Published:Updated:

'ஐயப்பனும் சேவையும் இரண்டு கண்கள்!'

சாமியே சரணம்!-பூரிப்புடன் சொல்கிறார் குருசாமி

'சபரிமலைக்குச் செல்வது வெறும் யாத்திரை அல்ல.... அதுவொரு தியானம்; மிகப்பெரிய தவம். அப்படியான நினைப்போடதான், இந்த 52 வருஷமா சபரிமலைக்குப் போயிக்கிட்டிருக்கேன்'' என்று சொல்கிறார் சிவராமகிருஷ்ண குருசாமி. இவருக்கு வயது 86.

'ஐயப்பனும் சேவையும் இரண்டு கண்கள்!'

சென்னை-திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் அவரைச் சந்தித்த போது, வார்த்தைக்கு வார்த்தை... ஸ்ரீஐயப்ப மகிமையைச் சொல்லிச் சிலிர்த்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''59-ஆம் வருஷம். சிந்தாதிரிப்பேட்டை ஈஸ்வர ஐயர்தான் எனக்கு குருசாமி. அவர்தான், சபரிமலைக்கு என்னைக் கூட்டிட்டுப் போனார். அவரோட வழிகாட்டுதலும், பஜனைப் பாடல்களும், காட்டுலயும்

மேட்டுலயுமா நடந்த யாத்திரை அனுபவங்களும் எனக்குள்ளே ஒரு நிறைவைக் கொடுத்துச்சு. 18 படிகளைக் கடந்து, ஸ்ரீஐயப்ப ஸ்வாமியோட சந்நிதானத்துக்குப் போனப்ப உள்ளே, ஏதோவொரு பரிபூரண நிலை. அன்னிக்கே, இனி

வருஷாவருஷம் சபரிமலைக்குப் போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்'' என்றவர், 72-ஆம் வருடம் முதல், குருசாமியாக இருந்து, ஐயப்ப பக்தர்கள் பலரையும் அழைத்துச் செல்கிறார்.

##~##

''அந்தக் காலத்துல, பெரிய பாதை வழியாபோய், ஸ்வாமி தரிசனம் பண்றவங்கதான் அதிகம். இன்னிவரைக்

கும், பெரியபாதை வழியாத்தான் நாங்க மலையேறிக் கிட்டிருக்கோம். இங்கே, இருமுடி கட்டிக்கிட்டுக் கிளம் பினதும், வழியில் இருக்கற தமிழகக் கோயில்களையும் கேரள ஆலயங்களையும் தரிசனம் பண்ணிட்டே போவோம். கேரளாவுல வைக்கம் தெரியுமா? அங்கே, கம்பங்குடி குடும்பத்தாரைச் சேர்ந்த நாராயண ஐயர் நடத்துற கணபதி ஹோமம், பிரமாண்டமா நடக்கும். அதுல கலந்துக்கிட்டு, அப்படியே எரிமேலிக்குப் போயிருவோம். மனசெல்லாம் பக்தியும் உடம்பெல்லாம் ஒருவித தெம்புமா பரவிக்கிடக்கற சுகமே அலாதியானது!'' என்று பூரிப் புடன் தெரிவிக்கிறார் சிவராமகிருஷ்ண குருசாமி.  

''ஸ்ரீராமன் தர்ப்பணம் செய்த பம்பா நதியும், அந்தப் பதினெட்டாம்படியும் பார்க்கப் பார்க்க, நம்ம பாவமெல்லாம்

பறந்தோடிட்ட மாதிரி ஒரு உணர்வு வரும். அதை அனுபவிச்சாத்தான் உணர

'ஐயப்பனும் சேவையும் இரண்டு கண்கள்!'

முடியும். அதேபோல, மகரஜோதியை தரிசனம் பண்றதும், மகா புண்ணியம்'' என்கிற குருசாமி, மகரஜோதி முடிந்த மறுநாள், தன்னுடன் வரவிரும்பிய அன்பர்களை அழைத்துக்கொண்டு, பொன்னம்பல மேட்டுக்குச் சென்றாராம்.

''ஆபத்தான மலைப்பாதை அது. சரணகோஷம் சொல்லிக்கிட்டே, ஒரு ஆள் உசரத்துக்கு வளர்ந்திருந்த முட்க ளையும் புற்களையும் விலக்கினபடி, முன்னேறினோம். அங்கே, மலை உச்சியில, பாறைல செதுக்கியிருந்த ஸ்ரீசக்கரத்துக்கு பூஜைகள் செஞ்சுட்டுத் திரும்பினோம். காட்டு விலங்குகள் அதிகம் இருக்கற இடத்துல, ஒரு பிரச்னையும் இல்லாம, ஸ்ரீசக்ர பூஜை நடத்தினதுக்கு ஐயப்பனோட அருளே காரணம்!'' என விவரிக்கிற குருசாமி, இதுவரை ஐந்து முறை, அங்கே ஸ்ரீசக்ர பூஜை செய்துள்ளாராம்.    

''ஒருமுறை, இருமுடி கட்டிக்கொண்டு கிளம்பி, வழியில் ஸ்ரீரங்கம் சென்று பெருமாளைத் தரிசிச்சோம். முன்னதாக, அம்மா மண்டபத்தில் குளிக்கச் சென்றபோது, எங்களோடு வந்த இளம் வயது சாமி ஒருத்தர், காவிரி ஆத்துல மாட்டிக்கிட்டார். அப்ப திடீர்னு ஒரு பையன் வந்து, அந்த சாமியைக் காப்பாத்தி, கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தான். அந்த சாமியை ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைச்சிட்டு, அந்தப் பையனுக்கு நன்றி சொல்லத் திரும்பினா... அவனைக் காணோம். அது, ஐயன் ஐயப்ப ஸ்வாமியைத் தவிர வேறு யாரா இருக்க முடியும்?!'' என வியப்பும் பெருமிதமும் பொங்கச் சொல்கிறார் குருசாமி.

''2009-ஆம் வருஷத்துலேருந்து, பம்பா நதிக்கரையில அன்ன தானம் பண்ணிட்டு வரோம். முதல் வருஷம் நெய்ப்பொங்கலும்

சர்க்கரைப் பொங்கலும் பண்ணித் தந்துக்கிட்டிருக்கும்போது, அழகா, சிவப்பா ஒரு பையன் வந்து, 'எனக்குக் கொடுங்க’ன்னு கேட்டான். சாப்பிட்டு முடிச்சுட்டு, 'ரொம்ப நல்லா இருக்கு. வயிறே நிறைஞ்சிருச்சு’ன்னு சொல்லிட்டுப் போனான். அவனோட வந்தவங்களையும் கூப்பிடலாமேனு அவன் பின்னாடியே போனார்.

'ஐயப்பனும் சேவையும் இரண்டு கண்கள்!'

எங்க குழுவுல இருந்த சாமி ஒருத்தர். ஒருகட்டத்துல சட்டுன்னு மறைஞ்சு போயிட்டான் அந்தப் பையன். அன்னிலேருந்து வருஷா வருஷம், சிறப்பா அன்னதானம் பண்ணிட்டிருக்கோம்'' என்று சிலிர்ப்பு மாறாமல் தெரிவிக்கிறார் குருசாமி.

அதுமட்டுமா? இவரின் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் ஒன்று சேர்ந்து, ஏழை பெண்களின் திருமணத்துக்கு திருமாங்கல்யம் மற்றும் புடவை, ஏழை பிராமணக் குழந்தைகளுக்கு உபநயனம்,

தீபாவளி நாளில் ஆதரவற்றோர் இல்லங்களில் அனைவருக்கும் உணவு... எனச் சேவைகளும் செய்து வருகின்றனர். இதில் நெகிழ்ந்த மகாபெரியவா, 'தர்மகைங்கர்ய மணி’ எனும் பட்டத்தை சிவராமகிருஷ்ண குருசாமிக்கு அளித்து பெருமைப்படுத்தி யுள்ளார். ''இந்தச் சேவைகளும் சபரிகிரிவாசனை தரிசிப்பதும் எனக்கு வேறுவேறல்ல'' என்று சொல்கிறார் குருசாமி.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது எத்தனை சத்தியமான வார்த்தைகள்!  

- இரா.மங்கையர்கரசி, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்