசம்.
14. இளநீர் (கேளமன்னம்) - சதுர்த்தசம்
15. சுதந்தாம்பு (சந்தனம்) - பஞ்சாதசம்.
16. ஸ்நபநம் (கடம்) - சோடசம்.
- கே.குமார், சென்னை-44
இவையெல்லாம் செய்யக்கூடாத விஷயங்கள்!
இரவில் வேஷ்டி துவைக்கக்கூடாது. குப்பையை வெளியில் கொட்டக்கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. பூமியை கீறுதல், வெட்டுதல், உழுதல் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக்கூடாது.
சுவாமிக்கு அலங்காரம் செய்யும்போதும் நைவேத்தியம் செய்யும்போதும் சுவாமியை தரிசிக்கக்கூடாது. அதேபோல சந்நிதானத்தில் திரை போட்டிருக்கும்போது திரையை விலக்கிக் கொண்டு தெய்வத்தைப் பார்ப்பது கூடாது.
அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, சங்கராந்தி நாள்களிலும், பிறப்பு, இறப்புகளால் ஏற்படும் என்ற தீட்டுக் காலங்களிலும் வெந்நீரில் குளிக்கக் கூடாது.
- வி.ராமமூர்த்தி, சென்னை-87
விரதங்களும் பலன்களும்
ஏகாதசி: மன சாந்தி கிடைக்கும்
பிரதோஷம்: பாவம் நீங்கும்
பௌர்ணமி : ஐஸ்வர்யம் பெருகும்.
சங்கடஹகர சதுர்த்தி: தீய எண்ணம் நீங்குதல்
அமாவாசை: குல அபிவிருத்தி ஏற்படும்
சஷ்டி: மகப்பேறு வாய்க்கும்
கார்த்திகை: கல்வி விருத்தி உண்டாகும்.
- கே.முருகானந்தம், திருச்செந்தூர்
நீராடலும் நியதிகளும்
குளம் மற்றும் நதிகளில் மூழ்கி நீராடுவது உத்தமம். கிணற்றில் இருந்து நீரெடுத்து நீராடுவது மத்திமம். சமுத்திர ஸ்நானம் தினந்தோறும் செய்யக்கூடாது; பருவ காலங்களில் செய்யக் கூடியது. ஆனால், ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களில் எந்நாளும் நீராடலாம். நீராடும்போது, இடையில் ஒரு சிறு துணியேனும் உடுத்தியிருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
- சுதா, திருச்சி