Published:Updated:

ஆன்மிக துளிகள் - 1

ஆன்மிக துளிகள் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள் - 1

ஆன்மிக துளிகள் - 1

ஆன்மிக துளிகள் - 1

ஆன்மிக துளிகள் - 1

Published:Updated:
ஆன்மிக துளிகள் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள் - 1

நினைத்ததை நிறைவேற்றும் விளக்கு பூஜை!

ஆன்மிக துளிகள் - 1

வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம். அவ்வகையில் ஆடி வெள்ளி அல்லது தை வெள்ளிக் கிழமையில் துவங்கி 16 வாரங்கள் தொடர்ந்து அகல் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறப்பெறலாம்.

ஆடி அல்லது தை மாதம் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை ஆரம்பிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்கலாம். அதாவது, வீட்டில் எப்போதும் செய்யும் பூஜையுடன், ஒரு அகல் விளக்கை ஏற்றிவைத்து குலதெய்வம், பிள்ளையார், இஷ்ட தெய்வத்தை வேண்டி நம் கோரிக்கையை மனதில் நினைத்து கும்பிட வேண்டும்.

அடுத்த வெள்ளிக்கிழமையில் 2 அகல் விளக்குகள் ஏற்றவேண்டும். இப்படியே ஒவ்வொரு வாரமும் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். பதினாறாவது வாரம் பதினாறு அகல்விளக்குகள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து பூஜையை முடிக்கவும். பூஜை முடிக்கும் வாரம் குறைந்தது 5 பேருக்கு (கன்னிப் பெண்கள் இருவர் உட்பட), பிரசாதத்துடன் தாம்பூலம், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், ரவிக்கைத் துணி ஆகியவற்றை வழங்கவேண்டும். பதினாறு வாரத்துக்குள்ளாகவே நல்ல பலன் கிடைக்கும். இடையில் விளகேற்ற முடியாத நிலை வந்தால் கணவர், மகன், மகள் யாராவது விளக்கேற்றலாம்.

- இந்திராணி பொன்னுசாமி, சென்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சுமிகடாட்சம் வேண்டுமா?

ஆன்மிக துளிகள் - 1

ரழிஞ்சில் என்ற மரத்தின் விதைகள் அந்த மரத்திலேயே ஒட்டிக்கொள்ளுமாம். அதுபோல, ஜீவாத்மாக்களாகிய நாம் பரப்பிரம்ம ஸ்வருபத்துடன் ஒட்டிக் கொள்ள எப்பொழுதும் நமக்கு கடவுளைப் பற்றிய சிந்தனையே வேண்டும் என்று காஞ்சி பரமாச்சார்யார் சொல்லி இருக்கிறார்.

வில்வமரம், யானையின் முன்பக்கம் (முகம்) பசுவின் பின்பக்கம் இவைகளில் லக்ஷ்மிதேவி வாசம் செய்கிறாள். இவைகளை தொட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஸ்வாமி திருமுன் ஏற்றிய தீபத்தை சிறு துளி (சொட்டு) பால் கொண்டு சாந்தப்படுத்த வேண்டும். வாயால் ஊதி அணைக்கக் கூடாது.

இடுப்பில் ஈரத்துணியுடன் இறைவனை வணங்கக் கூடாது. இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். பெண்கள் தலையில் முடிந்துஇருக்கும் ஈரத்துண்டை அவிழ்த்து விட்டு வணங்க வேண்டும்.

- ஜி.சியாமளா, சென்னை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism