திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

‘நாங்கள் செய்த பாக்கியம்!’

‘நாங்கள் செய்த பாக்கியம்!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘நாங்கள் செய்த பாக்கியம்!’

‘நாங்கள் செய்த பாக்கியம்!’

‘நாங்கள் செய்த பாக்கியம்!’

க்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்திய  திருவிளக்கு பூஜை, சென்னை வளசரவாக்கம் காமகோடி தியான மண்டபத் தில், கடந்த நவம்பர்  1-ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று விமர்சையாக நடைபெற்றது. வளசை கி.ஜெயராமன் மற்றும் தன்னார்வலர் குழுவினர் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்தேறியது விளக்கு பூஜை.

‘நாங்கள் செய்த பாக்கியம்!’
‘நாங்கள் செய்த பாக்கியம்!’

“கந்தசஷ்டி கொண்டாடப் படும் நேரத்தில் இங்கே திருவிளக்கு பூஜை நடப்பது, சிறப்பான அம்சம். சக்தியின் அம்சமாகத் திகழும் பெண்கள், கூட்டுப் பிரார்த்தனையுடன் திருவிளக்கு பூஜையும் செய்வது அளவற்ற நன்மைகளைத் தரும். சென்ற வருடம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய மழை, இந்த வருடம் பொய்த்து விட்டதோ என்று நினைக்கும்படி இதுவரை போதுமான மழை பெய்ய வில்லை. போதுமான அளவு மழை பெய்து, எல்லோரும் மகிழ்ச்சியாக வாழபிரார்த்திப் போம்’’ என்று கூட்டுப் பிரார்த் தனையின் மகிமைகளைப் புரிய வைத்து பூஜையைத் தொடங்கி வைத்தார் வடபழனி ஐயப்ப சிவாச்சார்யர்.

பூஜையில் கலந்துகொண்ட சென்னை வாசகி ராணி ஜெயராமன், ‘‘கடந்த 30 ஆண்டுகளாக, நான் விகடனுடைய தீவிர வாசகி. இந்த விளக்கு பூஜை, வளரசரவாக்கம் காம கோடி தியான மண்டபத்தில் முதல் முறையாக நடப்பது சந்தோஷம். எனக்குத் தெரிந்தவர்கள்  எல்லோரையும் இந்த பூஜைக்காக அழைச்சிக்கிட்டு வந்துட்டேன். 

‘நாங்கள் செய்த பாக்கியம்!’

வயதான காலத்தில், எல்லோருக்கும் எண்ணற்ற பிரச்னைகள் இருக்குது. இருந்தாலும், அனைத்து மக்களுடைய பரிபூரண நலம் வேண்டி  சக்திவிகடன், நடத்தும்  பூஜையில் கலந்துகிட்டது, எங்கள் பாக்கியம். எங்க கஷ்டங்கள் எல்லாத்தையும் மறக்கவைத்து, எல்லா மக்களையும் ஒன்றாக பிரார்த்திக்க வைத்தது பெரிய விஷயம். இதுதான் சக்தி விகடனின் வெற்றி. இதுபோல், ஒவ்வொரு வருடமும் சக்தி விகடன், இங்கு வந்து திருவிளக்கு பூஜை நடத்தணும். சக்தி விகடனின் இந்த ஆன்மிக சேவை ரொம்ப சந்தோஷத்தைத் தருது” என்றார் நெகிழ்ச்சியும் பரவசமுமாக!

ஒட்டுமொத்தமாக, விளக்கு பூஜையில் கலந்துகொண்ட தங்களின் பிரார்த்தனைகளை முருகப் பெருமான் நிறைவேற்றுவார் என்ற சந்தோஷமும் நம்பிக்கையும் வாசகியரின் முகங்களில் பளிச்சிட்டது. வாசகியரின் சந்தோஷம்தான் சக்தி விகடனின் வரம்.
 
 தகவல் மற்றும் படங்கள்: உ. கிரண் குமார்