
சென்னை தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது திருவேங்கடமங்கலம். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் பெருமாளுக்கு ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், ஊர்மக்கள் கோயிலுக்கு நிலம் ஒதுக்கியதுடன், திருப்பாற்கடல் என்ற பெயரில் ஒரு திருக்குளமும் ஏற்படுத்தினர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால், இறைவனின் திருவுள்ளம்... பெருமாளுக்கான கோயில் நிர்மாணிக்கும் பாக்கியம் தற்போதைய தலைமுறையினருக்குத்தான் வாய்த்தது. சமீபத்தில்தான் சம்ப்ரோக்ஷணம் நடை பெற்றிருக்கும் இந்த ஆலயத்தில், திருவேங்கடலட்சுமி பிராட்டியுடன் அருள் பாலிக்கிறார் திருவேங்கடநாத பெருமாள். ‘‘இனி, திருப்பதி செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் எங்களுக்கு இல்லை. இவரைத் தரிசித்தாலே போதும்; ஏழுமலையானைத் தரிசித்ததுபோல் மனம் நிறைந்துவிடுகிறது’’ என்று உருகுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.
அற்புதமான இந்த க்ஷேத்திரத்தில் கடந்த 4-ம் தேதி காலை ஸ்ரீஆஞ்சநேயர் விக்கிரகத்துக்கு பிராணபிரதிஷ்டை செய்யும் வைபவம் நடைபெற்றது. அந்த அற்புதக் காட்சிகள் இங்கே உங்களுக்காக...
- கண்ணன்
படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்