Published:Updated:

சாமியே சரணம்..!

85 வயது குருசாமியின் சிலிர்ப்பான அனுபவங்கள்

டைவிடாத இறைச் சிந்தனையும் ஆன்மிக எண்ணங்களும் நிறைந்திருக்கும்போது, நம் ஆத்மாவானது இறையை உணரும்; புனிதம் பெறும் என்பது ஞானிகளின் வாக்கு. அப்படியரு சிந்தனையும் எண்ணங்களும் கொண்டவர், லட்சுமண குருசாமி.

##~##

''சில விஷயங்களை உணர்த்த முடியும். சிலதை உணரத்தான் முடியும். இறையுணர்வுங்கறது, நாம உணர வேண்டிய விஷயம். என் இந்த வாழ்க்கை, ஐயப்ப ஸ்வாமி போட்ட பிச்சை'' என உணர்வு பொங்கச் சொல்கிற லட்சுமண குருசாமிக்கு 85 வயது. சென்னை, பாடி - திருவலிதாயம் சிவாலயத்துக்கு அருகில் வசித்து வருகிறார். மந்திரவாஜி குருசாமி என்றால், சட்டென்று வழிகாட்டுகின்றனர் அந்தப் பகுதி மக்கள்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாமியே சரணம்..!

''ஆரம்பத்துல ஸ்ரீரங்கத்துலதான் இருந்தோம். கல்யாணமாகி  18 வருஷமா குழந்தை இல்லை எங்களுக்கு. இந்தக் கவலையைத்

தவிர, வேற எந்தக் கவலையையும் தந்துடலை, ஸ்ரீஐயப்பன்.இதுக்கு இடையிலேயே, என் மச்சினனோட சேர்ந்து நானும் சபரிமலைக்கு விரதம் இருந்தேன். அன்னிலேருந்து ஸ்ரீஐயப்ப ஸ்வாமிதான் என் கண்ட தெய்வம்னு வாழ ஆரம்பிச்சேன்.  

ஒருமுறை, ஐயப்ப பஜனைல மனம் உருகி, பாடிட்டிருந்தேன். அப்ப ஐயப்ப சாமி ஒருத்தர் எழுந்து, 'உனக்கு புத்திர பாக்கியம் சீக்கிரமே கிடைக்கும்’னு சொன்னார். ஆடிப்போயிட்டேன் நான். என் பேரு, எனக்குக் குழந்தை இல்லைன்னு எதுவுமே அவருக்குத் தெரியாது. அந்த சாமி என் பக்கத்துல வந்து, ஐயப்ப ஸ்வாமி விக்கிரகமும் அபிஷேகம் பண்ணின நெய்யும் கொடுத்து ஆசீர்வதிச்சது, நேத்திக்கி நடந்தது போல இருக்கு! அதன்படியே, எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு, பூரணபுஷ்கலானு பேரு வைச்சேன்'' என்று ஆனந்தக் கண்ணீர் பொங்கச் சொல்கிறார் குருசாமி.

''இப்படித்தான் ஒரு முறை... சபரிமலைல தரிசனத்துக் காக நின்னுக்கிட்டிருக்கும்போது, சடார்னு எங்கேருந்தோ வந்த ஒளி, என் தோள்பட்டை மேல விழுந்துச்சு. எல்லாரும் அசந்து, ஆச்சரியமா பாக்கறாங்க. 'ஸ்வாமியோட பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கு. சீக்கிரமே உங்க வீட்டுக்கு ஐயப்பன் வரப்போறான்’னு சொன் னாங்க. அப்ப எனக்கு ஒண்ணும் தெரியலை. ஆனா அடுத்த வருஷமே மகன் பிறந்தப்பதான் அதை உணர்ந்து, சிலிர்த்துப் போனேன். அவன் பேரு மணிகண்டன்'' என்று உணர்ச்சி மேலிடச் சொல்கிறார் லட்சுமண குருசாமி.

கடந்த 35 வருடங்களாக, இவரை குருசாமியாக ஏற்று, இவருடன் மலைக்குச் சென்ற அனுபவங்களைச் சொல்லத் துவங் கினார் ராஜகோபால் எனும் அன்பர்:  ''இந்தச் சம்பவம் நடந்து 20 வருஷம் இருக்கும். மலையில, ஒரு இடத்துல எங்க குழுவுல சில சாமிகள் சேர்ந்து சமையல் பண்ணிட்டிருந்தாங்க. மத்தியானம் 12 மணிக்கு நடை சார்த்தினப்புறம், ஆறு வயசு பையன் ஒருத்தன், எங்க குழுவினர்கிட்ட வந்து சாப்பாடு கேட்டானாம். 'இன்னும் ஐயப்ப ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யலியே’னு

சாமியே சரணம்..!

அவங்களுக்குத் தயக்கம். குருசுவாமி வந்து, பூஜை முடிஞ்சதும் தர்றதாச் சொல்லியிருக்காங்க. அந்தப் பையன் விடாப்பிடியா, 'உங்க குரு சுவாமிகிட்ட நான் சொல்லிக்கிறேன். நீங்க சாப்பாடு கொடுங்க’னு சொல்லி, இலையை எடுத்துப் போட்டு உக்கார்ந்துட்டானாம்.

நம்ம சாமிமார்களும் உணவு பரிமாற ஆரம்பிச்சுட்டாங்க. ''சாம்பார்ல கொஞ்சம் உப்பு போடுங்கோ. அப்பத்தான் குரு சுவாமி சாப்பிடுவார்’னு சொல்லி, சாப்பிட்டு முடிச்சிட்டுக் கிளம்பிட்டான்! 'நம்ம கையால பகவான் வந்து சாப்பிட்டுட்டுப் போயிட்டார்’னு குருசுவாமி சொன்னப்ப, நாங்க மெய்ம்மறந்து நின்னோம். இது கடவுளின் திருவருள் மட்டுமல்ல... எங்களோட  குருவின் அருளும்கூட...''  என்று பரவசத்துடன் சொல்கிறார் ராஜகோபால்.

லட்சுமண குருசாமியின் சிஷ்யர்கள் பலரும், தங்கள் வாழ்வில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கச் சொல்லி, அவரிடம் முறையிடுவதாகவும் அதையட்டி லட்சுமண குருசாமி ஸ்ரீஐயப்ப ஸ்வாமியுடன் ஒரு கோரிக்கை போல், பிரார்த்தனை போல் பேசி வேண்டுவதாகவும், அதில் அவர்களது பிரச்னைகள் யாவும் தீர்ந்துவிடும் என்றும் வியப்பு மேலிடச் சொல்கின்றனர், அன்பர்கள்!

ஐயப்ப பக்தரான மகாதேவன், ''ஐயப்ப மலைக்குப் போயிக்கிட்டிருந்த போது, மஞ்சள் மாதா கோயிலுக்குப் போனோம். அப்ப, 'சாமி, ஒரு தொட்டில் வாங்கி, இங்கே கட்டுங்க’னு சொன்னார் குருசுவாமி. அப்படியே செஞ்சேன். மலை இறங்கி, ஊர் திரும்பினா... கல்யாணமாகி பல வருஷமாகியும் குழந்தை பாக்கியம் இல்லாம கலங்கின என் மூத்த மகள், கர்ப்பமாயிருந்தா! அதேபோல, இளைய மகளுக்கு நல்ல வரன் கிடைக்கலியேங்கற கவலையோட இருந்தோம். ஒரு ஐயப்ப பஜனைல, 'உன் பொண்ணுக்காக நல்ல வரன் காத்துண்டிருக்கு.

சாமியே சரணம்..!

கவலைப்படாதே!’னு குருசுவாமி சொன்னார். மறுநாளே அருமையான வரன் தகைஞ்சுது. இதுல என்ன சுவாரஸ்யமான ஆச்சரியம்னா, மாப்பிள்ளை வீட்டார்ல பலபேர், வருஷம் தவறாம சபரிமலைக்குப் போயிக்கிட்டு

இருக்காங்கங்கறதுதான்!'' என்று குதூகலத்துடன் தெரிவித்தார்.

''எங்க குருசுவாமி எப்போதுமே, 'ஸ்ரீஐயப்ப ஸ்வாமியை கெட்டியாப் பிடிச்சுக்கோங்க. கவலையே இருக்காது’னு அடிக்கடி சொல்வார். எங்களுக்காக, எங்க பிரச்னைகள் தீரணுங்கறதுக்காக, ஸ்வாமிகிட்ட வேண்டிக்கற அந்த நேரத்துல, சில நெறிமுறைகளையும் வழிமுறைகளையும் சொல்வார் அவர்.  குருசுவாமியின் குரல் வழியா, அந்த ஐயன் ஐயப்பனே வந்து சொல்ற மாதிரி யான உணர்வுதான் எங்களுக்கு'' என்று சொல்லிப் பூரிக்கிறார் தபால்துறையில் பணிபுரியும் வெங்கட்ராமன்.  

''என்னை வழிநடத்தறது ஸ்ரீமணிகண்ட சாஸ்தாதான்! என்னைக் கருவியா

வைச்சுக்கிட்டு, அவனோட பக்தர்களுக்கு என்ன செய்யணுமோ அதையெல் லாம் செய்றான்னுதான் என் உள்ளுணர்வு சொல்லுது. மத்தபடி, அந்த சபரி மலை சாஸ்தாவின் அடிமை நான்!'' என்று சொல்லி, கண்கள் மூடி... சரண கோஷம் எழுப்புகிறார் லட்சுமண குருசாமி.  

குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பார்கள். நல்ல குரு கிடைத்தால்தான், இறைவனை அடைய முடியும் என்றும் சொல்வார்கள்! இந்த இரண்டுக்கும் உதாரணமாகத் திகழ்கிறார் லட்சுமண குருசாமி.

- இரா.மங்கையர்கரசி
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

சாமியே சரணம்..!

'இது, இங்கேயே, இப்போதே...’ எனும் தலைப்பில், ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மாணவர், ஸ்ரீசாந்தாத்மானந்தா சுவாமிகளின் சொற்பொழிவு, சென்னையில்  நடைபெற்றது.

'எவரொருவர் தன்னைப் புரிந்து கொள்கிறாரோ, அவரின் மனம் சுத்தமாகிறது. அந்த சுத்தமான மனதைத் தேடி இறைவனே வந்துவிடுகிறான். நாம் எதுவாக ஆகவேண்டும் என விரும்புகிறோமோ, அதுவாகத்தான் ஆவோம். சத்தியமாகவும் சத்தியத்தின்படியும் நடந்தால், நாம் வேறு கடவுள் வேறு அல்ல எனும் நிலையை உணரலாம்’ என்றார் ஸ்ரீசாந்தாத்மானந்தா. ஆறு நாட்கள் நடந்த சொற்பொழிவில், ஆன்மிகச் சான்றோர்கள் பலர், நிகழ்த்திய அருளுரைகளில் சில துளிகள்... ஆங்காங்கே!