Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!

தினசரி பூஜையில் காமாட்சி அம்மனின் அகவல்களைச் சொல்லி பிரார்த்திக்க விரும்புகிறேன். காமாட்சிதாசன் சீனிவாசன் என்பவர் எழுதிய 'காஞ்சி காமாட்சி ஆயிரம் அகவல்’ புத்தகம் கிடைத்தால் நன்று. அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?

- டி.ஏ.லலிதா, ஹூப்ளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
கல சௌபாக்கியங்களையும் தருகிற 'ராம நாமம்’ எழுத எங்களது ஸ்ரீராமஜெயம் பவுண்டேஷன் சார்பாக இலவச கையேடு வழங்குகிறோம். பக்தர்கள், ராம நாமம் எழுதிய பிறகு, அவற்றைப் பெற்றுக்கொள்கிறோம். விருப்பமுள்ள ராம பக்தர்கள், 98942 20281, 96265 58686 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, ஸ்ரீராம நாமம் எழுதி அனுப்பலாம்.

- கு.ராஜாராம், ஸ்ரீராமஜெயம் பவுண்டேஷன், மதுரை

நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது (1982-ஆம் வருடம்), தமிழ்ப் பாடப்பகுதியில், ஸ்ரீராமரும் சீதையும், சங்கீத மேதை தியாகராஜருக்காக காவிரி நதிக்கரைக்கு வருவதாகப் படித்த ஞாபகம். தற்போது அந்தக் கட்டுரை யைப் படிக்க ஏங்குகிறது மனம். அன்பர்கள் எவரேனும் அந்தப் பிரதியை வைத்திருந்தால், அனுப்பி உதவவும்.

- தியாகபதாகை, மேட்டுப்பாளையம்

நாங்கள் ஹரித கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். என் மாமனார், திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டவர். இதுவரை, திருநெல்வேலி சடைவுடையாரையே குலதெய்வ மாக வணங்கி வந்தோம். ஆனால், எங்கள் குலதெய்வம் வேறு என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். எங்களது குலதெய்வம் குறித்து அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால் நன்றி உடையவர்களாக இருப்போம்.

- விஜயா, ஈரோடு

ஸ்ரீபோதேந்திர சுவாமிகளின் சரிதத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன். அவரின் சரிதம் அடங்கிய நூல், எந்த பதிப்பகத்தில் வெளியாகி உள்ளது? எங்கு கிடைக்கும்?

- பி.வி.வேங்கடரமணன், ஈரோடு

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'என் அம்மா, கடந்த ஐந்து வருடங்களாக, பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். மருந்து-மாத்திரைகள் சாப்பிட்டும் குணமாக வில்லை. பக்கவாத நோயில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு எந்தத் தலத்துக்குச் செல்ல வேண்டும்? பக்கவாதத்துக்கு எண்ணெய் வழங்கும் ஆலயம் பற்றி படித்ததாக ஞாபகம். அந்த ஆலயம் குறித்தும் குணமாக்கும் பதிகம் குறித்தும் தகவல் தெரிவித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்’ என்று கடந்த 1.11.11 இதழில் போடி வாசகர் எஸ்.சேதுராமன் கேட்டிருந்தார்.

திருப்பாச்சிலாச்சிரமம் எனும் தலத்தில், திருஞானசம்பந்தர் அருளிய 'துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்து’ என்று துவங்கும் தேவாரப் பாடலை, தினமும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று கும்பகோணம் வாசகர் வை.சந்தானகிருஷ்ணன், கூந்தலூர் வாசகர் வி.சந்திரசேகரன், சென்னை வாசகர் சிவ.மீ.ஞானசம்பந்தன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வேலூர் அருகேயுள்ள வாலாஜா பேட்டையில் உள்ள  தன்வந்திரி கோயிலுக்கு, நோயுற்றவர் சார்பாக உறவினர்கள் எவரேனும் சென்று வழிபடலாம். அங்கு, எண்ணெய்  மற்றும் தேன் பிரசாதமாகத் தருகின்றனர். அதை உட்கொண்டு, தன்வந்திரி ஸ்லோ கத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று மதுரை வாசகி மீனாட்சி பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

தன்வந்திரி ஸ்லோகம்

ஓம் நமோ பகவதே மஹாசுதர்சன வாசுதேவாய!
தன்வந்திரியே! அமிர்த கலச ஹஸ்தாய!
ஸர்வாமய விநாசகாய! ஸர்வரோக நிவாரணாய!
மஹாவிஷ்ணு சொரூபாய!  
        ஸ்ரீஸ்ரீஸ்ரீஒளஷதசக்ரநாராயண ஸ்வாஹா:

'திருமணம், புதுமனை புகுவிழா, சதாபிஷேகம் போன்ற வைபவங்களின்போது, 'திருவாசகம் முற்றோது தல்’ செய்வார்களாம் சில அன்பர்கள். இவர்கள் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் எங்கு இருக்கின்றனர், அவர்களின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவுங்கள்’ என்று கடந்த 1.11.11 இதழில் மதுரை வாசகர் பா.சௌந்திரபாண்டி கேட்டிருந்தார்.

'மீனாட்சி சுந்தரேஸ்வரர் தவநெறி மன்ற’த்தைச் சேர்ந்த அன்பர்கள், இதுபோன்ற விசேஷங்களில் திருவாசகம் முற்றோதுதல் செய்கின்றனர். 94440 89005, 99402 03515 ஆகிய எண்களில் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கும்பகோணம் வாசகர் வை.சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், மதுரை ஆதீனம், தெற்கு ஆவணி மூல வீதி, மதுரை-625006 என்ற முகவரியில் தொடர்பு கொண்டால், ஓதுவார்கள் குறித்த சரியான விபரங்களை அறியலாம் என்று சென்னை வாசகி ராஜராஜேஸ்வரி மதிநிறைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சேக்கிழார் மன்றத்தினர் கடந்த 25 வருடங்களாக திருவாசகம் முற்றோதுதல் செய்து வருகின்றனர். 94439 10759, 94876 48228 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி சேக்கிழார் மன்ற உறுப்பினர் பி.வி.குப்புசுவாமி தெரிவித்துள்ளார்.

'திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் நாங்கள். சிங்கிலி என்கிற ஆற்றங்கரையில், பேராச்சி அம்மன் கோயில் உள்ளதாகவும், அந்த அம்மன் சக்தி வாய்ந்த தெய்வம் என்றும் சிறுவயதில் கேட்டதாக நினைவு. இந்தக் கோயில் எங்கே உள்ளது? எப்படிச் செல்வது? இதுகுறித்து விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் தாருங்களேன்’ என்று சென்னை வாசகர் குமார் கேட்டிருந்தார்.

திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து பாளையங் கோட்டை செல்லும் சாலையில் உள்ளது வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில், ஸ்ரீபேராச்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது என சென்னை வாசகர் டி.காந்தி தெரிவித்துள்ளார்.

'சிறுவயதில், 'ஜய ஜய ஆரத்தி விக்ன விநாயக, விக்ன விநாயக ஸ்ரீகணேசா’ என்கிற ஆரத்திப் பாடலை பாடியிருக்கிறேன். தற்போது அந்தப் பாடல் மறந்துவிட்டது. இந்தப் பாடலைத் தெரிந்த அன்பர்கள் எழுதி அனுப்பி உதவினால், மகிழ்வேன்’ என்று கடந்த 4.10.11 இதழில் சென்னை வாசகி ராஜலட்சுமி கேட்டிருந்தார்.

வாசகி கேட்ட ஆரத்திப் பாடலை, திருச்சி வாசகர் ஞானம் சுப்ரமணியன் அனுப்பியுள்ளார். அந்தப் பாடல் இதோ!

ஆரத்திப் பாடல்

ஜெய ஜெய ஆரத்தி விக்ன விநாயக
விக்ன விநாயக ஸ்ரீகணேசா
ஜெய ஜெய ஆரத்தி சுப்ரமண்யா
சுப்ரமண்யா கார்த்திகேயா
ஜெய ஜெய ஆரத்தி வேணுகோபாலா
வேணுகோபாலா வேணுலோலா
பாப விதூரா நவநீத சோரா
ஜெய ஜெய ஆரத்தி வெங்கடரமணா
வெங்கடரமணா சங்கட ஹரணா
சீதா ராமா ராதா ஸ்யாமா
ஜெய ஜெய ஆரத்தி கௌரி மனோஹரா
கௌரி மனோஹரா பவானி சங்கரா
சாம்ப சதாசிவ உமாமகேஷ்வரா
ஜெய ஜெய ஆரத்தி ராஜராஜேஸ்வரி
ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி
மஹாலட்சுமி மஹா சரஸ்வதி
மஹா சக்தி மஹா காளி
ஜெய ஜெய ஆரத்தி தத்தாத்ரேயா
தத்தாத்ரேயா திரிமூர்த்தி அவதாரா
ஜெய ஜெய ஆரத்தி சத்குருநாதா
சத்குருநாதா சிவாநந்தா
ஜெய ஜெய ஆரத்தி ஆஞ்சநேயா
ஆஞ்சநேயா ஹனுமந்தா
ஜெய ஜெய ஆரத்தி வேணுகோபாலா
வேணுகோபாலா விஜய விலோலா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism