Published:Updated:

ஆலயங்கள்... அற்புதங்கள்!

ஆலயங்கள்... அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயங்கள்... அற்புதங்கள்!

ஆலயங்கள்... அற்புதங்கள்!

ஆலயங்கள்... அற்புதங்கள்!

ஆலயங்கள்... அற்புதங்கள்!

Published:Updated:
ஆலயங்கள்... அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயங்கள்... அற்புதங்கள்!

வடைமாலை இல்லாத ஆஞ்சநேயர்!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராயர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்தக் கோயிலில் அருளும் அனுமனின் கருவறையில் மேல் விதானம் கிடையாது. வெயில், மழை எல்லாம் இவர் மேல்தான் விழும். இவருக்கு வடைமாலை சாற்றும் பழக்கம் இல்லை.

வருடம்தோறும், சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் உற்ஸவத்தில்,  விசேஷ பிரார்த்தனை ஒன்று நடைபெறுகிறது. அதாவது, உற்ஸவத்தையொட்டி முக்கிய பிரமுகர்கள் ஒரு நாள் கட்டளையை ஏற்று, சாப்பாடும் போடுவார்கள்.  ஸ்வாமியிடம் பிரார்த்தனை செய்பவர்கள், ஏகாதசி தினத்தில் விரதம் கடைப்பிடித்து, மறுநாள் துவாதசியன்று- முதல் பந்தியில் சாப்பிட்டவர்களின் இலைகளில் படுத்து புரண்டபடி, கோயில் பிராகாரத்தை வலம் வந்தால், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பத்தாவது நாள் தேரோட்டம், அடுத்த நாள் ஆஞ்சநேயர் உற்ஸவத்துடன் நிறைவு பெறும்.

- லக்ஷ்மி ராமச்சந்திரன், சேலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயங்கள்... அற்புதங்கள்!

மாமரத்து பிள்ளையார்!

சென்னை-  கூடுவாஞ்சேரியில், ரயில்நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கிறது  மாமரத்து விநாயகர் கோயில். இந்தப் பிள்ளையார், மாமரத்தின் அடிபாகத்தில் தோன்றியவராம். தற்போது கவசம் அணிவித்து வழிபட்டு வருகின்றனர். மூலமூர்த்தியும் மரத்தின் அடியில் உள்ளார். சங்கட ஹரசதுர்த்தியன்று மாலையில் ஹோமங்களும், மற்ற விழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன. இவர் கோயிலில் ஈஸ்வரர், அம்பாள், பதினெட்டு கை துர்கை, அனுமன், தேவியருடன் நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். தற்போது மகாமண்டபம், கோபுரங்கள் கட்ட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. வேண்டியதை சடுதியில் நிறைவேற்றும் வரப்பிரசாதி என்கிறார்கள் ரயில் பயணிகளும், உள்ளூர் பக்தர்களும்.
 
- கல்யாணி அனந்தராமன், சென்னை

ஏரிக்காத்த ராமன்!

சென்னை - திண்டிவனம் மார்க்கத்தில் அமைந்திருக்கிறது மதுராந்தகம். இங்கே கோயில் கொண்டிருக்கும் ராமன், வெள்ளத்தால் ஏரிக்கரை உடைந்து விடாமல் காத்து நின்றதாக தலவரலாறு. இந்த ராமபிரானைப் போன்று உயரமான மூலவரை வேறெந்த கோயிலிலும் காண்பதரிது என்கிறார்கள். ஆஜானுபாகுவான தோற்றத்தில் எம்பிரான் கோதண்டராமராக கம்பீரமாக நெடிதுயர்ந்து காட்சி அளிக்கிறார். அவருக்கு வலப்புறம் அன்னை சீதாதேவியும், இடப்புறம் லட்சுமணனும் அருள்கிறார்கள். இந்த லட்சுமணன் அம்பு ஏந்திய கரத்துடன் காட்சியளிப்பது தனித்துவம்!

- கே.மணிமேகலை, காரைக்கால்

பிள்ளைவரம் தரும் பிரசாதம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு நித்யசுமங்கலி மாரியம்மன். இந்த அம்பிகை சந்நிதிக்கு எதிரில் சிவாம்சமான கம்பம் ஒன்று (வருடம் முழுக்க) நடப்பட்டிருக்கும். இதையொட்டியே அம்மனுக்கு இப்படியொரு திருநாமம். ஐப்பசி மாதம் புதுக்கம்பம் நடும்போது, தயிர் சாதம் நிவேதனம் செய்வார்கள். அந்த தயிர்சாதப் பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.

- எம்.சுகாரா, ராமநாதபுரம்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism