Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வி
க்னங்கள் தீர்க்கும் ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜையில், அகவல் பாராயணம் செய்து வழிபட விரும்புகிறேன். ஒளவையார் அருளிய 'விநாயகர் அகவல்’ விளக்க உரையுடன் புத்தகமாக வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்? விபரம் தெரிந்த அன்பர்கள் உதவுங்களேன்.

- காமாட்சி சத்தியநாராயணன், சென்னை-61

காஞ்சி மகாபெரியவரின் அருளுரை தொகுப்பான 'தெய்வத்தின் குரல்’ படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?

- எஸ்.திருமலை, மதுரை-7

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு அருகில் ஸ்ரீசடையப்ப சுவாமி திருக்கோயில் உள்ளதாமே? இந்தக் கோயில் எங்கு உள்ளது? எப்படிச் செல்வது? அறிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவினால், கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வழிபட பேருதவியாக இருக்கும்.

- டி.அண்ணாமலை, சென்னை-73

ன் தந்தை, தினமும் 'ஸ்ரீநாராயண சதகம்’ பாராயணம் செய்து வழிபடுவார். 'நவாமி நாராயண பாத பங்கஜம்...’ என்று தொடங்கும் அந்த ஸ்லோகத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன். அந்த ஸ்லோகங்கள் அடங்கிய சி.டி. உள்ளதா? எங்கு கிடைக்கும்?

- எஸ்.சந்திரசேகரன், ஈரோடு

ஸ்ரீரமண மகரிஷி சரணாகதி பாடல், ராமசாமி ஐயர் என்பவர் இயற்றியுள்ளதாக அறிந்தேன். அந்தப் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? அந்தப் பாடல், அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால்,  பிரதி எடுத்து அனுப்பி உதவுங்களேன்.

- வி.சியாமளா, மதுரை-10

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'திருவண்ணாமலை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமத்துக்குப் பொருளுதவி தர வேண்டும் என சில வருடங்களாக சேமித்து வைத்துள்ளதை எந்த முகவரிக்கு அனுப்புவது என்று தெரியவில்லை. இதுபோல், ஏற்கெனவே நிதியுதவி செய்த அன்பர்கள், சரியான முகவரியைத் தந்து உதவங்களேன்’ என்று, கடந்த 15.11.11 தேதியிட்ட இதழில், கோவை வாசகர் ஆர்.நடராஜன் கேட்டிருந்தார்.

பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள், ஆர்.முத்துக்குமாரசாமி, தலைவர், செயலாளர், சிறப்பாசிரியர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், செங்கம் சாலை, திருவண்ணாமலை-3 என்ற முகவரியிலும், 04175 - 236999, 238599, 236740 ஆகிய தொலைபேசி எண்களிலும், ஆஸ்ரமத்து அன்பர்களைத் தொடர்பு கொள்ளலாம் என சென்னை வாசகர் டி.ஏ.சகலகலாவல்லி, மதுரை ராமமூர்த்தி, ஜெயக்கொடி, பெங்களூரு கே.எஸ்.லலிதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

'எங்கள் குலதெய்வம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி. அந்த அம்மனுக்கான துதிப் பாடல்கள் தமிழில் புத்தகமாக வெளியாகி உள்ளதா?’ என்று, 1.11.11 இதழில் குறிஞ்சிப்பாடி வாசகர் ராமலிங்கம்  கேட்டிருந்தார்.

கோவை வாசகர் சி.கதிர்வேல் அனுப்பிவைத்துள்ள 'ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி வழிபாடு’ எனும் புத்தகத் தில், தோத்திரப்பாடல்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். வாசகர் ராமலிங்கத்துக்கு அந்த நூல் அனுப்பி வைக்கப்படுகிறது.

'ஸ்ரீதிரிபுரா ரஹஸ்யம் நூல் எங்கு கிடைக்கும் என்று கடந்த 15.11.11 தேதியிட்ட இதழில், சென்னை வாசகி பி.ஜே.ஹேமலதா கேட்டிருந்தார்.

சுவாமி ஸ்ரீரமணானந்த சரஸ்வதியின் மொழி பெயர்ப்பில் வெளியான ஸ்ரீதிரிபுரா ரஹஸ்யம் நூல், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமத்தில் உள்ள புத்தக நிலையத்தில் கிடைக்கும் என்று சென்னை வாசகி ராஜேஸ்வரி மதிநிறைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

னைமலை ஸ்ரீமாசாணியம்மனின் ஸ்லோகம் மற்றும் அஷ்டோத்திரப் பாடல்கள், அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால் பிரதியனுப்பி உதவும்படி, கடந்த 4.10.11 தேதியிட்ட இதழில் சென்னை வாசகி ந.உமா கேட்டிருந்தார்.

ஸ்ரீமாசாணி அம்மனின் ஸ்தல வரலாறு மற்றும் கவசப்பாடல்கள் அடங்கிய புத்தகம் மற்றும் 'மாசாணியே துணை’ என்ற சி.டி ஆகியவற்றில் ஸ்லோகம் மற்றும் அஷ்டோத்திரப் பாடல்கள் உள்ளன என்று தகவல் தெரிவித்துள்ளார் கோவை வாசகர் சி.கதிர்வேல். மேலும் அவர் அனுப்பியுள்ள புத்தகம் மற்றும் சி.டி.  வாசகி உமாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'கடந்த சில வருடங்களாக குடும்பத்தில் சில பிரச்னைகள்! இழந்த சந்தோஷம், நிம்மதி, வேலை ஆகியவற்றைப் பெறுவதற்கு வழிபாடுகள் ஏதேனும் உண்டா? ஸ்லோகங்கள், என்னென்ன?’ என்று பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர் கடந்த 15.11.11 இதழில்  கேட்டிருந்தார்.

ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எழுதி, ஜெய்ஸ்ரீ அகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ள புத்தகம் 'ராகு கால துர்கை வழிபாடு’. அதனைப் படித்து, வளர்பிறை தசமி தினத்தன்று வீட்டில் விளக்கேற்றி ஸ்ரீதுர்கையை வழிபடுங்கள். பின்னர், ஐந்து பேருக்கு போதுமான அளவில் பிரசாதம் செய்து, அருகில் உள்ள அம்மன் கோயிலில் நைவேத்தியம் செய்து வணங்கி, அவற்றை பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். இந்த வழிபாட்டினை தொடர்ந்து மேற்கொண்டால், அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விரைவில் மீளலாம் என்று கோவை வாசகர் சுகுமார் ராஜசுந்தரம் தெரிவித்துள்ளார். 'ஜெய் ஸ்ரீஅகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ், 20, டைமண்ட் ஜுபிளி கட்டிடம், மயிலம், திருச்சி-8’ மற்றும் 'ஸ்ரீலஸ்ரீ லோபமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், கிரிவல பாதை, திருவண்ணாமலை’ எனும் முகவரி யில் 'ராகு கால வழிபாடு’ புத்தகம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோலமிட்ட மணையின் முன்,  பட்டாபிஷேக ஸ்ரீராமரின் திருவுருவப் படத்தை வைத்து, சுந்தரகாண்டம் புத்தகத்தில் இருந்து தினம் ஏழு ஸர்க்கங்கள் வீதம் 68 நாட்கள், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். முடிவில் ஸ்ரீராம பட்டாபி ஷேக ஸர்க்கம் படித்து வழிபாட்டினை பூர்த்தி செய்து, அன்றைய தினம் குறைந்தது நாலு பேருக் கேனும் அன்னதானம் செய்தால், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என சென்னை வாசகர் டி.கே.தேவநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாகை வாசகி தாரிணி பிரபாகரன் 'விதியை வெல்வது எப்படி?’,  'சுந்தர காண்டம்’ ஆகிய புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். சென்னை வாசகி ராஜேஸ்வரி மதிநிறைச்செல்வன் 'நட்சத்திரத்துக்கு உரிய தெய்வ வழிபாடு’ குறிப்பு களைத் தந்துள்ளார். இவை, அந்த வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

திருமணத்தடை நீங்கிட கீழ்க்கண்ட திருப்புகழ் பாடலை பாராயணம் செய்திடலாம் என்று சென்னை வாசகர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நான் என்று மார்தட்டும் பெருமாளே.
விறல்மாரன் ஐந்து மலர்வொளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல ஒன்ற
வினைமாதர் தம்தம் வசைகூறக்
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில்தீர
குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த அதிதீரா
அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே.
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே.