Published:Updated:

வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!

வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!

நள்ளி ஸ்ரீசிங்கமடை ஐயனார்சி.சிங்கராஜ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கிராமம் நள்ளி. இந்த கிராமத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது சிங்கமடை பெரிய கண்மாய். இந்தக் கண்மாயின் கரையில் அமைந்திருக்கிறது ஸ்ரீசிங்கமடை ஐயனார் கோயில்.

வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!

சுமார் 500 வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒருவர், பஞ்சத்தின் காரணமாகப் பிழைப்பு தேடி வேறு ஊருக்குப் புறப்பட்டார். அப்படிச் செல்லும்போது, தான் அதுவரை வழிபட்ட ஐயனார், பேச்சி, கருப்பசாமி ஆகிய தெய்வங்களின் பிடிமண்ணை ஓர் ஓலைப் பெட்டியில் எடுத்துக்கொண்டு சென்றார்.

அவர் நள்ளி கிராமத்தை நெருங்கியபோது, பலத்த காற்றுடன் மழையும் கொட்டியது. எதிரில் வருபவர் யார் என்று அடையாளம் தெரியாதபடி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. அதேநேரத்தில், ‘சல சல’வென்று ஏதோ சத்தம் கேட்டது. உற்றுப் பார்த்தும் அவர் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. திடீரென்று தோன்றிய மின்னல் வெளிச்சத்தில், அருகில் இருந்த கண்மாயின் கரை உடைந்து, தண்ணீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரம் ஆனாலும் அருகில் இருந்த வயல்களில் விளைச்சலுக்குத் தயாராக இருந்த பயிர்கள் எல்லாம் மூழ்கிவிடும் நிலை.

வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!

கரையை அடைத்து வெள்ளத்தைத் தடுக்கப்பார்த்தார். ஆனால், அவர் ஒருவரால் மட்டும் அது முடியாத நிலையில், ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்துவரச் நினைத்தார். தான் கொண்டு வந்திருந்த பிடிமண் ஓலைப்பெட்டியை சிறிது தொலைவில் வைத்துவிட்டுச் சென்றார். ஊரில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு கண்மாய் இருந்த இடத்துக்கு வந்தபோது, அங்கே கண்மாயின் கரை அடைக்கப்பட்டு இருந்தது. ஊர் மக்கள் அனைவரும் தங்களை அழைக்க வந்தவரை சந்தேகத்துடன் பார்த்தனர். தன்னுடைய பக்தனின் பெருமையை அவர்களுக்கு உணர்த்தும் வகையில், பிடிமண் இருந்த ஓலைப் பெட்டியில் இருந்து ஒரு பேரொளியாய் தோன் றிய ஐயனார், ‘‘நான்தான் உங்கள் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றினேன். எனக்கும் என் பரிவார தெய்வங்களுக்கும் இந்த இடத்தில் கோயில் கட்டி வழிபட்டால், சுற்றுப்புற மக்களுக்கு அவர்கள் வேண்டியதை எல்லாம் தருவேன்’’ என்று கூறி அருளினார்.

இந்தச் செய்தியை வழிப்போக்கரும், கிராம மக்களும் செவல்பட்டி ஜமீன்தாரிடம் தெரிவித் தனர். பின்னர் ஜமீன்தார் ஐயனார் குறிப்பிட்ட இடத்தில் ஆலயம் எழுப்பி எல்லோரும் வழிபடச் செய்தார். நள்ளி சிங்கமடை கண்மாயின் அருகில் ஐயனார் கோயில் கொண்டதால், ‘நள்ளி ஸ்ரீசிங்கமடை ஐயனார்' என்று திருப்பெயர் கொண்டார்.
 
கருவறையில் பூர்ணா - புஷ்கலாம்பிகை சமேதராக அருட்காட்சி தருகிறார், ஐயனார். பரிவார தெய்வமாக தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மங்கலம் தரும் மஞ்சள் பிரசாதம் தந்து, அவர்களின் வேண்டுதலை நிறைவேற்று கிறாள் பேச்சியம்மன். மஞ்சள் பூசிய திருமுகத்துடன் காட்சி தருவதால், ஸ்ரீமஞ்சனை பேச்சியம்மன் என்றே அழைக்கிறார்கள் பக்தர்கள். மேலும் மாடன், மாடத்தி, பாதாள கன்னி, ராக்காச்சி அம்மன், பதினெட்டுப் படிகளுடன் கூடிய ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி ஆகியோரும் பரிவார தெய்வங்களாக அருள்கின்றனர்.

வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!

மகா சிவராத்திரியின் மூன்றாம் நாள் ஐயனாரின் உத்தரவு பெற்று கருப்பசாமி பரிவேட்டைக்குச் செல்லும் விழா பிரசித்தி பெற்ற விழாவாகும். கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை போன்ற விசேஷ தினங்களும் இக்கோயிலில் வெகு சிறப்பாக இங்கே கொண்டாடப் படுகின்றன. இந்த நாட்களில், சுற்றுப்புற 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பெருந்திரளாக வந்திருந்து ஐயனாரை வழிபட்டுச் செல்கிறார்கள்.

வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!
வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!

தினமும் பிற்பகல் 12 மணிக்கு ஐயனாருக்கு உச்சிக்கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர, ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில், இக்கோயிலுக்கு வந்து நீராடி மூன்று முறை பிரதட்சிணம் செய்து வழிபட்டால், மனக் கஷ்டங்கள் தீரும் என்கிறார் கள் பக்தர்கள்.

கோயிலுக்கு வந்திருந்த மகேந்திரன் - மகேஷ் தம்பதியிடம் கோயிலின் சிறப்பு குறித்து கேட்டோம். ‘‘எங்களுக்குத் திருமணம் முடிந்து ஐந்து வருடங் களாகியும் குழந்தை இல்லாமல் தவித்தோம்.ஒவ்வொரு மாதமும் ஒரு வெள்ளிக்கிழமையன்று இங்கே வந்து உருக்கமாகப் பிரார்த்தனை செய்துகொண் டோம். ஆறாவது மாதமே எங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டது’’ என்று பக்திப் பரவசம் மேலிட நம்மிடம் தெரிவித்தனர் அந்தத் தம்பதியர்.  இந்தக் கோயிலில் வேண்டிக் கொண்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஐயனாரின் பெயரைச் சூட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!

சந்ததி செழிக்க வரம் தந்து, நம் சிந்தை மகிழ அருள்பாலிக்கும் சிங்கமடை ஐயனாரை நீங் களும் ஒருமுறைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்;   அவரருளால் வாழ்க்கை வளமாகும்.


படங்கள்:- கா.அசோக் பால் ராஜன்

உங்கள் கவனத்துக்கு...

வேண்டியதை அருளும் வெள்ளிக்கிழமை தரிசனம்!

சுவாமி: ஸ்ரீசிங்கமடை ஐயனார்

தலவிருட்சம்:
- வில்வ மரம்

பிரார்த்தனைச் சிறப்பு:
வெள்ளிக் கிழமை களில் இங்கு வந்து, ஐயனாரை வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும். மஞ்சனை பேச்சி அம்மனின் மஞ்சள் பிரசாதம், வீட்டில் எப்போதும் மங்கலம் நிறைந்திருக்க அருள்செய்யும்.

எப்படிச் செல்வது?:
கோவில்பட்டியில் இருந்து சாத்தூருக்கு செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள நள்ளி விலக்கிலிருந்து, 2 கி.மீ கிழக்குப் புறமாக பயணித்தால் கோயிலை அடையலாம்.

நடைதிறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். விசேஷ தினங்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.