Published:Updated:

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

யிலாடுதுறைக்கு அருகில் உள்ள வள்ளலார் கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீவதான்யேஸ்வரர் கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜை, கடந்த 22.11.11 அன்று விமரிசையாக நடந்தேறியது. சக்தி விகடனின் 74-வது திருவிளக்கு பூஜை இது.

''எங்க அண்ணனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்னு இதோ... ஞானாம்பிகைகிட்டதான் வேண்டிக்கிட்டேன். அப்படியே எங்க கோரிக்கையை நிறைவேத்திக் கொடுத்துட்டா. அதுக்கு நன்றி சொல்றதுக்குத்தான் பூஜைல கலந்துக்கிட்டேன்'' என்று உற்சாகத்துடன் தெரிவித்தார் மாணவி ராஜலட்சுமி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சொத்துல இருந்த பிரச்னையெல்லாம் முடிஞ்சு, இப்பதான் அக்கடான்னு இருக்கோம். இந்த நிம்மதியைத் தொடர்ந்து கொடும்மா தாயேனுதான், விளக்கு பூஜைல கலந்துக்கிட்டேன்'' என்று நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்தார் வாசகி ரேவதி.

''எங்க பொண்ணு பத்தாவது படிக்கிறா. அவ நல்லாப் படிக்கணும்; நிறைய மார்க் எடுக்கணும். அதுக்குத்தான், அவ்ளோ தொலைவிலேருந்து ஓடி வந்திருக்கேன்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் விழுப்புரம் வாசகி சரஸ்வதி.

ஞானமும் செல்வமும் அருள்கிற அம்பிகை, எப்போதும் துணை நிற்பாள்!

                    - மா.நந்தினி

படங்கள்: இ.ராஜவிபீஷிகா