சக்தி விகடனும் உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து நடத்தும் மனவளக்கலை இலவச யோகா பயிற்சி முகாம், கடந்த 13.11.11 அன்று சேலம் சீலநாயக்கன்பட்டி அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்றது. ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் வாசகர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

''அடிக்கடி தலைவலியால அவதிப்படுறவன் நான். நண்பர் ஒருத்தர் மனவளக்கலைப் பயிற்சி பத்திச் சொன்னார். நானும் என் மனைவியுமா இங்கே வந்து கலந்துக்கிட்டோம். மனசுக்கும் உடலுக்கும் புதுத்தெம்பு கிடைச்சது போல இருக்கு'' என்று உற்சாகத்துடன் தெரிவித்தார் வாசகர் ரவி.

''சக்தி விகடன்ல வர்ற 'வாழ்க வளமுடன்’ தொடரைப் படிச்சுக்கிட்டிருக்கேன். அதுல முகாம் நடந்த விவரங்களைப் படிக்கப் படிக்க... எனக்கும் முகாமுக்கு வரணும்னு தோணுச்சு'' என்கிறார் வாசகர் தனபால்.

''இந்தப் பயிற்சியை மாணவர்கள் எடுத்துக்கிட்டா, அடுத்த தலைமுறை ஆரோக்கியமாவும் தெளிவாவும் இருக்கும்'' என்று ரிடையர்டு தலைமையாசிரியர் தியாகராஜன், 'பொன்னையும் பொருளையும் எப்ப வேணா சம்பாதிக்கலாம். மன அமைதி யையும் உடல் தெம்பையும் இப்ப சம்பாதிச்சாதான்

உண்டு. அதுக்கு இந்தப் பயிற்சி ரொம்பவே உதவுது'' என்று வாசகி சத்தியப்ரியா, 'இந்தப் பயிற்சியை எங்களுக்கு அடையாளம் காட்டியதோட மட்டுமில்லாம, அந்தப் பயிற்சியையும் இலவசமா கொடுத்த சக்தி விகடனுக்கு நன்றிகள்'' என்று வாசகர்கள் சரவணன், ரம்யா, மதியழகன், லாவண்யா முதலான வாசகர்கள் தெரிவித்தனர்.

- மு.கார்த்திகேயன்

படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்