Published:Updated:

நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!

நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!

மின்சாரம் இல்லை... கதவுகளும் இல்லை...

நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!

மின்சாரம் இல்லை... கதவுகளும் இல்லை...

Published:Updated:
நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!
நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!

நாரதரின் வருகைக்காகக் காத்திருந்த வேளையில் அவரிடம் இருந்து ஒரு மெசேஜ் ‘வர்தா புயலில் சிக்கிக்கொண்டேன். இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுகிறேன்’ என்று நம்முடைய வாட்ஸப்பில் வந்து விழுந்தது. சொன்னபடியே கொஞ்சநேரத்துக்கெல்லாம் நாரதர் நடுங்கியபடி வந்து நமக்கு எதிரில் அமர்ந்தார்.

நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘என்ன நாரதரே, வர்தா புயல் உங்களையும் அலைக்கழித்து விட்டதோ?’’ என்று கேட்டபடியே அவருக்கு இஞ்சி டீ கொடுத்து ஆசுவாசப்படுத்தினோம். சூடான இஞ்சி டீயைப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாரதர், ‘‘இயற்கைச் சீற்றம் யாரைத்தான் விட்டு வைத்தது? இதுபோன்ற இடையூறுகளில் இருந்து நாம் தற்காத்துக்கொள்ள கோளறு பதிகத்தை பாராயணம் செய்தால் எந்த இடையூறில் இருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ளலாம்’’ என்றவர் தொடர்ந்து, ‘‘இயற்கைச் சீற்றங்கள் நம்மை இப்படி படுத்துவதற்கு நாமும் ஒரு வகையில் காரணம்தான்’’ என்றார்.

ஒன்றும் புரியாமல் ‘‘நாம் எப்படி காரணமாவோம்?’’ என்று கேட்டோம்.

‘‘நாம் பல விதங்களில் இயற்கையை மாசு படுத்துகிறோம். அதுமட்டுமல்லாமல், இறைவனின் உறைவிடமான ஆலயங் களையும் சரியாக கவனிக்காமல் விட்டு விடுகிறோம். இறைவனுக்கு நித்திய பூஜைகள் ஒழுங்காக நடந்தால்தானே கடவுளின் மனம் குளிரும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவார்?'' என்றார்.

''அப்படி ஏதேனும் ஒரு கோயிலுக்கு நீர் போய் வந்தீரா?’’ என்று கேட்டோம்.

‘‘போனமுறை வந்தபோது, கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பசுபதீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோயில் வழிபாடு இல்லாமல் இருப்பதாக சொன்னேனே நினைவிருக்கிறதா?’’ என்று கேட்டார்.
‘‘ஏன் நினைவில்லாமல்? அந்தக் கோயிலுக்குப் போய் வந்தீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘அதைத்தான் நான் இப்போது சொல்லப் போகிறேன். அதற்கு முன்பு கோயிலின் தல வரலாற்றை சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்’’ என்றவர் தொடர்ந்து தல வரலாற்றை கூறினார்.

நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!

‘‘கயிலையில் ஒருமுறை பார்வதி பந்து விளையாட விரும்பினார். ஈசனும் நான்கு வேதங்களையும் பந்துகளாக மாற்றி அம்பிகை யிடம் கொடுத்து விளையாடச் சொன்னார். அம்பிகை பந்தாடும் அழகை, மனம் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமிக்க மறந்து விட்டான். சூரியன் மறையாததால் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய முடியாமல் தவித்தனர். முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அம்பிகையிடம் விளையாட்டை நிறுத்துமாறு சொல்கிறார். விளையாட்டு ஆர்வத் தில் அம்பிகை ஈசன் கூறியதைக் கேட்கவில்லை. சினம் கொண்ட ஈசன், அம்பிகையை பூமியில் பசுவாகப் பிறக்குமாறு சபித்துவிடுகிறார். அவரே பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் இருக்கும் புற்றுக்கு பால் சொரியும்படியும் உரிய காலத்தில் சாப விமோசனம் கிடைக்கும் என்றும் கூறினார். தங்கை பார்வதியை சாபத்தில் இருந்து விடுவிக்க திருமாலும் ஓர் இடையனாக வருகிறார். பசு ஓர் இடத்தில் பால் சொரிவதைக் கண்ட திருமால் பசுவை அடிக்கப் போக, பசு துள்ளியது. பசுவின் துள்ளலில் புற்று உடைந்து சிவபெருமான் லிங்க வடிவில் வெளிப்பட்டார். இதுதான் தல வரலாறு. தங்கை பார்வதியுடன் திருமாலும் வந்த தால், பசுபதீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே ஆதிகேசவ பெருமாள் கோயிலும் அமைந்தி ருக்கிறது.  ஒரு கோட்டைக்குள் இருப்பதால் கோட்டைக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன’’ என்றார்.

‘‘இவ்வளவு மகத்துவமான கோயிலிலா பூஜைகள் சரிவர நடக்கவில்லை என்கிறீர்?!’’

‘‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்? இத்தனை சிறப்புகள் வாய்ந்த கோயில் தற்போது முறையான பராமரிப்பில்லாமல் சீரழிந்து  வருவதுதான் வேதனையான செய்தி..’’

``என்ன நாரதரே சொல்கிறீர்?’’

``உண்மைதான்.  கோட்டையைச்  சுற்றி, 18 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகள் இருந்தன. கீழ்மாத்தூர் என்ற கிராமத்தில்  இருந்து கோயில் அகழிக்கு நீர் வரும். தற்போது  நீர்வரத்து  நிறுத்தப் பட்டுவிட்டது. அகழிகள் அனைத்தும் அழிக்கப் பட்டு நஞ்சை நிலங்களாக  மாற்றப்பட்டு விட்டன. `பசுபதீஸ்வரர் கோயிலுக்குச்   சொந்த மான மூன்று பெரிய தேர்கள் இருந்த இடமே தெரியவில்லை’ என்கிறார்கள் பந்தநல்லூர்   மக்கள். `புதிய தேர் செய்வதற்கு  அரசு நிதி  மற்றும் நன்கொடை எல்லாம் வந்திருக்கின்றன. அதில் முறைகேடுகள் நடந்ததா?' என்கிற ரீதியில் புகார்கள் கிளம்பி விசாரணையில்   இருப்பதாக   அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன’’ என நிறுத்தினார் நாரதர்.

நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!
நாரதர் உலா: பரிதாப நிலையில் கோட்டைக் கோயில்!

``பெருமாள் கோயில்..?’’

``ஆதிகேசவப்  பெருமாள் கோயில் பெரும்பாலும்  நடையே  திறப்பதில்லையாம். கோயிலுக்கு  என பட்டச்சார்யர் நியமிக்கப் பட வில்லை..  இதனால் பெருமாளுக்கு நித்திய பூஜையும் சரிவர நடப்பதில்லை. கோயிலுக்கு  வழங்கப்பட்டு வந்த மின்சார விநியோகம்  தடைப் பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. கோயிலுக்குள் இருந்த மரக் கதவும் இப்போது இல்லை, இதையெல்லாம் கோயில் நிர்வாகம்   கவனிக்காமல் இருப்பது   வேதனை   அளிப்பதாக   பந்தநல்லூர்   மக்கள்  புலம்புகிறார்கள்’’ என்றார்.

‘‘வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

‘‘இருக்கத்தான் செய்கிறது. சமீப காலமாக சிலைக்கடத்தல் பற்றிய விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சிலைகளின் பாதுகாப்பு கருதி, இந்தக் கோயிலின் சிலைகளோடு மற்ற கோயில்களின் சிலைகளையும் வைத்திருக்கிறார் கள். தற்போது பிராகாரத்தில் சுரங்கப்பாதை போன்ற பாழடைந்த இடத்தில் சிலை பாதுகாப்பு மையம் அமைத்து அங்கே சிலைகளை வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சிலைகள் பற்றிய முழுமையான விவரங்கள் இல்லை. ஏதேனும் சிலைகள் கணக்கில் குறைந்திருந்தால் கூட கண்டுபிடிப்பது சிரமம்தான். கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமான சிலைகள் இருந்ததாகவும் அவைகளில் சில காணாமல் போயிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள்’’ என்றார்.

‘‘யாரும் புகார் எதுவும் தரவில்லையா?’’ என்று கேட்டோம்.

‘‘இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள். சிலைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், பசுபதீஸ்வரர் கோயிலைச் சுற்றிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்பதும்தான் பந்தநல்லூர் மக்களின் விருப்பமாக உள்ளது’’ என்றார்.

‘‘இதுபற்றி கோயில் நிர்வாகத்திடமோ அல்லது அறநிலையத் துறையிலோ யாரிடமாவது விசாரித்தீரா?’’ என்று கேட்டோம்.

‘‘இனிமேல்தான் விசாரிக்கவேண்டும். விசாரித்துவிட்டு வந்து சொல்கிறேன்’’ என்ற நாரதர் நம்முடைய பதிலை எதிர்பார்க்காமல் அந்தர்தியானமாகிவிட்டார்.

படம் - க.சதீஸ்குமார்

செத்து மிதந்த மீன்கள்...

உலக பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமகக் குளம் மிகவும் புனிதம் வாய்ந்ததாகப் போற்றப்படும் தீர்த்தக்குளம் ஆகும். ஆனால், சமீபத்தில் நடந்த மகாமகத்தின்போது புதுப்பிக்கப்பட்ட குளம், இப்போது வற்றிப்போய்விட்டது. ஒரு மூலையில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே இருக்கிறது. குளத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால், குளத்துக்குள் இருந்த கழிவுகள் வெளியில் தெரியத் தொடங்கிவிட்டன. மீன்களும் செத்துக்கிடக்கின்றன. புனிதக் குளமான மகாமகக் குளம் இப்போது இருக்கும் அவலத்தைப் பார்த்து பக்தர்கள் பெருத்த வருத்தம் அடைந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் மகாமகத்தின்போது 90 லட்சம் ரூபாய் செலவில் குளம் புதுப்பிக்கப்பட்டது. குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் இருக்கவேண்டும் என்பதற்காக எந்த ஒரு நிரந்தர ஏற்பாட்டையும் நகராட்சி நிர்வாகமோ அறநிலையத்துறையோ செய்யவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் மகாமகக் குளத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism