Published:Updated:

கண்ணனின் ரதயாத்திரை...

கண்ணனின் ரதயாத்திரை...

பிரீமியம் ஸ்டோரி

கவான் ஸ்ரீகிருஷ்ணர் விருந்தாவனத்தில் (பிருந்தாவனம்) இருந்து மதுராவுக்குச் சென்றபோது, அதுவரை ஸ்ரீகிருஷ்ண பிரேமையில் திளைத்திருந்த கோபிகைகள் பிரிவாற்றாமையால் வருந்தினார்கள். பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையில் அரசனாக முடிசூட்டிக்கொள்கிறார்.

கண்ணனின் ரதயாத்திரை...

பல வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை சூரிய கிரகணத்தின்போது ஸ்ரீகிருஷ்ணர், பலராமர், சுபத்திரையுடன் குருக்ஷேத்திரத்துக்கு வந்தபோது, விஷயம் தெரிந்து வந்த கோபிகைகள், அவரை திரும்பவும் விருந்தாவனத்துக்கு வரும்படி அழைக்கும் வைபவமே ரதயாத்திரை மஹோற்ஸவம் ஆகும்.

500 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீசைதன்ய மகாபிரபு பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் நிகழ்த்திய ரத யாத்திரை மஹோற்ஸவம், கோபிகைகள் கிருஷ்ணரை மறுபடியும் விருந்தாவனத்துக்கு அழைத்து வந்ததுபோல் உணர்ச்சிகரமான நிகழ்வாகத் திகழ்ந்தது.

கண்ணனின் ரதயாத்திரை...

அவரைத் தொடர்ந்து பக்தி வேதாந்த பிரபுபாதா இந்த ரதயாத்திரை மஹோற்ஸவத்தை வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்தினார். ரத யாத்திரை பற்றி ஸ்ரீல பிரபுபாதா அவர்கள், “அது மிகவும் மகிழ்வூட்டக்கூடியது. நீங்கள் எந்தக் கட்டணமும் தர வேண்டாம். நீங்கள் வந்து, ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சரித்து, எங்களுடன் கீர்த்தனைகளில் பங்குகொள்ளுங்கள். பிறகு, பிரஸாதம் உண்டு மகிழுங்கள்” என்று கூறுகிறார்.

இந்த வருடம், ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் 8-வது ஆண்டு ஸ்ரீகிருஷ்ண பலராமர் ரத யாத்திரை, 17.12.16 சனிக்கிழமை அன்று மாலை சென்னை மெரினா கடற்கரை லைட்ஹவுசில் தொடங்கி, உழைப்பாளர் சிலை அருகில் நிறைவு பெறுகிறது. பக்தர்கள் பெரும் அளவில் இந்த ரத யாத்திரை மஹோற்ஸவத்தில் பங்கேற்று ஸ்ரீகிருஷ்ண பலராமர்களின் அருளுக்குப் பாத்திரராகலாம்.

- சுதாமா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு