Published:Updated:

ஆன்மிக துளிகள் - 2

ஆன்மிக துளிகள் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள் - 2

ஆன்மிக துளிகள் - 2

ஆன்மிக துளிகள் - 2

ஆன்மிக துளிகள் - 2

Published:Updated:
ஆன்மிக துளிகள் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள் - 2

புகழ்பெற்ற பிரசாதங்கள் பதினாறு!

புகழ்பெற்ற திருக்கோயில் பிரசாதங்கள் என்றால் திருப்பதி லட்டுவும், பழநி பஞ்சாமிர்தமுமே பெரும்பாலானோருக்குத் தெரிந்தவை. இவை மட்டுமின்றி, இன்னும்பல தலங்களின் பிரசாதங்களும் பிரசித்திப் பெற்றவையே. அவை:

ஆன்மிக துளிகள் - 2

பிள்ளையார்பட்டி - கொழுக்கட்டை

உப்பிலியப்பன் கோவில் - உப்பில்லாத பிரசாதங்கள்

ஸ்ரீமுஷ்ணம் - கோரைக்கிழங்கு

ஸ்ரீரங்கம்
- திருமால்வடை

சுசீந்திரம்
- வடை

சபரிமலை - அரவணை பாயசம்

திருப்புல்லாணி - பாயசம்

காஞ்சிபுரம் - குடலை இட்லி

வைத்தீஸ்வரன்கோவில் -  தினை மாவு

திருச்செந்தூர் - அரிசிப்புட்டு

திருவல்லிக்கேணி - திருக்கண்ணமுது

சிதம்பரம் - களி

அழகர் கோயில் - தோசை

ஆழ்வார் திருநகரி - வங்கார தோசை

- சொ.சண்முகசுந்தரி,  பெங்களூரு

ஆயுளைக் குறைக்கும் ஆறு விஷயங்கள்!

திகமான அகங்காரம், அதிகமாகப் பேசுதல்,  பிறருக்குக் கொடாமை, கோபம், சுயநலம், நண்பருக்குத் துரோகம் செய்தல் ஆகிய ஆறு விஷயங்களும் கூர்மையான கத்திகள் போல் மனிதனைக் கொன்றுவிடுகின்றன. ஆகவே, இதுபோன்ற குணங் களை விட்டொழிக்கவேண்டும் என்று திருதராஷ்டிரனுக்கு விதுரர் அறிவுறுத்தியதாகச் சொல்கிறது பாரதம். இது, நமக்கான அறிவுரையும்தான்.

- சொ.கணேசமூர்த்தி, வள்ளியூர்

அர்ச்சனைக்கு உகந்த  ஐந்து பத்ரங்கள்!

ஞானநூல்கள் சிறப்பிக்கும் பஞ்ச பத்ரங்களில் ஒன்று துளசி. மற்றவை: அறுகம்புல், வேம்பு, வன்னி, வில்வம். இவற்றை அர்ப்பணித்து தீர்த்தம் விடும் பாத்திரத்துக்கு பஞ்சபத்ர பாத்திரம் எனப்பெயர். இதையே இன்னாளில் பஞ்சபாத்திரம் என்கிறோம்.

இவற்றில் துளசி பெருமாளுக்கு உரியது. இதன் நுனியின் பிரம்மன், அடியில் சங்கரன், மத்திய பாகத்தில் நாராயணன் வசிப்பதாகவும், மேலும் தேவர்கள் அனைவரும் அதில் உறைவதா கவும் ஐதீகம். அத்துடன், அதன் ஓரங்கள் கங்கைக்கு நிகரான புனிதம் பெற்றதாம். அதுபோன்றே, அறுகம்புல் பிள்ளையார் பெருமானுக்கும், வேம்பு அம்மனுக்கும், வன்னி திருமகளுக்கும், விநாயகருக்கும், வில்வம் சிவனாருக்கும் உகந்த இலைகளாகும்.

- கே.மகேஷ்வரி, பாபநாசம்

முப்பத்து முக்கோடி... அதென்ன கணக்கு?

‘இறைவனை முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்டார்கள்’ என்றெல்லாம் பெரியோர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். படித்திருப்போம். அதென்ன... ‘முப்பத்து முக்கோடி’ கணக்கு? ஆதித்யர் 12, ருத்ரர் 11, அஸ்வினி தேவர்கள் 2, வசுக்கள் 8 ஆகியோர் மொத்தம் 33 பேர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் கோடி வகை பரிவாரங்கள் இருப்பதால், ‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ எனப் பெயர்.

நீராடும்போது முதலில் பாதத்தில் நீர் ஊற்றி நனைத்து, மெள்ள மெள்ள மேல்நோக்கி நனைத்துக் கொண்டு வந்து, நிறைவாக தலையில் நீரூற்றிக் குளிக்க வேண்டும் என்பார்கள் பெரியோர்கள்.

பார்த்தன், தனஞ்சயன் ஆகியன அர்ஜுனனின் வேறு பெயர்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இவைபோக, இன்னும் பல பெயர்கள் உண்டு அவனுக்கு.

பாண்டுவின் மகன் என்பதால் பாண்டவன், குரங்குக் கொடியை கொண்டவன் ஆதலால் கபித்வஜன், தூக்கத்தை வென்றவன் என்ற  பொருளில் குடாகேசன், பாவமற்றவன் என்பதால் அனகன், குந்தியின் மகன் என்பதால் கெளந்தேயன், குரு வம்சத்தில் பிறந்தவன் ஆகையால் குருநந்தனன், ஒரே நேரத்தில் இரு கரங்களாலும் அம்பு தொடுக்கும் வல்லமை கொண்டவன் என்பதால் சவ்யசாசி ஆகிய பெயர்களும் அர்ஜுனனுக்கு உண்டு.

- எம். மகேஷ், திருநெல்வேலி-2