Published:Updated:

‘தடைகள் நீங்கும்; சந்தோஷம் பெருகும்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘தடைகள் நீங்கும்;  சந்தோஷம் பெருகும்!’
‘தடைகள் நீங்கும்; சந்தோஷம் பெருகும்!’

‘தடைகள் நீங்கும்; சந்தோஷம் பெருகும்!’

பிரீமியம் ஸ்டோரி
‘தடைகள் நீங்கும்;  சந்தோஷம் பெருகும்!’

‘நகரேஷு காஞ்சி’ என்று சிறப்பிக்கப்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமாற்பேறு (திருமால்பூர்) திருத்தலம் பாடல் பெற்ற தலம். திருமாலுக்கு அருளிய ஐயன், மணிகண்டீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு, அம்பிகை அஞ்சனாக்ஷியுடன் கோயில் கொண்டிருக்கும் தலம். இந்த ஆலயத்தில் கடந்த 15.11.16 அன்று சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

 கிராமத் தலைவர் சிங்காரம் முன்னிலை யில், திருக்கோயில் குருக்கள் சண்முகம், ‘‘கூட்டுப்பிரார்த்தனையுடன் பெண்களால் நடத்தப்படும் விளக்கு பூஜை அளவற்ற சக்தி கொண்டது. வீட்டில் சந்தோஷம் பெருகும். திருமணத் தடை நீங்கி, நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி போன்ற எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியது விளக்கு பூஜை’’ என்று விளக்கு பூஜையின் மகிமைகளைக் குறித்து விளக்கினார். பின்னர் வேத மந்திரங்கள் ஒலிக்க நடைபெற்ற பூஜையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வாசகியர் கலந்துகொண்டனர்.

‘தடைகள் நீங்கும்;  சந்தோஷம் பெருகும்!’

பூஜையில் கலந்துகொள்வதற்காக சென்னையி லிருந்து வந்திருந்தார் வாசகி விஜயலட்சுமி. ``சக்திவிகடன் இதழைத் தொடர்ந்து  படித்து வருகிறேன். இந்தக் கோயில் பற்றி வாசித்ததில் இருந்தே, இங்கு வரவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. திருவிளக்கு பூஜை குறித்த அறிவிப்பு வந்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாகப் பதிவு செய்தேன். எங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பதற்காக இதில் கலந்துகொண்டோம். மணிகண்டீஸ்வரர் தரிச னமும், இங்கே நடைபெற்ற திருவிளக்கு பூஜையும் அதற்கான நம்பிக்கையைத் தந்திருக்கின்றன’’ என்றார் விஜயலட்சுமி

 ``நல்ல வரன் அமைய வேண்டும் என்பதற்காகவும், என் தந்தை உடல்நலம் பெறவேண்டியும் விளக்கு பூஜையில் கலந்து.கொண்டேன். சக்திவிகடன் விளக்கு பூஜைக்கான அனைத்து பூஜைப் பொருட்களையும் வழங்கியது, விழாவில் எங்களை உற்சாகமாகப் பங்கேற்க உதவியது” என்றார், காஞ்சிபுரம் வாசகி சுந்தரவள்ளி. நிறைவாக ஓதுவார் அருளானந்தம் திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடினார்.

‘திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட தங்களுக்கு, அன்னை அஞ்சனாக்ஷி சமேத அருள்மிகு மணிகண்டீஸ்வரரின் அருள் நிச்சயம் கிடைக்கும்’ என்ற நம்பிக்கை ஒளி வாசகியர் முகங்களில் பளிச்சிட்டதை நம்மால் காண முடிந்தது.

- இ.அன்பரசன்
 படங்கள்: அ.சரண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு