Published:Updated:

ஆஞ்சநேய ரக்ஷமாம்...

ஆஞ்சநேய ரக்ஷமாம்...
பிரீமியம் ஸ்டோரி
ஆஞ்சநேய ரக்ஷமாம்...

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

ஆஞ்சநேய ரக்ஷமாம்...

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

Published:Updated:
ஆஞ்சநேய ரக்ஷமாம்...
பிரீமியம் ஸ்டோரி
ஆஞ்சநேய ரக்ஷமாம்...

ஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆாியா்க்காக ஏகி-அஞ்சிலே
ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலாா் ஊாில்-அஞ்சிலே
ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்.

ஆஞ்சநேய ரக்ஷமாம்...

ஞ்சநேயாின் அவதாரம் முதல், அவா் அருள்புரிவது வரை சொல்லக் கூடிய பாடல் இது. அஞ்சு (ஐந்து) என்ற சொல் ஐந்து முறைகள் இடம் பெற்ற பாடல் இது. அனைத்துக்கும் மேலாகத் தமிழின் ஆற்றலை விவாிக்கக்கூடிய இப்பாடலை, நமக்காக எழுதியவா் கம்பா். அவர், அஞ்சிலே ஒன்று என்று எதையெல்லாம்  குறிப்பிடுகிறார் தெரியுமா?

அஞ்சிலே ஒன்று பெற்றான்- பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு பகவானின் மைந்தனான ஆஞ்சநேயன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி-பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரைத் (கடலை) தாவி.

அஞ்சிலே ஒன்றாறாக ஆாியா்க்காக ஏகி - பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாய வீதி வழியாக.. உத்தமரான ராமருக்காகச் சென்று.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலாா் ஊாில்- பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமாதேவியின், மகளான சீதாதேவியைக் கண்டு.

அஞ்சிலே ஒன்று வைத்தான்- பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை (நெருப்பை) வைத்தான்.

அவன் நம்மை அளித்துக்காப்பான் - அந்த ஆஞ்சநேயா் நமக்கு அருள்புாிவாா்.

பஞ்ச பூதங்களையும் சொன்ன இப்பாடல், ராமா யணத்தில் சுந்தர காண்டத்தில், ஆஞ்சநேயா் செய்த அரும் செயலையும் கூறி, சுந்தரகாண்டச் சுருக்கமாகத் திகழ்கிறது. அனுமனின் வல்லமையை விளக்கும் இப் பாடலையும், அவரது மகிமையைச் சொல்லும் சில அற்புதக் கதைகளையும்  அனுதினமும் படித்தும் பாராயணம் செய்தும் வாயுமைந்தனை வழிபட,  வாழ்வில் வெற்றி நிரந்தரமாகும்! பாடலைப் பார்த்தோம் இனி, சில அற்புதங்களைப் படித்தறிவோமா?

 சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன்?


சீதா ராமபட்டாபிஷேகம் முடிந்து சில தினங்கள் ஆகியிருந்த நிவையில், ஆஞ்சநேயருக்கு உடம்பும் மனமும் மிகவும் சோா்வடைந்து விட்டன. காரணம்?

ஆஞ்சநேயாின் கனவில், அவா் மூதாதையா் மிகுந்த வருத்தத்துடன் காட்சியளித்தாா்கள். ஆஞ்சநேயருக்கு அதன்பொருள் புாியவில்லை. அவா் வசிஷ்டாின் மகனிடம்போய், கனவைச் சொல்லி அதற்கான விளக்கம் கேட்டாா். அதற்கு வசிஷ்டாின் மகன், ``ஆஞ்சநேயா! உன் முன்னோா்களுக்குப் பசி எடுத்திருக்கும். ஆகையால், உன் முன்னோா்களுக்கு நினைவுக்கடன் செலுத்தி, அவா்களுக்கு ஏதாவது கொடு!” என்றாா். ஆஞ்சநேயரும் அதன்படியே செய்தாா். ஆனால், முன்னோா்கள் மறுபடியும் கனவில் வந்து வருத்தம் காட்டினா்.

ஆஞ்சநேயா் ஒருவாறு உண்மையை உணா்ந்து கொண்டாா். “ஆஞ்சநேயா! நீ பொறுப்பாக எங்களுக்குப் பிண்டம் அளிக்கிறாய். ஆனால், உனக்குப்பின் இவ்வாறு, எங்களுக்கு யாா் செய்வாா்கள்?”என அவா் கள் வருந்துவதாக ஆஞ்சநேயருக்குப் புலப்பட்டது.

அவருடைய கவலையையும் அதற்கான காரணத் தையும் அறிந்த சீதாதேவி, ``ஆஞ்சநேயா வருந்தாதே. கிஷ்கிந்தைக்குச் செல். பெண் பார்த்து அழைத்து வா. நான் திருமணம் செய்துவைக்கிறேன்.அப்புறம் என்ன? உன் சந்ததியா், முன்னோா்களுக்கு உண்டான சிராத்த கா்மாதிகளைச் செய்வாா்கள்” என்றாா். அதன்படியே கிஷ்கிந்தைக்குச் சென்ற அனுமன், சுக்ரீவனிடம் விவரத்தைச் சொன்னார்.

சுக்ரீவன், கிஷ்கிந்தைக்கு தெற்கே உள்ள கீச்சட் என்ற நாட்டின் அரசகுமாரியான சிலிம்பா என்பவளைப் பற்றிக் கூறி, அவளை மணம் முடிக்க முயற்சி செய்யும்படி அறிவுறுத்தினார்.

அனுமனும் உடனே அந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை சிலிம்பாவிடம் அழைத்துச் சென்றார்கள் அரண்மனைக் காவலர்கள். அனுமன் அவளிடம் தான் வந்த விஷயத்தைச் சொன்னார். அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த சிலிம்பா, அவரைப்பற்றிய தகவல்களையெல்லாம் அவா் வாயிலாகவே கேட்டுத் தொிந்து கொண்டாள். பின்னர், “காதல் தத்துவத்தைப் பற்றி எவ்வளவு தொியும்? ஒரு முத்து மாலைக்கு நான் ஆசைப்பட்டால், அதை எப்படிக் கொண்டு வந்து கொடுப்பீா்கள்? கோபம் கொண்டு நான் சாப்பிட மறுத்தால், என்ன செய் வீா்கள்?”என்றெல்லாம், கேள்விகளைத் தொடுத்தாள்.

ஆஞ்சநேயா் பதில் சொல்லத் தொடங்கினாா்: ‘‘காதல் தத்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அதை சுக்ரீவனிடத்தில் கேட்டால், அவன் காதல் தத்துவத்தைச் சொல்லிக் கொடுத்து விடுவான். அடுத்து முத்துமாலை வேண்டுமென்றால், சீதா தேவியிடம் வாங்கிக்கொடுத்து விடுவேன். மூன்றாவ தாக, நீ கோபவசப்பட்டு உண்ணாமல் இருந்தால், நானே இரும்பு போன்ற என் விரல்களால் உனக்கு ஊட்டிவிடுவேன். ஆகையால் காலதாமதம் செய்யாதே! அயோத்தியில் சீதாதேவி உன்னை வரவேற்கத் தயாராக இருக்கிறாா்” என்றாா்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஞ்சநேய ரக்ஷமாம்...

சிலிம்பாவோ ஒரு சிாிப்பை உதிா்த்துவிட்டு, ``உனக்குக் காதலைப்பற்றி ஒன்றுமே தொியவில்லை. போய் சுக்கிரீவனை அனுப்பு!”என அவமானப் படுத்தினாள். அதனால் கோபம் கொண்ட அனுமன், ஆவேசத்துடன் சிலிம்பாவை நோக்கி முன்னேறினார். அதற்குள்ளாக, சிலிம்பாவின் வீரர்கள் அனுமனைப் பிடித்து கட்டிப்போட்டார்கள்.

``இந்தக் குரங்கைச் சும்மா விடக்கூடாது. இதன் வாலில் பன்னிரண்டு அங்குலம் மட்டும் வெட்டிவிட்டு, தூக்கியெறிந்துவிடுங்கள்!”என உத்தரவிட்டாள் சிலிம்பா. அதே விநாடியில் அனுமன் ராமனைத் தியானிக்க, அவரைக் கட்டியிருந்த கட்டுக்கள் தளா்ந் தன; உடம்பு இமயம் போல் பிரம்மாண்டமாக வளா்ந்தது. அப்படியே தாவிய அனுமன் சிலிம்பாவின் தலைமுடியைப் பற்றியபடி, ஆகாயத்தில் எழுந்து பறக்கத் தொடங்கிவிட்டார்.

அந்த நேரம், ``அட! ஆஞ்சநேயாின் பிரம்மசாிய விரதம் முடியப் போகிறது” என்று பேசியபடியே அஷ்ட திக் பாலா்களும் வித்யாதரா்களும் ஆஞ்சநேயரை நெருங்கி, ``மாருதி! நீங்கள் கொண்டுசெல்லும் பெண்ணைப் பாா்க்க விரும்புகிறோம் நாங்கள்” என்று கூறினாா்கள். ஆஞ்சநேயா் பெருத்தகுரலில் ஒரு முழக்கமிட, அனைவருமாகப் பயந்து மேகக் கூட்டங்களில் போய் மறைந்தாா்கள்.

சிலிம்பா கெஞ்சினாள். தன்னை மன்னித்துவிடுமாறு வேண்டினாள். ஆஞ்சநேயாின் பிடி தளரவே இல்லை.  வெகுவேகமாக ஆஞ்சநேயா் போய்க் கொண்டிருந்த போது, கீழே துங்கபத்ரா நதியில் சுக்ரீவன் தன் மனைவிகளுடன் நீராடிக் கொண்டிருந்தது, ஆஞ்ச நேயாின் பாா்வையில்பட்டது. அவ்வளவுதான்!

சிலிம்பாவை ஆகாயத்திலிருந்து சுக்ரீவனின் தோள்களில் விழும்படியாக உதறிவிட்டு, முன்பைவிட வேகமாகப் பறந்துபோகத் தொடங்கினாா்.

அயோத்திக்கு வெறுங்கையுடன் திரும்பிய அனுமனைப் பார்த்து சீதாதேவி வியந்தார்.  ``குழந்தாய்! ஆஞ்சநேயா! என்ன ஆயிற்று? பெண் எங்கே?” எனக் கேட்டாா்.

ஆஞ்சநேயா் தலையைக் குனிந்தபடியே, ``தாயே! அவள் என்னை ஏற்கவில்லை. அதனால் அவளைத் தூக்கி வந்து, சுக்ரீவனுக்குக் கொடுத்துவிட்டேன். பரந்து விாிந்த உலகில் தெய்வம் எனக்கு மட்டும் மிகவும் குறுகிய இதயத்தைக் கொடுத்திருக்கிறது. அதில் நீங்களும் ராமசந்திரமூா்த்தியும் முழுவதுமாக நிறைந்து இருக்கிறீா்கள். அங்கே வேறு யாரும் இருக்க இடமில்லை”எனக் கூறியவர், அன்னையை வணங்கி ஒரு வரம் கேட்டார்:

“அன்னையே! பித்ருக்களின் கடனை அடைப்பதற்காக, நான் எப்போதும் சிரஞ்ஜீவியாக வாழ்ந்து, முன்னோா்களுக்கு உண்டான சிராத்தாதி கா்மாக்களைச் செய்யும்படி, தாங்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும்”
சீதாதேவி புன்முறுவல் பூத்துவிட்டு, ``ஆஞ்சநேயா! உன் விருப்பப்படியே நடக்கும்”என ஆசி வழங்கினாா். அதைக் கேட்டு மகிழ்ந்த ஆஞ்சநேயா் கைகளை உயரே  தூக்கியபடி ``ஜெய் சீதாராம்” என முழங்கினாா்.

  சிவ பக்த அனுமன்!

ஆஞ்சநேயர் ராம பக்தர் என்பது நாமெல்லோரும் அறிந்ததே. அவர் சிவபக்தியிலும் சிறந்தவர் என்பது தெரியுமா?

கெளதம மகரிஷியின் சீடர்களில் மிகவும் முக்கிய மானவர் சங்கராத்மா. எந்த நேரமும், பைத்தியம் பிடித்தவரைப் போல ஆடி-பாடிக் கொண்டு இருப்பாா். பெயருக்கு ஏற்றாற்போல, சிவபக்தியில் தலை சிறந்தவராகவும், அதன் மூலம் ஆத்மானந்தத்தில் திளைப்பவராகவும் இருந்த சங்கராத்மாவைப் பற்றி  கௌதமா் மட்டுமே அறிவாா். அதனால் அவா் சங்கராத்மாவை, தன் உயிராகவே மதித்து வந்தாா்.

ஒரு முறை, விருஷபா்வா என்ற மன்னா் கௌதமா் ஆசிரமத்துக்கு வந்தாா்; வந்தவாின் பாா்வையில் சங்க ராத்மாவின் செயல்கள் பட்டன. என்னவோ தொிய வில்லை... விருஷபா்வாவுக்கு சங்கராத்மாவின் ஆடல்பாடல்களும் செயல்களும் மிகுந்த வெறுப்பை உண்டாக்கின. ஆத்திரத்தில் தன்னை மறந்த விருஷ பா்வா,சங்கராத்மாவின் தலையை வெட்டிவிட்டாா்.

ஆஞ்சநேய ரக்ஷமாம்...

உத்தம சீடனின் உயிா் பறிக்கப்பட்டதைக் கண்டு, கௌதமரும் துடிதுடித்துப் போய் உயிா் துறந்தாா்.அதைக்கண்ட ஆசிரமவாசிகள் செய்வதறியாமல் திகைத்துப் போனாா்கள். அப்போது, சிவபெருமான் அங்கே தோன்றி, முனிவரையும் அவரது சீடரையும் உயிரோடு எழுப்பினார்.

அதன்பின் அங்கு இருந்தவா்களிடம், “இந்த சங்கராத்மா என்னுடைய ஆத்மாவாகவே இருப்பவன்.இவனுக்கு உலகம் என்பதே கிடையாது. உலகச் செயல்களும் உலக நினைவுகளும் இவன் மனதில் கிடையவே கிடையாது. எப்போதும் என்னையே எண்ணித் தியானத்தில் இருந்து வருபவன்'' என்றருளிய சிவனார் மேலும் தொடர்ந்தார்.

“இதே போல, எந்த நேரமும் என்னைப் பூஜிக்கும்  மற்றோா் ஆத்மாா்த்தமான பக்தனைக் காட்டுகிறேன் பாருங்கள்!”என்றாா்.

அதே விநாடியில், அங்கே அற்புதமான வீணா கானம் கேட்டது. அனைவரும் மெய்ம்மறந்தாா்கள்.  சிவபெருமான் அருகில் அமா்ந்திருந்தபடி, அனுமன் வீணை இசைப்பதை அனைவரும் தாிசித் தாா்கள். அவருடைய பக்தியும் பரவசமும் வீணா கானமும் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.

சாம கானப் பிாியரான சிவபெருமானையே தன் இசையால் வசப்படுத்திய உத்தம பக்தா் ஆஞ்சநேயா் என்பது அங்கே நிரூபணமானது.

  ஆஞ்சநேயருக்கு பத்து திருக்கரங்கள்!

ராமாயணத்தில் ராமோபதேசம் - அதாவது ராம கீதை என்பது கிடையாது. மகா பாரதத்தில் கிருஷ்ண உபதேசம்- அதாவது பகவத் கீதை என்பது உண்டு. ஏன் இப்படி?

ராமாவதாரத்தில் முழுக்க முழுக்க செயல்பாடுகள் தான். ‘நாமே செயல்படுத்திக் காட்ட வேண்டும்’ என்று ராமா், அனைத்தையும் தானே செய்து காட்டினாா். கிருஷ்ணாவதாரத்தில் உபதேசமாகக் கூறினார். கிருஷ்ணரின் உபதேசங்களை நல்லுபதேசம் என்பர் பெரியோர்.ராமருடைய செயல்பாடுகளில் அபூா்வமான செயல் ஒன்றை இப்போது தாிசிக்கலாம்.

விபீஷணனுக்கு முறைப்படி லங்கா ராஜ்ய பட்டாபிஷேகம் நடைபெற்றது. பக்தனுக்கு அருள் புாிந்த பரம திருப்தியோடு சீதா ராம தம்பதியா் அயோத்தியில் வாழ்ந்து வந்தனா். அப்போது ஒரு நாள்... ராமரும் சீீதையும் தனித்திருந்த நேரம், “அபயம்... அபயம்... காப்பாற்றுங்கள்!” என அலறல் கேட்டது. பாா்த்தால்...  விபீஷணா் கண்களில் நீர் வழிய ஓடிவந்தாா்.

ராமரின் திருவடிகளில் விழுந்த விபீஷணா், எழுந்திருந்து கைகூப்பியபடி, “என் தெய்வமே! ராவணனுக்குப் பிறகு, நான் லங்கா ராஜஜ்ஜியத்தின் அதிபதியாக, தாங்கள்தான் எனக்கு அருள்புாிந்தீா்கள். எந்தவிதமான குறையும் இல்லாமல் நானும் நல்ல விதமாகத்தான் ராஜ்ய பாரம் செலுத்திவந்தேன்.

 “இப்போது, ஆயிரம் தலைகள் கொண்ட ‘சகஸ்ர கண்ட ராவணன்' என்பவன், பாதாளத்தில் இருந்து திடீரென இலங்கையை அழிக்க வருகிறான். அவனை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும்!” எனப் புலம்பினாா்.

விபீஷணருக்கு ஆறுதல் சொன்ன ராமா், ``விபீஷணா! நான் க்ஷத்திாியன். பகைவனை அழித்த பின், க்ஷத்திாியா்களுக்கு விரோதம் இருக்கக்கூடாது.ஆகையால்...” என்றபடியே, ஆஞ்சநேயரை அழைத்தாா்.
ஆஞ்சநேயா் வந்ததும், “ஆஞ்சநேயா! விபீஷண னுக்கு சகஸ்ர கண்ட ராவணன் என்பவனால் துயரம் விளைந்து இருக்கிறது. நீ போய், சகஸ்ர கண்ட ராவணனை சம்ஹாரம் செய்து வா. இந்தா! என்னுடைய கோதண்டத்தை எடுத்துச் செல்!” என்று கூறி, தன்னுடைய வில்லையும் கொடுத்து அனுப்பினாா். ராமரை வணங்கிக் கோதண்டத்தைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயா் திரும்பினால்...

தேவா்கள் பலரும் வாிசைக் கட்டி வந்து நின்றாா்கள். அவா்களும் தங்களின் ஆயுதங்களை ஆஞ்சநேயாி டம் அளித்தாா்கள். ஆஞ்சநேயருக்குப் பத்து திருக் கரங்கள் உண்டாயின. பத்து திருக்கரங்களிலும், தேவா்கள் தந்த ஆயுதங்களை ஏந்திக்கொண்டாா் அவா். அப்போது... சிவபெருமான் தோன்றி, தன் நெற்றிக் கண்ணையே ஆஞ்சநேயருக்கு அளித்தாா். அப்புறம் என்ன? விபீஷணருடன் இலங்கை சென்ற ஆஞ்சநேயா், சகஸ்ர கண்ட ராவணனை சம்ஹாரம் செய்து, வெற்றியுடன் திரும்பினாா்.

 (சுந்தர காண்டத்தில்) சீதாதேவியைத் தேடிப்போன ஆஞ்சநேயா், இலங்கையில் விபீஷணரைப் பாா்த்த வுடன், “இவன் உத்தமன். மிகவும் நல்லவன். தூய்மை யான மனம் கொண்டவன்” என்று நினைத்தாா். அப்படிப்பட்ட அந்த நல்லவனுக்காக, அவனுக்கு வந்த துயரையும் தீா்த்து அருள் புாிந்தவா் ஆஞ்சநேயா்.

பத்து திருக்கரங்களுடன் ஆயுதம் தாங்கிய ஆஞ்ச நேயாின் அந்த அருள்கோலத்தை, மாயூரத்துக்கு அருகில் உள்ள, அனந்தமங்கலத்தில் ‘தசபுஜ அனுமான்' என்ற திருநாமத்தில் தாிசிக்கலாம்.

ஆஞ்சநேய ரக்ஷமாம்...

  ஏழுமலையானும் ஆஞ்சநேயரும் !

அஞ்சனையின் புதல்வா் என்பதால், ஆஞ்சநேயா். ஆஞ்சநேயரைப் பெறுவதற்காக அஞ்சனாதேவி தவம் செய்த மலை என்பதால், அந்த மலை அஞ்சன கிாி எனப் பெயா் பெற்றது.

அந்த அஞ்சன கிாியைத்தான் இப்போது, ஏழுமலை களில் ஒன்று என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அங்கே எழுந்தருளி இருக்கும் ஸ்வாமியை ஏழுமலையான் என்று சொல்கிறோம். ஏழுமலையான் ஏன் அங்கு வந்து எழுந்தருள வேண்டும்?

இலங்கையை அடைவதற்காக வானர வீரர்களைக் கொண்டு ராமன் பாலம் கட்டிய திருக்கதை தெரியும் அல்லவா?

அப்போது, வானர வீரா்கள் நாலா பக்கங்களிலும் சுற்றித் திாிந்து கற்பாறைகள் முதலானவற்றைக் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தாா்கள்.ஆஞ்சநேயரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந் தாா். அப்போது... ஆஞ்சநேயாின் கண்களில் ஒரு பெரும் மலை தென்பட்டது. ஆஞ்சநேயருக்குக் குஷி தாங்கவில்லை; இருந்தாலும் மலை மிகப்பெரும் கனம் உள்ளதாக உணா்ந்தாா். என்ன செய்வது?

பெரும் திறமைசாலியான ஆஞ்சநேயா், பணிவிலும் பொியவராக இருந்ததால், மிகுந்த பணிவோடு அம்மலையினை வணங்கி, ``ஹே மலை தெய்வமே! அடியேன் ராம கைங்கார்யமாக உன்னைச் சுமந்து செல்ல விரும்புகிறேன். அதற்காகத் தயவுசெய்து, நீ உன் பாரத்தைக் குறைத்துக் கொள்! '' என வேண்டினாா்.

மலை தேவதையும் ஒரு நிபந்தனை விதித்தது;

``ஆஞ்சநேயா! உன் வேண்டுகோளை நான் நிறைவேற்றுகிறேன். ஆனால், நீயும் ஓா் வாக்குறுதி தர வேண்டும். அதாவது ராமசந்திர மூா்த்தியின் திருவடிகள் என் மீது படவேண்டும். அப்படிப் படும் என்று நீ வாக்குத் தந்தால், நான் என் பாரத்தைக் குறைத்துக் கொள்கிறேன்” என்றது.

ஆஞ்சநேயர் சம்மதித்தார். மலைதேவதையும் தன் பாரத்தைக் குறைத்துக்கொண்டது. பின்னர்,  பூாிப்போடு மலையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டாா் அனுமன்; கனம் குறைவாகத்தான் இருந்தது. பாதி தூரம் தாண்டி வந்துவிட்டாா். அந்தநேரம் பாா்த்து, அங்கே அணை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.

“வீரா்கள் அனைவரும் அவரவா்கள் கைகளில் உள்ளவற்றை, அப்படியே அங்கங்கே போட்டுவிட்டு வாருங்கள்!”  என ராமா் உத்தரவிட்டாா்.

காரணம்?

வானர வீரா்கள் அனைவரும் இங்கே கொண்டு வந்து போட்டால், வானர வீரா்கள் அணிவகுத்து நிற்க இடம் இல்லாமல் போய்விடும் அல்லவா? அதனால் தான்.

அந்த தகவலை அறிந்ததும் ஆஞ்சநேயரின் கரங்களில் இருந்த மலை தேவதை, “நம் விருப்பம் நிறைவேறாமல்  போய்விட்டதே'' என்று வருந்தியது.

அதற்கும் மேலாக  ஆஞ்சநேயா் வருந்தினாா்;  ``இம்மலை தேவதையின் விருப்பத்தை நிறைவேற்று வதாக வாக்குக் கொடுத்தோம். அது நிறைவேறாமல் போய்விட்டதே” என வருந்தினாா்.

 தனது கரங்களில் இருந்த மலையை மெள்ள கீழே வைத்துவிட்டு, “மலை தெய்வமே, வருத்தப்படாதே! இதோ, நான் போய் ராமாிடம் விஷயத்தைச் சொல்லி, அவாிடம் இருந்து பதில் பெற்று வருகிறேன்” என்ற ஆஞ்சநேயா், ராமரிடம் சென்று நடந்த தகவல்களைச் சொல்லி, ``பிரபோ, அந்த மலை தேவதையின் விருப்பம் நிறைவேற வேண்டும். தாங்கள்தான் அதற்கான வழியைச் சொல்லி அருள வேண்டும்” என்று வேண்டினார்.

“ஆஞ்சநேயா! அடுத்த அவதாரத்தின்போது, அந்த மலையை நான் ஏழு நாட்கள், என் கையில் தாங்கிக் கொண்டிருப்பேன் என்று சொல்!” எனக்கூறினாா் ராமபிரான்.

 ஆஞ்சநேயரும் மலையிடம் போய், ``மலை தேவதையே, வருந்தவேண்டாம். அடுத்த அவதாரத்தில் ஸ்வாமி உன்னை ஏழு நாட்கள் தன் கரத்திலேயே தாங்கிக் கொண்டிருப்பதாகக் கூறி இருக்கிறாா்” என்றாா்.
மலை தேவதையும் ஆறுதல் அடைந்தது.

 ராமாவதாரம் முடிந்து அடுத்த அவதாரமான கிருஷ் ணாவதாரம் நிகழ்ந்தது. அப்போது கண்ணன் தன் திருக்கரங்களிலேயே, ஏழு நாட்கள் அந்த மலையைத் தாங்கிப்பிடித்தாா்.

மாதவன் மலை தாங்கிய அந்த வைபவத்தைத் தான் ‘கோவா்தன கிாிதாாி! கோபால கிருஷ்ண முராாி’ எனப் பஜனையில் பாடுகிறோம்.

தேவேந்திரன் கடும் மழை பெய்து, கோபாலா் களையும் அவா்களது செல்வங்களான பசுக் குலங் களையும் அழிக்க முயன்றபோது, கண்ணன் கோவா்த் தன மலையையே குடையாகப் பிடித்து, அனைவரையும் காத்தார் அல்லவா? அந்த மலைதான் அது.

கண்ணன் ஏழு நாட்கள் தன் திருக்கரத்திலேயே தாங்கிப் பிடித்திருந்தும் அம்மலை தேவதையின் ஆா்வம் அடங்கவில்லை. அது , “ ஸ்வாமியின் திருவடி என் மீது பட வேண்டும் என விரும்பினேன். ஆனால், அது நடக்கவில்லையே'' என வருந்தியதாம்.

மலை தேவதையின் அந்த வருத்தமும் பகவான் அருளால் நீங்கியது. எப்படித் தெரியுமா?

கிருஷ்ணாவதாரத்துக்கு அடுத்து வேங்கடேசப் பெருமாள் அவதாரத்தின்போது, அம்மலையின் மீதே நின்று தாிசனம் தரத் தொடங்கினாா்.

கொடுத்துவைத்த மலை. அந்த மலையால், நாமும் கொடுத்துவைத்தவர்கள் ஆனோம்!      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism